ஒற்றை...!



                                         
                                         சில புரிதலற்ற
                                         கோபக்கனல்கள்
                                         சுட்டெரித்து சாம்பலாக்கிவிட 
                                         மிகச் சரியாக அந்த வினாடி
                                         வீறு கொண்டெழுகின்றன
                                         உன் முன் மண்டியிட்டு கிடக்கும் 
                                         என் கர்வங்கள் !

                                         இருபுறமும் மோதி 
                                         கீழே வீழ்ந்து துடிக்கிறது
                                         ஏதும் அறியா ஒரு நேசம்...
                                         வார்த்தைகளின் கனம்
                                         தாளாமல் சிதைந்தது
                                         மாசற்ற அன்பு...
                                         மௌனமாய் கதறுகிறது
                                         என்றோ எனக்குள்
                                         ஒளித்திருந்த காதல் !

                                         ஒரு கட்டத்தில்
                                         இரு கர்வங்கள்
                                         போராடி
                                         களைத்து போய்விட
                                         மௌன வெளியில்
                                         சிறகடித்து பறந்து
                                         சென்றே விட்டது
                                         வெண்புறா ஒன்று !

                                         அதன் பின்னான 
                                         உன் இதழோரப் புன்னகை 
                                         களிம்பை பூச மறந்து
                                         ஏனோ
                                         காயத்தை கீறி விட்டு
                                         செல்கிறது!?
                                         
                                         இம்முறையும்
                                         உன் கோபாக்கினையில் 
                                         தப்பி பிழைத்த 
                                         ஒற்றை கொள்ளியாய் நான் !





22 comments:

அட...!!! கவிதையும் எழுதுவீங்களா...?? அட்டகாசமா இருக்கு...!!!

 

" Lord Jesus, I believe, you are the Son of God. Thank you for dying on the cross for my sins. Please forgive my sins and give me the gift of eternal life. I ask you into my life and heart to be my Lord and Savior. I want to serve you always ". Amen//


praise the lord...

 

மிகவும் அருமையான கவிதை.

அவள் ஒற்றையாகிப் போய்விட்டாலும், இவனும் இப்போது ஒற்றையாகிப்போய் விட்டதால், அவளின் அருமையை இனிமேல் தான் தெரிந்து கொள்வான்.

ஒருவர் இருக்கும் வரை அவரின் அருமை நமக்குத்தெரியாது!

கடைசி வரிகளில், தன் மீது வைக்கப்பட்ட கொள்ளிக்கட்டையால் அவன் முகத்தில் சொரிந்து விட்டல்லவா சென்றுவிட்டாள்!


மிகச்சிறப்பாக உள்ளது.

பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.
நன்றிகள்.

 

VOTED தமிழ்மணம் 4
& இன்ட்லி 6 vgk

 

இருபுறமும் மோதி
கீழே வீழ்ந்து துடிக்கிறது
ஏதும் அறியா ஒரு நேசம்...
வார்த்தைகளின் கனம்
தாளாமல் சிதைந்தது
மாசற்ற அன்பு...


Nice.
மௌனமாய் கதறுகிறது
என்றோ எனக்குள்
ஒளித்திருந்த காதல் !

 

சிறந்த கவிதையை வாசித்த திருப்தி
வாழ்த்துக்கள் நண்பரே

 

அனல் வார்த்தைகளாகி காதலின் மேல் விழுந்த பிறகு சாம்பல் கூட அங்கே தங்காது.
கவிதை உள்ளத்தைப் பற்ற வைக்கிறது சகோதரி.

 

உன் முன் மண்டியிட்டு கிடக்கும்
என் கர்வங்கள் !

மௌனமாய் கதறுகிறது
என்றோ எனக்குள்
ஒளித்திருந்த காதல் !//

அருமை... உங்களது கவித் திறமை ஜொலிக்கிறது... கலக்கலான காதல் கவிதை வாழ்த்துக்கள்

 

மிகவும் அருமையான கவிதை...

 

வணக்கம் அக்கா,
ஒற்றை வார்த்தையால் காயம் பட்ட உள்ளமானது,
மீண்டும் ஒற்றை வார்த்தை மூலம் மனக் காயத்தினை ஆற்றாதா எனும் ஏக்கத்தில் வாடுவதனை உங்களின் கவிதை தாங்கி நிற்கிறது.

 

@@ நண்டு @நொரண்டு - ஈரோடு...

நன்றிங்க

 

@@ MANO நாஞ்சில் மனோ...

வாங்க வாங்க !! :)

//praise the lord...//

நன்றிகள் மனோ.

 

@@ Harini Nathan...

நன்றி ஹரிணி நலமா??

 

@@ வை.கோபாலகிருஷ்ணன்...

//அவள் ஒற்றையாகிப் போய்விட்டாலும், இவனும் இப்போது ஒற்றையாகிப்போய் விட்டதால், அவளின் அருமையை இனிமேல் தான் தெரிந்து கொள்வான்//

கவிதையின் பொருளை மிக ஆழமாக உணர்ந்து கருத்திட்ட விதம் மிக நன்று !
பாராட்டுகிறேன்.

நன்றி.

 

@@ ரிஷபன்...

நன்றி ரிஷபன்



@@ ஹைதர் அலி...

நன்றி.


@@ Rathnavel...

நன்றிங்க

 

@@ வல்லிசிம்ஹன் கூறியது...

//அனல் வார்த்தைகளாகி காதலின் மேல் விழுந்த பிறகு சாம்பல் கூட அங்கே தங்காது.//

ம்...உணர்வுக்கு நன்றிகள்

 

@@ மாய உலகம்...

நன்றிகள்.



@@ ரெவெரி...

நன்றிகள்

 

@@ நிரூபன் கூறியது...

//ஒற்றை வார்த்தையால் காயம் பட்ட உள்ளமானது,
மீண்டும் ஒற்றை வார்த்தை மூலம் மனக் காயத்தினை ஆற்றாதா எனும் ஏக்கத்தில் வாடுவதனை உங்களின் கவிதை தாங்கி நிற்கிறது.//

அது எப்படி நிரூபன் இப்படி கவிதையை கணிக்க முடிகிறது ? :)

உங்களின் புரிதலுக்கு ஆச்சர்யம் + நன்றிகள் !

 

என்னமாய் எழுதறீங்க..