எங்கிருந்தோ வந்து
இதோ இருக்கிறேன் என்றாய்
அன்பை வாரி இறைத்து
என் இதயம் கவர்ந்தாய்
பேசாத நாட்களிலும்
மயிலிறகாய் என் இதயம்
தொட்டு செல்வாய் !
முதல் முறை
உன் குரல் கேட்டு
மிக வியந்தேன்
என் இரு
காதில் ஒலித்தது
வீணையின் நாதமா
காயத்ரி மந்திரமா
குழந்தையாய் நீ
சிணுங்கும் சிணுங்களில்
அள்ளி கொஞ்ச தோன்றுமடி
என் செல்லமே !
உனக்கு பிறந்தநாளாம்
ஆனந்தத்தில் வாழ்த்த
வார்த்தை வரவில்லையடி
அழகு தேவதையே !
உன் தாயை
வாழ்த்துகிறேன்
நான் கேளாமல்
தங்கை என்ற பொக்கிஷத்தை
அள்ளி தந்தவள் அல்லவா !
நம்மை இணைத்தது
இணையமா
இதயமா ?!
இன்று உனக்கு பிறந்த நாள்
உன்னை வாழ்த்தவா
இந்த நாளை வாழ்த்தவா
நீ மட்டுமா பிறந்தாய்
உன்னுடன் கவிதையும் !
இல்லை நீயே கவிதை
உயிருள்ள கவிதை நீ !!
இன்று பிறந்த நாள் காணும் என் அருமை தங்கை காயத்ரியை (கவிநா) வாழ்த்துகிறேன். வாழ்வில் பல செல்வங்களை குறைவின்றி பெற்று நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
17 comments:
..உன் தாயை
வாழ்த்துகிறேன்
நான் கேளாமல்
தங்கை என்ற பொக்கிஷத்தை
அள்ளி தந்தவள் அல்லவா !
நம்மை இணைத்தது
இணையமா
இதயமா ?! ..
நச்சுன்னு ஒரு கவிதை...
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
உங்களுக்கு பாராட்டு...
அவங்களுக்கு வாழ்த்துக்கள்.
அட....கவித, கவித! பிரமாதம் தோழி.....
//பேசாத நாட்களிலும்
மயிலிரக்காய் என் இதயம்
தொட்டு செல்வாய் ! //
என்னை கவர்ந்த வரிகள்.....
பத்மஹரி
http:padmahari.wordpress.com
arumaiyana kavithai. piranthanaal vaazththukkal
ரொம்ப சந்தோசம் அக்கா.... உங்களின் இந்த கவிதை வாழ்த்துகளுக்கு....
நான் ரொம்ப நெகிழ்ந்துட்டேன்.
மிக்க நன்றி அக்கா....
வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
வாழ்த்துக்கள்!!!
அருமையான கவிதை!!!
Beautiful way to wish her. Very nice.
Convey my birthday wishes to Gayathri!
காயத்ரி-க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
அழகு பரிசு, உங்க கவிதை கௌசல்யா :)
ம்ம் நல்ல விசயம்..கவிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்...இனிவரும் நாட்கள் வாழ்க்கையில் எல்லாமே நலமானதாக அமையட்டும்...
தங்களை tamilrockzs official வலைப்பூ குழுமத்தில் பெருமையுடன் அறிமுக படுத்தி இருக்கிறோம் .
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள் . தங்கள் வரவை எதிர் பார்க்கும் நல்ல உள்ளங்கள் .
பதிவுலகில் பெண்கள் ...... ( http://tamilrockzs.blogspot.com/2011/03/blog-post_28.html )
நன்றி ,
அன்புடன் ,
Admin
www.tamilrockzs.com
www.tamilrockzs.blogspot.com
அன்புள்ள தெய்வசுகந்தி, சித்ரா, ஆனந்தி, கணேஷ், அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....
இத்தனை வாழ்த்துக்களையும் நான் பெறக் காரணமான இனிய அக்காவுக்கு என் செல்ல நன்றிகள்... :))))
காயத்ரி-க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
அழகான கவிதையையே பரிசளித்து விட்டீர்கள். அருமை.
இணையம் நம்மைப் பிணைத்தது இதயத்தால் அணைத்தது
கவிதை அருமை... பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அருமை டியர் தங்ஸ்!
Post a Comment