தனித்த இரவு...!

                                               


                                               தனித்த இரவொன்றில் 
                                               உன் விரல் கோர்த்து
                                               உன் தோள் சாய்ந்து
                                               உன் தொடர்ந்த பேச்சுக்களில் 
                                               விழிமூடி கிறங்கி கிடந்தேன்
                                               பிரபஞ்சம், வானம் , நிலவு 
                                               என
                                               புரியாத மொழியில்
                                               ஏதேதோ 
                                               பேசிக்கொண்டே இருந்தாய் 
                                               அத்தனையும் காதல் என்றே 
                                               மொழி பெயர்த்தது மனது !

                                               'உன் தலை பின்னால் 
                                               ஒளிவட்டம் தெரிகிறது 
                                               நீ தெய்வமாகிறாய்' என்றேன் 
                                               விழி திறவாமலே...

                                              அதை கேட்டு நகைத்தாய்
                                              நான் கோபப்படவே 
                                              'சரி சரி உனக்கு மட்டும் தெரியகடவது'
                                              சமாளித்தாய் இறை போலவே... 

                                              நகைப்பும் பேச்சுமாய் கடந்த பொழுதில்
                                              உன்னை சேரவேண்டுமென 
                                              காத்திருந்த வேளையில் 
                                              சலனமற்ற குளத்து நீரில் 
                                              வந்து விழுந்தது 
                                              ஒற்றை மழைத்துளி...

                                              சலனம் அடங்குமென - மன
                                              சலனத்துடன் - விழி
                                              சலனமின்றி நான்...

                                              நீண்ட காத்திருப்புக்கு பின்
                                              நெருங்கி வர 
                                              எத்தனித்த வேளையில் 
                                              சட்டென்று 
                                              வெடித்து சிதறியது 
                                              கனவு...!


25 comments:

கனவு நினைவைப் போலவே எடுத்தாளப்பட்டிருப்பது சிறப்பு.

 

Norton Internet Security 2012 2Years License உடன் இலவசமாக கிடைக்கிறது!

http://tamiltechtips.blogspot.in/2012/02/norton-internet-security-2012-v19113-2.html

 

//நீண்ட காத்திருப்புக்கு பின்
நெருங்கி வர
எத்தனித்த வேளையில்
சட்டென்று
வெடித்து சிதறியது
கனவு...!//

கனவு போல் நினைவு...

 

அருமை பதிவு வாழ்த்துகள்

 

அழகான கவிதை மேலும் காதலில் கனவுகள் தரும் அலாதியை நிஜங்கள் தருவதில்லை., எனில் நீங்கள் நிஜங்களுக்காக பிரயத்தனம் பண்ணாமலேயே இருக்கலாம் ( அனுபவம் )

 

simply superb...vaalthukkal kousalya...

 

கவிதை அருமை. வாழ்த்துக்கள்.

 

கௌசி...அன்பு வாழ்த்துகள்.கனவு எப்பவுமே கனவாயிருக்காது.
அருமையான கவிதை !

 

கனவா!!! கற்பனை நன்றாக உள்ளது.உன் தொடர்ந்த பேச்சுக்களில்
விழிமூடி கிறங்கி கிடந்தேன் -பிடித்த வரிகள்.

 

எல்லாவற்றையுமே காதல் என்று மொழிபெயர்த்த மனத்தின் நிலை வெளிப்படுத்துகிறது அளவிடற்கரிய காதல் உணர்வை. அழகான கனவு. நீடித்திருந்தால் கவிதை பிறக்கச் சாத்தியமில்லை. பாராட்டுகள்.

 

எல்லாவற்றையுமே காதல் என்று மொழிபெயர்த்த மனத்தின் நிலை வெளிப்படுத்துகிறது அளவிடற்கரிய காதல் உணர்வை. அழகான கனவு. நீடித்திருந்தால் கவிதை பிறக்கச் சாத்தியமில்லை. பாராட்டுகள்.

 

ஒவ்வொரு வரியிலும் உயிர்ப்பு இருக்கிறது. பகிர்விற்கு நன்றி.

 

@@ மதுமதி கூறியது...

//கனவு நினைவைப் போலவே எடுத்தாளப்பட்டிருப்பது சிறப்பு.//

கனவே (ஆழ்மன)நினைவுகளின் வெளிபாடு தானே ?!

நீங்கள் ரசித்தவிதம் குறித்து மகிழ்கிறேன். :)

நன்றிகள்

 

@@ சங்கவி கூறியது...

//கனவு போல் நினைவு...//

ம்...இதுவும் சரிதானோ ?! :))

நன்றி சதீஷ்.

 

@@ dhanasekaran .S...

நன்றிகள்

 

@@ இயற்கைசிவம் கூறியது...

//அழகான கவிதை மேலும் காதலில் கனவுகள் தரும் அலாதியை நிஜங்கள் தருவதில்லை., எனில் நீங்கள் நிஜங்களுக்காக பிரயத்தனம் பண்ணாமலேயே இருக்கலாம் ( அனுபவம் )//

மிக அழகான கருத்து.

நிஜங்கள் அந்த அளவிற்கு தருவதில்லை என்றாலும் நிஜங்களுக்காக பிரயத்தனம் செய்வதும் காதலின் ஒரு சுவை அன்றோ ?!

:))

நன்றிகள்

 

@@ jayakumar...

நன்றிகள் ஜெயகுமார்.@@ சே.குமார்...

நன்றிகள் குமார்.

 

@@ ஹேமா கூறியது...

//கௌசி...அன்பு வாழ்த்துகள்.கனவு எப்பவுமே கனவாயிருக்காது.
அருமையான கவிதை !//

ம்...சரிதான் ஹேமா. நன்றிகள்

 

@@ விச்சு கூறியது...

//கனவா!!! கற்பனை நன்றாக உள்ளது.//

அதே. :)

நன்றிகள்.

 

@@ கீதமஞ்சரி கூறியது...

//எல்லாவற்றையுமே காதல் என்று மொழிபெயர்த்த மனத்தின் நிலை வெளிப்படுத்துகிறது அளவிடற்கரிய காதல் உணர்வை. அழகான கனவு. நீடித்திருந்தால் கவிதை பிறக்கச் சாத்தியமில்லை.//

உண்மை காதலில் சாதாரண பேச்சுக்களும் இப்படித்தானே கேட்கிறது :)

அழகான ரசனை...!!

நன்றிகள் கீதமஞ்சரி.

 

@@ FOOD NELLAI கூறியது...

//ஒவ்வொரு வரியிலும் உயிர்ப்பு இருக்கிறது.//

நன்றிகள் அண்ணா.

 

அழகான கவிதை. கனவில்தானே அதிக ஆசைகள் நிறைவேறுது:).

 

ALAGUTAAN VERENNA NINAIKKA!!

 

.......................................

 

எதிர்பாராத அதிர்ச்சி! அருமையான கவிதை.