அப்படியா...!

                                       
                                          ஆசையாய் நெஞ்சணைத்து 
                                          சேர்த்தள்ளி கொண்டு வந்தேன் !


                                          புது மணம் முகர்ந்து
                                          முகத்தோடு ஒற்றி மகிழ்ந்தேன் !


                                          பளபள மேனி அழகு வியந்து  
                                          பிடித்த இடத்தில் அமர வைத்தேன் !  


                                          மெல்ல என் விரலால் 
                                          தொட்டு வருடி ரசித்தேன் !


                                          புரட்டி பார்க்க   
                                          ஆவலாய் காத்திருந்தேன் !
                                                           
                                          இன்றோ 
                
                                          திட்டித் தீர்க்கின்றன..... 
                                          இன்னும் 
                                          திறக்கப் படாத புத்தகங்கள் !?


                                          உன்னை படித்து கொண்டிருக்கிறேன் நான் !

                           
                                                                           


























படங்கள் - கூகுள் 



14 comments:

//மெல்ல என் விரலால் தொட்டு வருடி ரசித்தேன் !
புரட்டி பார்க்க
ஆவலாய் காத்திருந்தேன் !//

ஆஹா, என்னவோ ஏதோவென்று பதறிப்போய் படிக்கலானேன்.

கடைசியில் வாசனையுள்ள புதுப்புத்தகம்.

ஆனாலும்

‘அப்படியா’
என்று நினைக்க வைத்தது.

பாராட்டுக்கள்

 

//ஆஹா, என்னவோ ஏதோவென்று பதறிப்போய் படிக்கலானேன்.//

ரொம்ப சிரிசிட்டேனுங்க !! :)))

ரசனையான உங்கள் உணர்வு, மிக ரசித்தேன் சார்...

நன்றிகள்.

 

ஆஹா அருமை வாழ்த்துக்கள்

 

புத்தகம் குறித்த புதுக்கவிதை. வித்யாசமாய் எழுதி விறுவிறுப்பு கூட்டியுள்ளீர்கள்.

 

அட...அப்பிடியா கௌசி !

 

:-) அருமை!
எனது திறக்கப்படாத புத்தகங்களை நினைவூட்டி விட்டீர்கள்!

 

//திட்டித் தீர்க்கின்றன.....
இன்னும்
திறக்கப் படாத புத்தகங்கள் !?


உன்னை படித்து கொண்டிருக்கிறேன் நான் !//

அற்புதமான ரசனை...

 

வரிகள் அழகா இருக்கு சகோ

 

வித்தியாசமான கவிதை

 

@@ Mahan.Thamesh...

நன்றிங்க.



@@ FOOD...

நன்றி அண்ணா.


@@ ஹேமா...

அப்படியே தான் ஹேமா :))

 

@@ ஜீ... கூறியது...

//எனது திறக்கப்படாத புத்தகங்களை நினைவூட்டி விட்டீர்கள்!//

அந்த புத்தகங்களும் திட்ட போகிறது...உடனே திறந்திடுங்க...படிசிடுங்க... :)))

 

@@ சங்கவி...

நன்றி சதீஷ் :))



@@ தினேஷ்குமார்...

நன்றிகள் தினேஷ். :))


@@ யாதவன்...

நன்றி யாதவன். :))

 

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு