பிரிவேது இனி...!


                      
                      உலகம் சொல்கிறது 
                      நாம் பிரிந்திருக்கிறோம் என்று !!?

                      உன் நினைவுகளின் தாலாட்டில் 
                      நிம்மதியாய் உறங்குகிறேன் !
                      உறக்கம் கலைக்காமல் 
                      கனவில் வந்து செல்கிறாய் !

                      உன்னை ரசித்து மெல்ல 
                      என்னையும் பருகச் செய்கிறாய் !
                      கை பிடித்து அமர்ந்தே 
                      கதைகள் பல பேசி பாடம் கற்று தருகிறாய் !

                      உன் கொஞ்சு மொழியால் 
                      சொக்கி கிடக்கும் என் தலை கோதி 
                      விடிந்துவிட்டது என்கிறாய் !
                      கண்ணுக்குள் நீ 
                      இமை திறக்க மனமின்றி நான் ! 

                      விழித்தாலும் கண் முன் நான் தானே 
                      மர்மமாய் புன்னகைக்கிறாய் !
                      தூரத்தில் இருந்தும்  நினைவால் தீண்டி 
                      வாழ வைக்கிறாய் என்னை !!

                      இன்னும் அதிகமாய் 
                      இன்னும் ஆர்வமாய் 
                      இன்னும் பிடிவாதமாய் 
                      உன்னை காதலிக்கிறேன் நானடா ! 

                       மரித்த பின்னும் 
                       உயிர்ப்பித்து இருப்பேன் 
                       அன்பே
                       உன் நினைவுகளால் !!

31 comments:

கவிதை நன்றாக உள்ளது! ஆனால் எனக்கு இந்த காதல் மீது அவ்வளவு நம்பிக்கை கிடையாது! இப்படி சீரியஸாக லவ் பண்ணத்தான் வேண்டுமா? ( இது எனது தனிப்பட்ட கருத்து ) உங்கள் கவிதைக்கு நன்றி சோதரி!!

 

எங்கே திரும்பினாலும் காதல் கவிதையா.??? இருந்தாலும் வரிகள் அமைத்த விதம் ஜூப்பர்...

 

உறங்கும் தேவதை... படம் அழகு...

//உன் நினைவுகளின் தாலாட்டில்
நிம்மதியாய் உறங்குகிறேன் !
உறக்கம் கலைக்காமல்
கனவில் வந்து செல்கிறாய் !//

அழகான வரிகள் அக்கா...
காதல் கவிதைகள் உங்களுக்கு கை வந்த கலையாயிற்றே.... இதுவும் வழமை போல் நன்று அக்கா...

 

அழகு.. வரிகளும், வரையபட்ட ஓவியமும்..

 

கவிதை நன்றாக உள்ளது.

 

@கௌசல்யா

//விழித்தாலும் கண் முன் நான் தானே //

கண் முன் நீ தானே வரனுமா இல்லை நான் தனே சரியா? :)

 

@கௌசல்யா

//இன்னும் அதிகமாய்
இன்னும் ஆர்வமாய்
இன்னும் பிடிவாதமாய்
உன்னை காதலிக்கிறேன் நானடா ! //

இந்த வரிகள் கவிதைல ஒட்டவில்லை. வலுக்கட்டாயம புகுத்தின மாதிரி இருக்கு. மத்தபடி கவிதை நல்லா இருக்கு. :)

 

////இன்னும் அதிகமாய்
இன்னும் ஆர்வமாய்
இன்னும் பிடிவாதமாய்
உன்னை காதலிக்கிறேன் நானடா ! //

இந்த வரிகள் கவிதைல ஒட்டவில்லை. வலுக்கட்டாயம புகுத்தின மாதிரி இருக்கு. மத்தபடி கவிதை நல்லா இருக்கு. :)//

பாருடா இந்த பய கவிதை எல்லாம் படிச்சி விமர்சனம் பண்ணுது ..........என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது ........ஒண்ணுமே புரியலை ஒலகத்திலே ....

 

கவிதை நன்றாக உள்ளது

 

இது குழந்தை பாடும் தாலாட்டு..
மேற்கில் தோன்றும் உதயம்..
காதல் இல்லாத கவிதை..
எல்லாமே உருவகம் தான்!

 

அருமையான கவிதை கெளசல்யா..

 

காதல் நெஞ்சு பிழிஞ்சு கவிதை எழுதியது யார் கெளசல்யா.
அவருக்கு வாழ்த்துக்கள்

 

பாராட்டப் பட வேண்டிய கவிதை சகோ. உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள்.

 

பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html

 

மிக நல்ல வரிகள்.. என்னுடைய கல்லூரி காதலின் இளவேனிற்காலத்தை நினைவுபடுத்துகிறது உங்கள் வரிகள்... இதே போல யாதவனும் எழுதுகிறார்... உங்களுக்கும் காதல் அனுபவம் உண்டோ?

 

//மரித்த பின்னும்
உயிர்ப்பித்து இருப்பேன்
அன்பே உன் நினைவுகளால் !!//

அழகான வரிகள் கௌசல்யா

 

மிக நல்ல வரிகள்.

 

//தூரத்தில் இருந்தும் நினைவால் தீண்டி வாழ வைக்கிறாய் என்னை !! //

...நல்லா இருக்குங்க.. :-))

 

மாத்தி யோசி கூறியது...

//ஆனால் எனக்கு இந்த காதல் மீது அவ்வளவு நம்பிக்கை கிடையாது! இப்படி சீரியஸாக லவ் பண்ணத்தான் வேண்டுமா? //

சகோ காதல் என்ற ஒரு உணர்வு இங்கே கவிதைகளாக வருகிறது. காதலை பற்றிய ஒவ்வொருத்தரின் பார்வைகளும் வேற வேற...!

கருத்திற்கு நன்றி.

 

@@ தம்பி கூர்மதியன் கூறியது...

//எங்கே திரும்பினாலும் காதல் கவிதையா.???//

ஏன் அப்படிப்பட்ட இடமா பார்த்து போறீங்கன்னு நினைக்கிறேன் :)))

நன்றி

 

@@ கவிநா...

உன் அழகான ரசனை நான் அறிந்தது தான்...

:))

 

@@ வெறும்பய கூறியது...

//அழகு.. வரிகளும், வரையபட்ட ஓவியமும்.//

ஓவியம் உதவி கூகுள் :))

நன்றி ஜெயந்த்.@@ ஆயிஷா...

நன்றி தோழி.

 

@@ TERROR-PANDIYAN(VAS) கூறியது...

//கண் முன் நீ தானே வரனுமா இல்லை நான் தனே சரியா? ://

இந்த வரிகள் அவர் சொல்வதாக எழுதி இருந்தேன்... :))

//இந்த வரிகள் கவிதைல ஒட்டவில்லை. வலுக்கட்டாயம புகுத்தின மாதிரி இருக்கு.//

சரியா கண்டு பிடிசிடீங்க. முதலில் இந்த வரிகளை இணைக்கவில்லை, போஸ்ட் போடப்போகும் கடைசி நேரம் தான் இணைத்தேன்.

ஆமாம் எப்படி இந்த அளவிற்கு ???!!!

:))

 

@@ இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//பாருடா இந்த பய கவிதை எல்லாம் படிச்சி விமர்சனம் பண்ணுது ..........என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது ........ஒண்ணுமே புரியலை ஒலகத்திலே ....//

அதுதான் எனக்கும் புரியல பாபு. :))

 

S Maharajan...

நன்றி நண்பரே.


@@ ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி கூறியது...

//இது குழந்தை பாடும் தாலாட்டு..
மேற்கில் தோன்றும் உதயம்..
காதல் இல்லாத கவிதை..
எல்லாமே உருவகம் தான்!//

ம்...சரிதான்...உங்களை (வாசல்) இங்கே எதிர்பார்க்கவில்லை...

வருகைக்கு மகிழ்கிறேன்.

நன்றி.

 

@@ தோழி பிரஷா...

நன்றி தோழி.@@ யாதவன் கூறியது...

//காதல் நெஞ்சு பிழிஞ்சு கவிதை எழுதியது யார் கெளசல்யா.
அவருக்கு வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்களை சொல்லியாச்சு சகோ. நன்றி.


@@ திகில் பாண்டி...

வருகைக்கு நன்றி.@@ Philosophy Prabhakaran...

அழைப்பிற்கு நன்றி பிரபாகர்.

 

@@ Sathishkumar கூறியது...

// என்னுடைய கல்லூரி காதலின் இளவேனிற்காலத்தை நினைவுபடுத்துகிறது உங்கள் வரிகள்... இதே போல யாதவனும் எழுதுகிறார்... உங்களுக்கும் காதல் அனுபவம் உண்டோ?//

எல்லோருக்கும் இருப்பது இயல்பு தானே சதீஷ்... நான் மட்டும் விதிவிலக்கா ?!
:)))

 

@@ Harini Nathan...

நன்றி ஹரிணி.


சே.குமார்...


நன்றி குமார்

 

Ananthi (அன்புடன் ஆனந்தி)...


நன்றி தோழி.

 

அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

 

அழகான
எளிமையான
காதல்
கவிதைக்கு
நன்றி...