Posted by
Kousalya Raj
comments (2)
உனக்கெப்படித் தெரியும்
தீரத்தீர நேசித்தும்
தீர்ந்து போகாத
என் ஆசைகள் பற்றி...
உன்னை தேடித் தேடி
ஒளி இழந்த
என் கண்கள் பற்றி...
சொல்ல வழியின்றி
மௌனத்தில் கரைந்த
என் நாட்கள் பற்றி...
நொடிக்கொருமுறை
இமைத்து இமைத்து விழிகளில்
தேக்கி வைத்த
என் பிரியங்கள் பற்றி...
நேரில் விவரிக்க
வழியின்றி
திரை மறைவில் கரைத்த
என் கண்ணீரைப் பற்றி...
தலையணைக்குள்
புதைத்து வைத்த
என் கனவுகள் பற்றி...
உன்னை வந்தடைய
நான் எடுக்கும்
பிரயாசங்கள் பற்றி...
உனக்கெப்படி தெரியும்
இரவு பகலாய்
உன்னை எண்ணித் துடிக்கும்
என் உயிரின் வலி பற்றி...
நான் சொல்லாதவரை...!
Labels:
காதல் கவிதைகள்


