நீ சிரிக்கும் போது சிதறிய முத்துக்களை அள்ளி
எடுத்தே கை வலித்திருக்குமோ
சிவந்திருக்கிறது
உன் அன்னையின் கை !
கவிதைகள் சொல்லிவிட்டது என்னிடம்
அந்த ரகசியத்தை
நீ பிறந்த பின்பே கவி புனைய
தொடங்கினாராம் உன் தந்தை !
உன் மென் பட்டு பாதம் கண்ட மேக கூட்டம்
இறங்கி வந்து நீ நடக்க
பாதை அமைத்திட்டதோ
துணை இன்றி தவிக்கிறது வானம் !
குயில்கள் உன் மழலை மொழி கேட்டு
தன் மொழி மறந்து
திரிகின்றனவோ
ஆட மறுத்து அலையும் மயில்கள் !
படபடக்கும் உன் விழி பார்த்து
உன்னிடம் பாடம் பயில
வந்துவிட்டதோ
தோட்டத்தில் காணவில்லை வண்ணத்து பூச்சிகள் !
என் வீட்டு ரோஜாக்களும் கிளம்பி விட்டன உன்னை வாழ்த்துவதற்கு.....!!!
இன்று நண்பர் தேவா அவர்களின் மகள் அக்ஷயாவின் பிறந்த நாள்.
அந்த அழகு மகளை வாழ்த்தி இந்த சிறிய கவிதை.
இன்று போல் என்றும் சுகமாய் வாழ வேண்டும் என்று அன்புடன் வாழ்த்துகிறேன்.
45 comments:
அக்ஷயாவிற்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
குட்டி அக்ஷ்யாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
// கவிதைகள் சொல்லிவிட்டது என்னிடம்
அந்த ரகசியத்தை
நீ பிறந்த பின்பே கவி புனைய
தொடங்கினாராம் உன் தந்தை !//
நல்லா இருக்கு கவிதை எனக்கு புரியுற மாதிரி இருக்கு .................
அக்க்ஷயவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ............
அக்ஷயா குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
//படபடக்கும் உன் விழி பார்த்து
உன்னிடம் பாடம் பயில
வந்துவிட்டதோ
தோட்டத்தில் காணவில்லை வண்ணத்து பூச்சிகள் ! //
இந்த வரிகளுக்காக உங்களுக்கு ஸ்பெசல் பாராட்டுக்கள் சகோ :)
Happy Birthday to Dear Akshaya :-)
கவிதை நல்லா இருக்குங்க..!
அக்க்ஷயவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நல்லா அனுபவிச்சி எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
அக்க்ஷயவிற்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அக்ஷயா குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நன்றிகள் கெளசல்யா............!
அக்க்ஷயவிற்கு என் பிறந்தநாள் நல் வாழ்த்துகள்....
அழகான கவிதையால் குட்டி அக்ஷ்யாவுக்கு அழகு சேர்த்திருக்கீங்க கௌசல்யா.. ரொம்ப அருமை.
குட்டி அக்ஷ்யாவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
அக்க்ஷயவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அன்புடன் - ராமராஜ் கவிதா சந்தியா, ராமகிருஷ்ணன் கோமளதேவி ஹீரா, ஜெய்கணேஷ், வலாண்டோ, அனுசுயா, சுசித்ரா வில்சன் சங்கீதா - அபுதாபி
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவா ஈன்ற தேவதைக்கு..
@கௌசல்யா
அழகான கவிதை.... எங்க வீட்டு இளவரசிக்கு வாழ்த்துகள்!!!
@இம்சை பாபு
//நல்லா இருக்கு கவிதை எனக்கு புரியுற மாதிரி இருக்கு .................//
என்ன்ன்ன்னாது கவிதை புரியுதா??? போற வர இடத்துல எல்லாம் கவிதை புரியலை சொல்லிட்டு இங்க வந்து பொய் சொல்றிங்க.... :)))
//என்ன்ன்ன்னாது கவிதை புரியுதா??? போற வர இடத்துல எல்லாம் கவிதை புரியலை சொல்லிட்டு இங்க வந்து பொய் சொல்றிங்க.... :)))//
இவனுக்கு என்னை மாட்டிவிடுரதுல அவ்வளவு சந்தோசம் சகோ .............எலேய் மக்கா டெர்ரர் நான் அவங்க இதுக்கு முன்னாடி எழுதின கவிதையும் அப்படி தான் சொல்லி இருக்கேன் எனக்கு புரியலன்னு .இன்னைக்கு நம்ம தேவா அண்ணா பொண்ணுக்கு பிறந்த நாள் இல்லை அதுக்கான கவிதை இது .................சகோ கொஞ்சம் நச்சுனு டெர்ரர் க்கு மண்டைல புரியுற மாதிரி ஒரு கமெண்ட்ஸ் போடுங்க ..........
LK...
:))
சௌந்தர்...
வாழ்த்திற்கு நன்றி.
இம்சைஅரசன் பாபு.. கூறியது...
//நல்லா இருக்கு கவிதை எனக்கு புரியுற மாதிரி இருக்கு .....//
'உன் தந்தை' அப்படின்னு தமிழ்ல எழுதி இருந்தேன் அதுதான் புரிஞ்சிருக்கு......!?
வாழ்த்திற்கு நன்றி
Balaji saravana கூறியது...
//இந்த வரிகளுக்காக உங்களுக்கு ஸ்பெசல் பாராட்டுக்கள் சகோ//
அப்ப மத்த வரிக்கு ஆர்டினரி பாராட்டா..?? ஏன் இந்த ஓர வஞ்சனை....? :))
வாழ்த்திற்கு நன்றி பாலா
Ananthi கூறியது...
//Happy Birthday to Dear Akshaya :-)
கவிதை நல்லா இருக்குங்க..!//
வாழ்த்திற்கு நன்றி தோழி.
யாதவன்...
வாழ்த்திற்கு நன்றி.
S Maharajan...
வாழ்த்திற்கு நன்றி
ஜீவன்பென்னி...
வாழ்த்த வந்த உங்களுக்கு என் நன்றிகள்.
dheva கூறியது...
//நன்றிகள் கெளசல்யா...//
நன்றி.
ganesh...
வாழ்த்திற்கு நன்றி கணேஷ்.
Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
//அழகான கவிதையால் குட்டி அக்ஷ்யாவுக்கு அழகு சேர்த்திருக்கீங்க கௌசல்யா..//
நன்றி நண்பரே.
kavitha கூறியது...
//அக்க்ஷயவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அன்புடன் - ராமராஜ் கவிதா சந்தியா, ராமகிருஷ்ணன் கோமளதேவி ஹீரா, ஜெய்கணேஷ், வலாண்டோ, அனுசுயா, சுசித்ரா வில்சன் சங்கீதா - அபுதாபி//
மொத்தமாக இத்தனை பேர் வந்து வாழ்த்து சொன்னதுக்கு மிக்க நன்றி
க.பாலாசி...
//இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவா ஈன்ற தேவதைக்கு..//
நல்லா இருக்குங்க உங்க வாழ்த்து...! முதல் வருகைக்கு மகிழ்கிறேன்
TERROR-PANDIYAN(VAS) கூறியது...
//அழகான கவிதை.... எங்க வீட்டு இளவரசிக்கு வாழ்த்துகள்!!//
உங்க வீட்டு இளவரசிக்கு இன்னைக்கு ஏதும் ஸ்பெஷல் கவனிப்பு உண்டா...???
//என்ன்ன்ன்னாது கவிதை புரியுதா??? போற வர இடத்துல எல்லாம் கவிதை புரியலை சொல்லிட்டு இங்க வந்து பொய் சொல்றிங்க.... ://
இதுவரை புரியலைன்னு தான் சொல்லிட்டு இருந்தார்....! அதுதான் எனக்கும் புரியல....
ஒருவேளை நான் இன்னைக்கு எழுதியது கவிதை இல்லைனு எனக்கு சந்தேகமே வந்து விட்டது....!! :))
இம்சைஅரசன் பாபு கூறியது....
//இன்னைக்கு நம்ம தேவா அண்ணா பொண்ணுக்கு பிறந்த நாள் இல்லை அதுக்கான கவிதை //
சரிதான் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன இடத்தில கவிதை புரியலைனா அண்ணன் மிரட்டுவார்னு பயத்துல புரியுது சொல்லிடீங்களா...???
//கொஞ்சம் நச்சுனு டெர்ரர் க்கு மண்டைல புரியுற மாதிரி ஒரு கமெண்ட்ஸ் போடுங்க//
ம்.....ம்....ம்....நல்லாவே பதில் சொல்லிட்டேன்....பார்த்து சமாளிச்சுகோங்க...:))
உண்மைலேயே உன் தந்தைன்னு அந்த வார்த்தை தான் சகோ...........
இல்லை என்றால் கவிதை என்றவுடன்
காணமல் போய் விடுவேன் .......
தந்தை என்ற சொல் இது
மந்தை கூட்டம் என்று சொல்லும் சொல் அல்ல ......
இது ஒரு தனி மனிதனுக்கு கிடைக்கும் அங்கீகாராம்.....
அப்பா என்று என் மகள்
தப்பாமல் ஒவ்வொரு முறை கூப்பிடும் பொழுதும் ஏற்படும் சந்தோசம் .......
ஐயோ போங்க உங்க கூட சேர்ந்து நானும் எதாவது எழுதி தொலச்சிரபோறேன் ......அதுக்கப்புறம் சொற் குற்றம் பொருள் குற்றம் ன்னு எரவது பஞ்சாயத்து கூட்டிரபோறாங்க
@கௌசல்யா
//உங்க வீட்டு இளவரசிக்கு இன்னைக்கு ஏதும் ஸ்பெஷல் கவனிப்பு உண்டா...???//
வெறும் கையோட போய் வாய் நிறைய வாழ்த்திட்டு வயிரு நிறைய கேக் சாப்பிட்டு வருவேன்.. :))
@இம்சை
//தந்தை என்ற சொல் இது
மந்தை கூட்டம் என்று சொல்லும் சொல் அல்ல .....//
என்ன மக்க சொல்றிங்க?? ஒன்னும் விளங்கள. இந்த ப்ளாக் பக்கம் போகாதிங்க சொன்ன கேக்கனும்... :)))
//அப்பா என்று என் மகள்
தப்பாமல் ஒவ்வொரு முறை கூப்பிடும் பொழுதும்//
பின்ன மாமானா கூப்பிடும்...:)))
//வெறும் கையோட போய் வாய் நிறைய வாழ்த்திட்டு வயிரு நிறைய கேக் சாப்பிட்டு வருவேன்.. :)) //
சாப்பிடரதுலேய குறியா இரு மக்கா ......சரி ஏதோ குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி கொடு மக்கா......சும்மா வெறும் கை வீசிட்டு போகாதே
@இம்சை
//வாங்கி கொடு மக்கா......//
அன்பா சொன்னாலும் ஆசிட் குடிக்க மாட்டேன்.... :))
வாசல்ல கோலம் போட்டு வச்சா... இங்க வந்து கும்மியா.... ?????
டேய் தம்பி இம்சை....
ஏன் இந்த கொல வெறி....?????
//டேய் தம்பி இம்சை....
ஏன் இந்த கொல வெறி//
ஐயோ நீங்க என் இங்க வந்தீங்க .......நாங்க வேற ப்ளோக்ல இருந்த எல்லோரும் வந்துருவாங்க ன்னு தனிய நான்,டெர்ரர் ,சகோ மூன்று பெரும் மட்டும் தான் .......தப்பாக நினைக்க வேண்டாம் அண்ணா .....குட்டி மக்கா க்கு என்ன வாங்கி கொடுத்தீங்க ..............
அக்சஷயாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை இங்கும் கூறிக்கொள்கிறேன்.... கவிதை வாழ்த்து அருமை!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
//அன்பா சொன்னாலும் ஆசிட் குடிக்க மாட்டேன்.... :))//
ஆசிட் வாங்கிட்டு போய்டாதீங்க ...........
.ஆரஞ்சு வாங்கிட்டு போங்க ...............
அழகுக்குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
கவிதை அழகு.அக்ஷயாவிற்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
செல்லக் கண்மணிக்கு இனிய வாழ்த்துகள் !
கவிதை தாலாட்டுது கௌசி !
// கவிதைகள் சொல்லிவிட்டது என்னிடம்
அந்த ரகசியத்தை
நீ பிறந்த பின்பே கவி புனைய
தொடங்கினாராம் உன் தந்தை ! //
முதலில் ஒன்றும் புரியவில்லை... படித்து முடிக்கும்போதே புரிய வந்தது...
வாழ்த்துக்கவிதை ரொம்ப நல்லாயிருக்கு....
தேவா அண்ணாவின் செல்லக்குட்டிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
கவிதை அழகுங்க.....
அக்ஷயாவுக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....
அக்க்ஷயவிற்கு என் பிறந்தநாள் நல் வாழ்த்துகள்...
Post a Comment