வாழிய மகளே...!


                                பிறந்தாள் ஒரு குட்டி தேவதை 
                                பெருமூச்செறிந்து 
                                பிறவி பயன் அடைந்தாள் தாய் !  
                                கையில் ஏந்திய அக்கணமே 
                                தந்தைக்கு தாயான மகளே...!

                                மூடிய இமைக்குள் 
                                அலையும் விழிகள் 
                                யார் முகம் காண... 
                                உன் பிஞ்சு விரல் நீவி 
                                பேரின்பம் பெற்றது
                                பெற்றவளா ?பெற்றவரா ?
                                யார் முதலில்...?!

                                இனி உன்னை சுற்றியே சுழலும்
                                அவர்கள் உலகம்...
                                இனி உன் சொல் கேட்டு நடக்கும் 
                                அவர்கள் காலம்...
                                இனி உன் கொஞ்சு மொழியே 
                                அவர்கள் கீதம்...
                                இனி உன் அழகையே பாடக்கூடும்
                                அவர்கள் தமிழ்...
  
                               அன்னையின் சாயலை 
                               உன்னிடம் தேடியவர் புரிந்திருப்பார்
                               நிழலாய் வலம் வந்த அன்னை 
                               நிஜமாய் அவர் முன்னே !

                               தாயவள் நீவளர தருவாள் தாய்பால்
                               தந்தையவன் நீஉயர ஈவான் தமிழ்பால் 
                               இருபாலும் உண்டு சீருடனே
                               பேறு பல பெறுவாய் ! 

                               வாழிய மகளே !
                               வாழிய பைந்தமிழாய் !நேற்று நண்பர் ஜாக்கி சேகர் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.....அந்த குட்டி குழந்தையை வாழ்த்தியே எனது இந்த எளிய கவிதை.....

வாருங்கள் வாழ்த்துவோம் ! மகிழ்ந்து சிரிக்கட்டும் தேவதை !!

18 comments:

//அன்னையின் சாயலை
உன்னிடம் தேடியவர் புரிந்திருப்பார்
நிழலாய் வலம் வந்த அன்னை
நிஜமாய் அவர் முன்னே !//

வார்த்தைகளில் விளையாடி இருக்கறீங்க..

 

அருமையா இருக்குது

அந்த குட்டி தேவதைக்கு என்னுடைய வாழ்த்துக்களும்

 

அந்த குட்டி தேவதைக்கு என்னுடைய வாழ்த்துக்களும்

 

வாழ்த்துக்கவிதை நன்று அக்கா...

நண்பர் சேகர் அவர்களுக்கும், அவர் மனைவிக்கும், குட்டிப் பாப்பாவுக்கும் என் இதயங்கனிந்த வாழ்த்துகள்..

 

//தாயவள் நீவளர தருவாள் தாய்பால் தந்தையவன் நீஉயர ஈவான் தமிழ்பால் இருபாலும் உண்டு சீருடனே பேறு பல பெறுவாய் ! //
ரசித்து எழுதியுள்ள கவிதை.அந்த பிஞ்சு குழந்தைக்கு எனது வாழ்த்துக்களும் உங்கள் வலைபூ வழியாய் சென்று சேரட்டும்.

 

ஜாக்கி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்..

 
பத்மஹரி

தாய்மை உணர்வும், ஒரு குழந்தை பிறப்புக்குப்பின்னான காட்சிகளும் கவிதையின் வரிகளில் அழகாய் மிளிர்கின்றன. கொடுத்து வைத்த குட்டி பாப்பா அவள், கவிதை வரவேற்புடன் இவ்வுலகுக்குள் அடியெடுத்து வைக்கிறாள். நண்பர் ஜாக்கி சேகருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். குட்டி பாப்பா எல்லா செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

 

கௌசி...உங்களுக்குத்தான் குழந்தை பிறந்திடிச்சோன்னு நினைச்சு ஏமாந்திட்டேன்.சரி சரி...!

குழந்தைக்கு அன்பு வாழ்த்துகள்.

 

@@ சங்கவி...

நன்றி சதீஷ்.@@ Harini Nathan...

நலமா ஹரிணி ? ரொம்ப நாள் ஆச்சு ! வாழ்த்துக்கு நன்றி தோழி.@@ போளூர் தயாநிதி...

உங்களின் முதல் வருகை என்று நினைக்கிறேன், வாழ்த்துக்கு நன்றி.

 

@@ கவிநா...

வாழ்த்திற்கு நன்றி காயத்ரி...

:))

 

@@ FOOD கூறியது...

//எனது வாழ்த்துக்களும் உங்கள் வலைபூ வழியாய் சென்று சேரட்டும்.//

நிச்சயம் சேரும் அண்ணா. வாழ்த்திற்கு மகிழ்கிறேன். நன்றி.

 

@@ தம்பி கூர்மதியன்...

நன்றி.

 

@@ பத்மஹரி கூறியது...

//தாய்மை உணர்வும், ஒரு குழந்தை பிறப்புக்குப்பின்னான காட்சிகளும் கவிதையின் வரிகளில் அழகாய் மிளிர்கின்றன.//

குழந்தை பற்றி எழுதும் போது எந்த பெண்ணும் தாயாய் மாறிவிடுவாள். இது தான் பெண்மை. அதை புரிந்து கருத்திட்ட உங்களுக்கு என் நன்றிகள்.

// கொடுத்து வைத்த குட்டி பாப்பா அவள், கவிதை வரவேற்புடன் இவ்வுலகுக்குள் அடியெடுத்து வைக்கிறாள்.//

உங்களின் இந்த அழகான வாழ்த்திற்கு மகிழ்கிறேன் ஹரி.

:))

 

@@ தமிழ்வாசி - Prakash...

வாழ்த்திற்கு நன்றி

 

@@ ஹேமா கூறியது...

//கௌசி...உங்களுக்குத்தான் குழந்தை பிறந்திடிச்சோன்னு நினைச்சு ஏமாந்திட்டேன்.சரி சரி...!//

'ஹேமா' !!

உங்க கவிதையில் சோகத்தை கொட்டிட்டு இங்கே வந்து கிண்டலா ? நடத்துங்க தோழி. :))

எனக்கு பெண் குழந்தைனா ரொம்ப இஷ்டம், அதுதான் இப்படி கவிதை !!

:))

 

அருமையான கவிதை கௌசல்யா.
நான் அந்த குட்டி இளவரசிக்கும் பெற்றோருக்கும்
நேற்றே வாழ்த்து சொல்லிட்டேன்.
இங்கே மறுபடியும் வாழ்த்துகிறேன் .

 

கவிதை எழுதி தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்ட தோழி கவுசல்யாவுக்கும்,இங்கு வாழ்த்திய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும்,எங்கள் நன்றி....