பொங்கலோ பொங்கல்...!

                    


                    வாசலில் பல வண்ண கோலமாம் 

                    நடுவில் பூசணி பூ அலங்காரமாம்  
                    மாவிலை தோரணமாம்
                    மஞ்சள் கிழங்கு அழகியும்
                    கருப்பு கட்டழகன் கரும்பும்
                    அருகருகே அமர்ந்திருக்க !
                    
                    மண் அடுப்பில் வட்ட புது பானை 
                    அதன் உள்ளே பச்சரிசி காதலியும் 
                    மஞ்சள் நிறத்தான் வெல்ல காதலனும்
                    குதூகல கும்மாளம் அடிக்க
                    மெல்ல ஏலக்காயும் எட்டிபார்த்து
                    உற்சாகமாய் உள்ளே குதிக்க !
                    
                    நெய்யுடன் முந்திரி பருப்பும்
                    விருப்பமாய் ஒன்று கலக்க 
                    எல்லாம் சேர்ந்த பெருமிதத்தில்  
                    ஆனந்த பொங்கலாம் பொங்க
                    சுற்றி  நின்ற பாசக்கார உறவு கூட்டம் 
                    ஆர்ப்பரித்து குலவை இட !
                    
                    சிறுசுகள் "பொங்கலோ பொங்கல் "
                    கோஷமிட, கதிரவன் இந்த சத்தம் 
                    கேட்டு வேகமாய் மேலெழும்ப  
                    அதை பார்த்த மகிழ்ச்சியில் 
                    எங்கள் கூச்சல் இன்னும் அதிகரிக்க
                    இதோ என் சொந்த மண்ணில் 
                    சொந்தங்களுடன் அட்டகாசமாய் 
                    நிறைவான மனதுடன் 
                    பொங்கல் கொண்டாட்டம் !!
"இந்த நாளில் தூரமான உறவுகளுடன் 
               அன்பால் 'தை'த்து பின்னி பிணைந்து 
  கலந்து இருக்கவேண்டும் என்று தான் 
                                        நம் முன்னோர்கள் 'தை' என்று பெயரிட்டனரோ !?" எல்லா வளங்களும் எல்லா இன்பங்களும் என் தமிழ் மக்களுக்கு இந்த தை திருநாளில் வந்து சேர வேண்டும் என்று மிகுந்த அன்புடன் இறைவனை வேண்டி  வாழ்த்துகிறேன்.


15 comments:

// மஞ்சள் கிழங்கு அழகியும். கருப்பு கட்டழகன் கரும்பும் அருகருகே அமர்ந்திருக்க !////இந்த நாளில் தூரமான உறவுகளுடன் அன்பால் 'தை'த்து பின்னி பிணைந்து கலந்து இருக்கவேண்டும் என்று தான் நம் முன்னோர்கள் 'தை' என்று பெயரிட்டனரோ !?" //

இந்த வரிகள் அருமை

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

 

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

 

அருமையான கவிதை..

நாளை தான் பொங்கல் இங்கே.. இன்றே அந்த ஆர்வம்ம் வர வச்சிட்டீங்க...

இருக்கலாம்.. உறவுகளுடன்.. எண்ணத்திலாவது தைத்து இருக்கவே...
தைப்பொங்கல் என்று வந்திருக்கும்...

உங்களுக்கும் வாழ்த்துக்கள்..:-))

 

அருமையான கவி சகோ

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 

happy pongal wishes sis,,

 

அருமை.இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

 

இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!!

 

"இந்த நாளில் தூரமான உறவுகளுடன்
அன்பால் 'தை'த்து பின்னி பிணைந்து
கலந்து இருக்கவேண்டும் என்று தான்
நம் முன்னோர்கள் 'தை' என்று பெயரிட்டனரோ !?"

இருக்கலாம் சகோதரி! நன்றாகவே யோசிக்கிறீர்கள்! கவிவரிகள் கூட நன்றாகவே இருக்கின்றன!

 

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

 

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

 

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

 

அருமை.இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

’வாசல்”பொங்கல் மிக அழகா செய்திருக்கிங்க.... பாராட்டுக்கள்.