நீதான் நீயேதான் !!

                                    

                                   விடியலை பனிமூட்டங்களின் நடுவே
                                   தேட வேண்டியதாய் இருக்கிறது 
                                   விடியலாய் நீ !
                                   பனிமூட்டங்கலாய்   என் நேசம் !!


                                  கர்வம் செதுக்கிய சிலை நீ
                                  வானவில் வரைந்த ஓவியம் நீ
                                  விழிகள் பேசும் மொழி நீ 
                                  மூங்கிலுக்குள் நுழையும் காற்று நீ
                                  அதில் வெளி வரும் இசையும் நீ
                                  பூமி நனைக்கும் மழை நீ
                                  அதில் எழும் மண் வாசம் நீ
                                  மலையில் பெருக்கெடுத்தோடும் ஆறாய் 
                                  பொங்கி வழியும் அருவியாய்
                                  அது சென்று சேரும் கடலாய்
                                  என்னிடம் வந்து சேர்ந்த உன்னை 
                                  நீயே தேடினாலும் காணமாட்டாய் !!

                                  
                                  தேவதைகள் பொய் சொல்கிறது
                                  உன்னை விட அவை அழகாம் !
                                  மிகுந்த கோபம் தேவதைகளின் மேல்
                                  உன் அழகை குறை சொன்னதிற்காக அல்ல
                                  உன்னை ரசித்ததிற்காக !!



23 comments:

கோர்வையான வரிகளால் கோர்த்த கவிதை...

//கர்வம் செதுக்கிய சிலை நீ
வானவில் வரைந்த ஓவியம் நீ
விழிகள் பேசும் மொழி நீ
மூங்கிலுக்குள் நுழையும் காற்று நீ
அதில் வெளி வரும் இசையும் நீ
பூமி நனைக்கும் மழை நீ
அதில் எழும் மண் வாசம் நீ//

வரிகள் ஈர்க்கிறது அக்கா...

தமிழில் வலைப்பூ
தலைப்பு நன்று....

இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்...

 

கவிதை முழுவதும் அழகாய் இருந்தாலும்
என்னைக் கவர்ந்த நச் வரி..

//கர்வம் செதுக்கிய சிலை நீ//

என்னமா யோசிக்கிறீங்க..

 

கவிதை அருமையாக இருக்கு (யாராவது template comments சொல்லுவாங்களோ ??)

 

கவிதை நதியாகிறது... பாராட்டுக்கள்,

உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

 

என்னிடம் வந்து சேர்ந்த உன்னை நீயே தேடினாலும் காணமாட்டாய் !!

உண்மைதான் சகோ காதல் வந்துவிட்டால் அவன் எங்கு கிடைப்பான் நினைவெல்லாம் அவளாக நீந்துகின்ற நீரோடையாய் அவன் மனம் ஆத்மா அவளிடம் சென்ருவிடுகிறதே அவன் உருவில் இருப்பதோ வெறும் கூடு தான் சகோ ............

 

//தேவதைகள் பொய் சொல்கிறது
உன்னை விட அவை அழகாம் !
மிகுந்த கோபம் தேவதைகளின் மேல்
உன் அழகை குறை சொன்னதிற்காக அல்ல
உன்னை ரசித்ததிற்காக !!//

பாரடா!

//மூங்கிலுக்குள் நுழையும் காற்று நீ
அதில் வெளி வரும் இசையும் நீ//

இசைந்த வரிகள்!

 

அழகிய கருத்துள்ள கவிதை வாழ்த்துக்கள்

 

//உன் அழகை குறை சொன்னதிற்காக அல்ல உன்னை ரசித்ததிற்காக //

வாவ்... அருமையான கவிதை.. இனி தொடர்ந்துவருவேன்..

 

அருமை கௌசல்யா.. உங்களை லேடீஸ் ஸ்பெஷல் இந்த மாத ப்லாகருக்காக தேர்ந்தெடுத்துள்ளேன்.. உங்கள் ஜி மெயிலை பாருங்கள். படைப்புக்களை விரைவில் அனுப்புங்கள்.. வாழ்த்துக்கள்..

 

/ தேவதைகள் பொய் சொல்கிறது
உன்னை விட அவை அழகாம் !
மிகுந்த கோபம் தேவதைகளின் மேல்
உன் அழகை குறை சொன்னதிற்காக அல்ல
உன்னை ரசித்ததிற்காக !! /

ரொம்ப possessive போங்க நீங்க...

Oru chinna suggestion : comments color, padikka koncham siramma irukku..

 

கௌசி...உங்களுக்கே அநியாயமா தெரில.அழகை ரசிக்கக்கூடத் தடையா!

 

@@ வினோ கூறியது...


//Oru chinna suggestion : comments color, padikka koncham siramma irukku..//

உங்க ஆலோசனைக்கு நன்றி வினோ. இப்ப சரி பண்ணிட்டேன்.

 

very nice poem ma'am u rocks

 

நல்ல கவிதை சகோதரி,,,

 

கருத்துள்ள கவிதை .... கெளசல்யா..
பொங்கல் வாழ்த்துக்கள்

 

nice...


HAPPY PONGAL!

 

கர்வம் செதுக்கிய சிலை நீ - அருமையான வார்த்தை பிரயோகம்...

 

எந்த வரிகளை குறிப்பிடுவது என்று தெரியவில்லை.. எல்லா வரிகளும் அவ்வளவு ரசனையோடு எழுதப்பட்டிருக்கின்றன.. மிகவும் ரசித்தேன்.. குறிப்பாக..

//கர்வம் செதுக்கிய சிலை நீ//
//விழிகள் பேசும் மொழி நீ//
//மூங்கிலுக்குள் நுழையும் காற்று நீ
அதில் வெளி வரும் இசையும் நீ
பூமி நனைக்கும் மழை நீ
அதில் எழும் மண் வாசம் நீ//

எல்லாவற்றையும் விட கடைசி இரண்டு வரிகள் ரொம்பவே அசத்தல்.. :)

//உன் அழகை குறை சொன்னதிற்காக அல்ல
உன்னை ரசித்ததிற்காக !!//

ரொம்ப நல்லா இருக்கு கௌசல்யா.. :)

 

வாவ்.. எவ்ளோ அழகா சொல்லிட்டீங்க......கம்பீர அழகை...!
நல்லா இருக்குங்க.. :-))

ஹாய் கௌசல்யா, உங்க தொடர்பதிவு..அழைப்பை எழுதிட்டேங்க.. :-)

http://anbudanananthi.blogspot.com/2011/01/blog-post_14.html

நேரம் கிடைக்கும் பொது பாருங்க.. மீண்டும் நன்றி.. :-)

 

கவிதையல்ல இன்னுமொரு தீராத காதல். வாழ்த்துக்கள் kousalya.

 

" மண் வாசம் நீ "

C L A S S

விஜய்

 

நல்ல வரிகள்...

இனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..