ஒருவர் மேல் ஒருவருக்கு அன்பு இருப்பதால் தான் இந்த மானுடம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. அன்பிற்கு பல அர்த்தங்கள், அதில் ஒன்று காதல். மற்றவர்களுக்கு எப்படியோ எனக்குள் இருக்கும் காதல் தினம் புதிதாய் என்னை பூக்கவைத்து பார்த்து ரசித்து கொண்டாடுகிறது...!
சில சமயம்,
ஒரு கவிதையில்
அடைத்துவிட முடிவதில்லை
என் காதலை !
தவிரவும் எந்த ஒரு கவிதையும்
முழுமையாய்
சொன்னதும் இல்லை
என் காதலை !!
வெறும் மாம்சங்கள் மீதான காதல் அல்ல, இரு ஆன்மாவிற்கும் இடையேயான உறவு அல்லவா ?!
பிறர் நம்மை நேசிப்பதில் மட்டும் நேசம் இல்லை
நாமும் நேசிப்பதில் இருக்கிறது.....! அன்பை கொடுக்கவும், எடுக்கவும் எனக்கு இருக்கும் உரிமை பறிபோகாதவரை நான் நேசிப்பேன் என்பது ஒரு விதம், உரிமை இல்லாமல் போனாலும் நேசிப்பேன் இது என் நேசம்.....!
நேசிப்பதற்கும், நேசிக்கபடுவதிற்க்கும் பெரிய தேவைகள், எதிர்பார்ப்புகள் வேண்டியதில்லை, தூய்மையான அன்பு இருந்தால் போதும்.
எனக்கு பிடித்த இசையாய், பாடலாய் எனக்குள்ளே தாலாட்டி என்னை உறங்க வைக்கிறது என் காதல் ......ஒரு தாய் போல் தேற்றுகிறது.....சில நேரம் அழவும் வைக்கும், பின் பிறர் அறியா வண்ணம் வந்து கண்ணீரை துடைத்து விட்டும் செல்லும்...!?
வருடம் ஒன்று கூடினாலும் வயதை குறைக்கிறது என் காதல் !!
வருடம் ஒன்று கூடினாலும் வயதை குறைக்கிறது என் காதல் !!
காதலில் தோல்வி
சாத்தியம் இல்லை
ஒரு முறை
பெற்ற வெற்றிக்கு
தெரியாது
தோல்விக்கு அர்த்தம் !
பறக்க தெரியும்
திசை தெரியாது
இலவம் பஞ்சாம்
என் காதல் !!
எனை ஆளும் திமிரே ! வசந்தத்தை அறிமுகம் செய்தாய் என்றே இருந்தேன் வசந்தமே நீ என்பதை உணராமல்...!
நேசம் என்ற பெயரில் எப்போது விழுந்தாய் என்னுள் !?
சரியாய் அந்நேரம் நான் பிறந்திருப்பேனோ !?
காதலுக்கு புது அர்த்தம் சொல்றோம்...நம் நேசம் காதலின் வரையறைக்குள் அடங்காது எனினும் இதன் எல்லைகளை நாமே வரையறுத்தோம் ....சராசரி காதலின் விதிகளுக்கு முரண் பட்டதாலேயே இது கண்ணிய காதலாக இருக்கிறது !
சராசரி காதலர்கள் அல்ல
காதலும் சராசரி அல்ல
எது சரி
கேள்வி எழவில்லை
எல்லாம் சரி என்கிறது என் காதல் !!
அடங்க மறு அத்து மீறு
என்கிறது கம்யூனிசம் !
அத்து மீறாமல் அடங்கி போ
என்கிறது என் நேசம் !!
தோற்க பிடிக்கிறது
உன்னிடம் மட்டும்
உன் வெற்றி ரசிக்க !
சரணடைய பிடிக்கிறது
சமாதானத்திற்கு அல்ல
மறுபடி
செல்லச்சண்டை போட !
விலகி இருக்க
எண்ணம் வந்த
மறுநொடி
அதிகமாய்
நெருங்குவேன் உன்னை !!
பல கவிதைகளில் நான் அள்ளி இறைத்த காதலை, மௌனமாய் உள் வாங்குவாய் ஒரு ஓரமாய் நின்று, தவறியும் உன் இதழ் உச்சரித்ததில்லை 'நேசிக்கிறேன் உன்னை' என்று !
நான் புரிந்து கொள்வேன், அழுத்தமாய் என் பெயர் சொல்லி அழைக்கும் போது அதை தான் நீ சொல்கிறாய் என்று !!
இரு
தீக்கடைக்கோல்
உரசி
பனி மழை
பொழிகிறது !?
மீண்டும் மற்றொரு கவிதையில் சந்திப்போம்.....
12 comments:
ஒன்னும் பண்ண முடியாது முத்தி போச்சி....
//அடங்க மறு அத்து மீறு
என்கிறது கம்யூனிசம் !
அத்து மீறாமல் அடங்கி போ
என்கிறது என் நேசம் !//
அமைதியாக இரு
பிறரையும் நேசி என்று சொல்லி தந்தது என் அம்மாவின் பாசம்
தோற்க பிடிக்கிறது
உன்னிடம் மட்டும்
உன் வெற்றி ரசிக்க !
சரணடைய பிடிக்கிறது
சமாதானத்திற்கு அல்ல
மறுபடி
செல்லச்சண்டை போட !
விலகி இருக்க
எண்ணம் வந்த
மறுநொடி
அதிகமாய்
நெருங்குவேன் உன்னை !!
இந்த வரிகள் என் மனதை வெளிப்படுத்துகிறது.
அற்புதம்..
எப்போதுமே உங்க காதல் அழகு இப்போ புதுப்புது சொற்களில் இன்னும் மிளிர்கிறது சகோ!
//இரு
தீக்கடைக்கோல்
உரசி
பனி மழை
பொழிகிறது !? //
என்ன சொல்ல சகோ! சூப்ப்ப்ப்பர்! :)
தலைப்பிலேயே முத்திரை பதிச்சிட்டீங்க....
ரொம்ப நல்லா எழுதுறீங்க...
//அடங்க மறு அத்து மீறு
என்கிறது கம்யூனிசம் !
அத்து மீறாமல் அடங்கி போ
என்கிறது என் நேசம் !!//
நல்ல ரசனை..
டெம்ப்லேட்,எழுத்து எல்லாமே புதிய மாற்றத்துடன் அருமை.
கௌசி....சொல்லாத காதலுக்கே இத்தனை கவிதைகள்.
சொல்லிவிட்டால்....தாங்காது தாயே !
..விலகி இருக்க
எண்ணம் வந்த
மறுநொடி
அதிகமாய்
நெருங்குவேன் உன்னை !!..
கவிதையில் கொன்றுவிட்டீர்கள்...
நச் நச்சுன்னு இருக்கு வரிகள்...
//பறக்க தெரியும்
திசை தெரியாது
இலவம் பஞ்சாம்
என் காதல் !! //
சூப்பர் வரி :-)
அனைத்து வரிகளும் அருமை....
"விலகி இருக்க
எண்ணம் வந்த
மறுநொடி
அதிகமாய்
நெருங்குவேன் உன்னை !!"
என்னை அதிகம் கவர்ந்த வரிகள் கெளசல்யா. எங்க நம்ம பக்கம் காணவே இல்லை...
அருமையான வரிகளையும் இணைத்துப் பகிர்ந்துள்ளது மிக மிக நல்லாயிருக்கு....
Post a Comment