மனது...!


                                              
                                              
                                              நீ உதிர்க்கும் வார்த்தைகளை
                                              பொத்தி பாதுகாத்து...
                                              தனிமையில்
                                              அதன் வெளிபூச்சு கலைத்து
                                              என் மனதுடன் 
                                              பொருத்துகின்றேன் !
                                              
                                              பொருந்திப் போகிறது
                                              வார்த்தைகளும், அர்த்தங்களும் !
                                              இருந்தும்... 
                                              திருப்தி இன்றி அலைகிறது 
                                              கடிவாளம் போட்டும்
                                              அடங்காத  குதிரை மனது !


                                             
                                              எதையும் இழக்காமல் 
                                              எல்லாம் இழந்துவிட்டேன் 
                                              உன்னுள் !

                                             எதையும் பெறாமல் 
                                             முழுதாய் பெற்றுவிட்டேன்  
                                             உன்னிடம் !! 25 comments:

//எதையும் இழக்காமல்
எல்லாம் இழந்துவிட்டேன்
உன்னுள் !
எதையும் பெறாமல்
முழுதாய் பெற்றுவிட்டேன்
உன்னிடம் !!//

என்னென்று சொல்ல்வது முத்தான வரிகள் தோழி :)

 

/பொருந்திப் போகிறது வார்த்தைகளும், அர்த்தங்களும் !/

இதற்கே மகிழலாம் நீங்கள்.

ம்... காரணம் புரியாத மர்ம வெளி தானே காதல் தேசம்? இதில் திசைகள் தொலைத்த இதயங்கள் தான் எத்தனை எத்தனை....?

நன்று தோழி!

 

எவ்வளவு தான் காதலன்/லி பேசினாலும்

//திருப்தி இன்றி அலைகிறது
கடிவாளம் போட்டும்
அடங்காத குதிரை மனது !//

கவிதை வரிகள் நன்றாக இருக்கின்றது

 

//பொருந்திப் போகிறது வார்த்தைகளும், அர்த்தங்களும்//
மிக ரசித்தேன் சகோ!
காதல் மனதை எப்படியும் அடக்க முடியாதே! ;)

 

நறுக்கென்று நாலு வார்த்தையாக இருந்தாலும் - கவிதை அருமை சகோதரி!

தனிமையில்
அதன் வெளிபூச்சு கலைத்து....

இந்த வரி ஒன்றே போதும் கவிதையின் ஆழம் சொல்ல!
ஆமாம் யாரும் வெளிப்பூச்சுகளை விரும்புவதில்லை தானே!

 

//எதையும் இழக்காமல்
எல்லாம் இழந்துவிட்டேன்
உன்னுள்//!
அருமை

 

கவிதை நன்றாக இருக்கின்றது.

 

மனம் பொருந்துவதால்தான் வார்ததைகளும் பொருந்துகின்றன.
அன்பான காதல் வளரட்டும் கௌசி !

 

அருமையான வரிகளை கொண்ட கவிதை ..
அழகு /.///

 

"எதையும் இழக்காமல்
எல்லாம் இழந்துவிட்டேன்
உன்னுள் !
எதையும் பெறாமல்
முழுதாய் பெற்றுவிட்டேன்
உன்னிடம் !!"

அழகான வரிகள். அருமை சகோதரி...

 

நல்லா இருக்குங்க.

 

மனசு இப்படிதான் படுத்தி எடுக்குது

 

// எதையும் இழக்காமல்
எல்லாம் இழந்துவிட்டேன்
உன்னுள் !

எதையும் பெறாமல்
முழுதாய் பெற்றுவிட்டேன்
உன்னிடம் !! //

கடைசி நான்கு வரிகள் கலக்கல் மேடம்...

 

//எதையும் இழக்காமல்
எல்லாம் இழந்துவிட்டேன்
உன்னுள் !
எதையும் பெறாமல்
முழுதாய் பெற்றுவிட்டேன்
உன்னிடம் !! //

அருமை அருமை அருமை.... கலக்கிட்டீங்கக்கா....

 

செம பார்ம் போல

கலக்கிட்டீங்க

வாழ்த்துக்கள்

விஜய்

 

//எதையும் இழக்காமல்
எல்லாம் இழந்துவிட்டேன்
உன்னுள் !

எதையும் பெறாமல்
முழுதாய் பெற்றுவிட்டேன்
உன்னிடம் !!///

........நல்லா இருக்குங்க. உங்க மனோ நிலையை அழகா சொல்றீங்க.. :)

 

//"எதையும் இழக்காமல்
எல்லாம் இழந்துவிட்டேன்
உன்னுள் !
எதையும் பெறாமல்
முழுதாய் பெற்றுவிட்டேன்
உன்னிடம் !!"//


சான்ஸே இல்லங்க.. சூப்பர்.

 

@@ Harini Nathan...

நன்றி ஹரிணி.@@ வருணன்...

ரசனைக்கு மகிழ்கிறேன் வருணன்.
நன்றி.


@@ sulthanonline...

நன்றி சகோ.


@@ Balaji saravana...

ரசனைக்கு நன்றி பாலா.

 

@@ மாத்தி யோசி கூறியது...

ரசனைக்கு நன்றி.


@@ S Maharajan...

நன்றி நண்பரே.@@ சே.குமார்...

நன்றி குமார்.

 

@@ ஹேமா கூறியது...

//மனம் பொருந்துவதால்தான் வார்ததைகளும் பொருந்துகின்றன.
அன்பான காதல் வளரட்டும் //

வாழ்த்து போல இருக்கு ஹேமா ! :))

நன்றி தோழி.

 

@@ அரசன்...

ரசனைக்கு நன்றி.@@ தோழி பிரஷா...

நன்றி பிரஷா.


@@ ஜீ...

நன்றி@@ அன்பரசன்...

நன்றி சகோ.

 

@@ mahavijay...

உங்களின் முதல் வருகைக்கு நன்றி தோழி.


@@ Philosophy Prabhakaran...

நன்றி பிரபாகர்@@ கவிநா...

நன்றி காயத்ரி


@@ விஜய் கூறியது...

//செம பார்ம் போல//

அப்படினா ?! :))

நன்றி விஜய்.

 

@@ Ananthi (அன்புடன் ஆனந்தி)...

ரசனைக்கு நன்றி ஆனந்தி.@@ இந்திரா...

ரொம்ப நன்றி இந்திரா.

 

ethiyum ilakkamal...varigal super...vaalthukkal....