வா...!


                                           சரக் கொன்றை மரத்தின் 
                                           பழுத்த இலைகள்
                                           வாடிய பூக்கள்
                                           சருகுகள்

                                           என
                                           மொத்தமாய்
                                           மூடி கிடக்கிறது வாசல்
                                           குப்பைகள் அல்ல அவை 

                                           உன் பாதம் தொட்டு முத்தமிட
                                           காத்திருந்து
                                           காத்திருந்து
                                           தற்கொலை செய்துகொண்ட
                                           அழகு தேவதைகள்...

                                            அன்று ஒருநாள்
                                            'வாசல் தெளிக்க படாமல் கிடக்கிறதே, 
                                            என்னாச்சு  !'
                                            சிரித்து கொண்டேகேட்டாய்
                                            முழுதாய் உன் நினைவில்
                                            மூழ்கி போனதை
                                            எவ்வாறு சொல்வேன் 
                                            வெட்கம் மறைத்து
                                            'இனி எழுதுகிறேன்' என்றேன் 
                                             
                                            'கவி எழுத முடியவில்லையா?
                                            என்னை எண்ணி முடியவில்லையா?!
                                            நீ செல்லமாய் சீண்ட 
                                            எங்கிருந்தோ வேகமாய்
                                            முகத்தில் வந்து ஒட்டிக் கொண்டது
                                            அதுவரை மறைவில் இருந்த வெட்கம்
                                            'இதை பார்க்கவே கேட்டேன்'
                                            சத்தமாய் நீ சிரித்து கவிதை எழுத
                                            ஒரு காவியம் அங்கே அரங்கேறியது !

                                            இதோ 
                                            இன்று வாசல் தெளித்து
                                            கோலமிட்டு விட்டேன்
                                            உன் வரவுக்காய்
                                            காத்திருக்கிறோம்
                                            நானும் இந்த கொன்றை பூக்களும்...

                                            'வா...உயிரே !'




படங்கள் - என் வீட்டு தோட்டத்தில்...
                                                              
                                                                         * * * * *


பின் குறிப்பு

வாசலில் கவிதைகள் எழுதி இரண்டு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டது. இனி தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.(விதி வலியது !!) :) இனியது காதல் தொடர் இனி தொடரும்...நன்றிகள்.

பிரியங்களுடன்
கௌசல்யா

8 comments:

அன்று ஒருநாள்
'வாசல் தெளிக்க படாமல் கிடக்கிறதே,
என்னாச்சு !'///

வேலைகாரி வரல அதான்



நீ செல்லமாய் சீண்ட
எங்கிருந்தோ வேகமாய்
முகத்தில் வந்து ஒட்டிக் கொண்டது
மறைந்து இருந்த வெட்கம்///

அட டா பாருய்யா வெக்கம் லாம் வருது...


காத்திருக்கிறோம்
நானும் இந்த கொன்றை பூக்களும்..///

காத்திருங்க காத்திருங்க.... :)

 

சூப்பரான கவிதை.. தொடரும்னு வேற சொல்லிருகிங்க. நாங்களும் காத்திருக்கிறோம்.

 

காதலில் ஒரு உற்சாகம் தெரிகிறதே கௌசி..........ஜெயித்த சந்தோஷம்.வாழ்த்துகள் !

 

மூன்று மாதங்களாக மூடிய வாசலை திறந்ததற்கு நன்றி...
என் ஏமாற்றம் நேற்றோடு முடிந்தது...

அது என்னவோ தெரியலைங்க உங்க
கவிதைகளை படிக்கும்போது மட்டும் மனசுக்கு
கொஞ்சம் சந்தோஷமாவும் ஆறுதலாகவும் இருக்கு...

தொடர்ந்து எழுதுங்கள்...
நன்றியுடன் அன்பு..

 

@@ சௌந்தர் கூறியது...

//வேலைகாரி வரல அதான்//

கரெக்ட்.:)

//அட டா பாருய்யா வெக்கம் லாம் வருது...//

பின்ன ?! :)

//காத்திருங்க காத்திருங்க...//

வந்தாச்சு...!! :)

 

@@ கோவி கூறியது...

//சூப்பரான கவிதை.. தொடரும்னு வேற சொல்லிருகிங்க. நாங்களும் காத்திருக்கிறோம்.//

மகிழ்வுடன் மிக்க நன்றிகள்

 

@@ ஹேமா கூறியது...

//காதலில் ஒரு உற்சாகம் தெரிகிறதே கௌசி..........ஜெயித்த சந்தோஷம்.வாழ்த்துகள் !//

காதல், கவிதை என்றாலே உற்சாகம் வந்துவிடுகிறதே...

நன்றி ஹேமா

 

@@ அன்பு...

உங்களின் கவிதை ரசனைக்கு மகிழ்கிறேன். தொடர்ந்து வருகை தாருங்கள்

நன்றிகள்.