விழியிலே...!

                                              

                                                             நீண்ட தூர பயணத்தில்
                                                             எதிர்ப்படும்
                                                             ஆயிரமாயிரம் முகங்களிலும்
                                                             உன்னைத் தேடுகிறேன்
                                                             உள்ளே வைத்துகொண்டு
                                                             வெளியே தேடுவதே
                                                             வாடிக்கையாகிவிட்டது 
                                                             வழக்கம் போல் பரிகசித்து
                                                             சிரிக்கின்றன விழிகள்...
                                                             இமைகளை இறுக மூடி
                                                             விழிகளுக்குள் ஓடுகிறேன்
                                                             உன்னைக் காண...!


                                                                            * * * * *

                                                                                                                        
                                                             இப்போதெல்லாம்
                                                             கண்கள் கலங்கினாலும்
                                                             கண்ணீர் விடுவதாயில்லை...
                                                             விழித்திரையில்
                                                             சேமித்து  வைத்திருக்கும்
                                                             உன் காட்சிகளில்
                                                             ஒன்றையும்
                                                             கரைத்து விட
                                                             எனக்கு சம்மதமில்லை !!



படங்கள்-நன்றி கூகுள்

16 comments:

நல்ல வரிகள்...
ஏதோ ஒரு சோகம் நிலவுகிறதே...
பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

 

சோகம் ததும்பும் வரிகள்.
நல்ல கவிதை.

 

தாபமிகுதியில் தளும்பும் கண்ணீர்க்கவி வரிகள் பிரமாதம். பாராட்டுகள்.

 

ஏக்க வரிகள்.

 

உங்களோட கவிதைகள் எனக்கு பிடித்திருப்பதற்கு
ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது.
ஒவ்வொரு முறையும் என் மன வருத்தத்தை
மகிழ்ச்சியை ஏக்கத்தை என ஏதாவது ஒன்றை
பிரதிபலிப்பதாகவே அமையும்படியான உங்களின் வரிகள்.
அதனாலேயே உங்கள் கவிதைகளை படிக்கும் போது
ஏதோ ஒன்றை அடைந்துவிட்ட ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறது.
அதற்காக நான் உங்களுக்கு எவ்வளவு நன்றிகள்
சொன்னாலும் போதாது.

இந்த கவிதையில் பிடித்த வரிகள்:

"இப்போதெல்லாம்
கண்கள் கலங்கினாலும்
கண்ணீர் விடுவதாயில்லை..."

அன்பு கலந்த நன்றிகளுடன்,
அன்பு.

 

@@ திண்டுக்கல் தனபாலன் கூறியது...

//ஏதோ ஒரு சோகம் நிலவுகிறதே... //

இருக்கலாம்...உணர்வுகளின் கலவை தானே கவிதை !!

:) நன்றிகள்

 

@@ சே. குமார்...

நன்றிகள் குமார்.

 

@@ கீதமஞ்சரி கூறியது...

//தாபமிகுதியில் தளும்பும் கண்ணீர்க்கவி வரிகள் பிரமாதம்.//

ரசனை பிரமாதம் :)

நன்றிகள்

 

@@ கீதமஞ்சரி கூறியது...

//தாபமிகுதியில் தளும்பும் கண்ணீர்க்கவி வரிகள் பிரமாதம்.//

ரசனை பிரமாதம் :)

நன்றிகள்

 

@@ Bhuvaneshwar...

நன்றி புவனேஷ்

 

@@ விமலன்...

வருகைக்கு நன்றிகள்.

 

@@ அன்பு கூறியது...

//உங்களோட கவிதைகள் எனக்கு பிடித்திருப்பதற்கு
ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது.//

காரணங்களை சொன்ன விதம் பிடித்திருக்கிறது...மனதிற்கு ஒரு நிறைவு கிடைக்கிறது .

மகிழ்வுடன் நன்றிகள் அன்பு.

 

சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

 

காதலை பற்றி அழகாக சொன்னிர்கள்

 

@@ s suresh...

நன்றி.


@@ அன்பை தேடி,,அன்பு...

நன்றிகள்