வார்த்தைகளற்ற வெற்றிடத்தை
உன் நினைவுகள் இட்டு
நிரப்புகின்றேன் !
அந்நினைவுகள் கொன்று
மௌனவலிக்கு மருந்திட்டு
ஆற்றுகிறேன் !
நம் புரிதல் பெரிது
என் இறுமாப்பை உடைத்தெறிந்தது
இப்போது விழுந்த மெல்லிய திரை
திரை கிழித்தெறிய
உரிமையில்லை எனக்கு
மனமில்லை உனக்கு !
எனக்கு பிடிக்காத மௌனம்
உனக்கு பிடிப்பதால்
ஏற்று கொள்கிறேன்
உயிர் வதைக்கும் வலியை !
என்னிடம் இருக்கட்டும்
உன்னை பற்றிய கற்பனைகள்
அழிக்க சொல்லிவிடாதே
அதையும் !
எனது உயிர் இயக்கம்
நடந்தாக வேண்டும்
என்னிதயம் சுற்றுகிறது
உன்னை !
சிற்பி நீ தரும்
மௌன வலி பொறுத்து
சிலை ஆவேனே தவிர
வலி பொறுக்காமல்
மிதிபடும் வாயிற்படி
கல்லாக மாட்டேன் நான் !
மன்னித்துவிடு
நாம் பேசாத போது
என் பேனா பெரும்பாலும்
இப்படிதான் எழுதுகிறது !
**************
22 comments:
அருமையான காதலுங்க வாழ்த்துகள்...
நன்றி
http://hafehaseem00.blogspot.com/2011/03/blog-post_26.html
”..எனக்கு பிடிக்காத மௌனம்
உனக்கு பிடிப்பதால்
ஏற்று கொள்கிறேன் ..”
நல்ல கவிதை
//சிற்பி நீ தரும்
மௌன வலி பொறுத்து
சிலை ஆவேனே தவிர
வலி பொறுக்காமல்
மிதிபடும் வாயிற்படி
கல்லாக மாட்டேன் நான் !//
நச்
கௌசி...எனக்கே கஸ்டமாயிருக்கு.இதற்குப்பிறகும் இந்த மௌனம் உடையாவிட்டால்....
கல்லுளிமங்கன்(ர்)!
சிற்பி நீ தரும்
மௌன வலி பொறுத்து
சிலை ஆவேனே தவிர
வலி பொறுக்காமல்
மிதிபடும் வாயிற்படி
கல்லாக மாட்டேன் நான் !
...simply superb!
நல்ல கவிதை.
சிற்பி நீ தரும்
மௌன வலி பொறுத்து
சிலை ஆவேனே தவிர
வலி பொறுக்காமல்
மிதிபடும் வாயிற்படி
கல்லாக மாட்டேன் நான் !
இப்படி எல்லாம் எனக்கு எழுத தெரியவில்லையே
வார்த்தைகளற்ற வெற்றிடத்தை
உன் நினைவுகள் இட்டு
நிரப்புகின்றேன் !
அந்நினைவுகள் கொன்று
மௌனவலிக்கு மருந்திட்டு
ஆற்றுகிறேன் !//
நினைவுகளுக்கு இந்தளவு சக்தி உள்ளதென்பதை கவிதையின் முதல் வரியில் சொல்லியிருக்கிறீர்கள்.
நம் புரிதல் பெரிது
என் இறுமாப்பை உடைத்தெறிந்தது
இப்போது விழுந்த மெல்லிய திரை
திரை கிழித்தெறிய
உரிமையில்லை எனக்கு
மனமில்லை உனக்கு !//
புரிந்துணர்வால் ஏற்பட்ட காதலைப் புதுமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். காதலில் பிரிந்து செல்ல யாருக்குத் தான் மனம் வருமோ?
எனக்கு பிடிக்காத மௌனம்
உனக்கு பிடிப்பதால்
ஏற்று கொள்கிறேன்
உயிர் வதைக்கும் வலியை !//
வலிகளைக் கூட மறக்கச் செய்யும் மருந்து மௌனம் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
என்னிடம் இருக்கட்டும்
உன்னை பற்றிய கற்பனைகள்
அழிக்க சொல்லிவிடாதே
அதையும் !//
பிரிவில் கொடியது, நினைவுகளுடன் வாழ்வது, ஆனாலும் நினைவுகளை அழிக்க வேண்டாம் எனுன் உணர்வின் மூலம் காதல் நினைவிகளைப் பாதுகாக்க விரும்பும் உங்களின் கற்பனையினை ரசிக்கிறேன்.
சிற்பி நீ தரும்
மௌன வலி பொறுத்து
சிலை ஆவேனே தவிர
வலி பொறுக்காமல்
மிதிபடும் வாயிற்படி
கல்லாக மாட்டேன் நான் !//
புதுமைப் பெண்ணின் உணர்வுகளைச் சொல்லியுள்ளீர்கள். அருமையான வரிகள்.. வாயிற்படி கல்லாக மாட்டேன்..
அடங்கிப் போக மாட்டேன் என்பதனை உணர்த்துகிறது. இந்த துணிவு ஏனைய பெண் எழுத்தாளர்களுக்கும் வர வேண்டும்!
மன்னித்துவிடு
நாம் பேசாத போது
என் பேனா பெரும்பாலும்
இப்படிதான் எழுதுகிறது !//
அருமையான கவிதையினை எழுதி விட்டு, மன்னித்து விடு என இறுதியில் சேர்ப்பது கவிதையின் அர்த்தத்தினைக் குறைத்துக் காட்டுகிறது எனலாம். காரணம் மன்னித்து விடு- நீங்கள் கவிதையில் கூறிய புரட்சிகரமான கருத்துக்களையெல்லாம் இறுதியில் சரணாகதி அடைந்து பொய்ப்பிப்பது போலக் காட்டுகிறது.
பேசாத போது, அடிமைத் தளையுடைத்து, சமூகத்தில் நிமிர்ந்து வாழ நினைக்கும் பெண்ணின் காதல் வார்த்தைகளைச் சொல்லி நிற்கிறது.
>>> என்னிடம் இருக்கட்டும்
உன்னை பற்றிய கற்பனைகள்
ஆஹா.. முப்பொழுதும் அவர் கற்பனைகள்..??
@@ நேசமுடன் ஹாசிம்...
முதல் வருகைக்கு நன்றிங்க
:))
@@ Dr.எம்.கே.முருகானந்தன்...
ரசனைக்கும் வருகைக்கும் மிக்க நன்றிங்க.
@@ jothi...
நன்றி நண்பரே.
@@ ஹேமா கூறியது...
//எனக்கே கஸ்டமாயிருக்கு.இதற்குப்பிறகும் இந்த மௌனம் உடையாவிட்டால்....
கல்லுளிமங்கன்(ர்)!//
அழகான பேர் கல்லுளிமங்கன்(ர்) !! மௌனம் உடையலைனா என்ன பண்ணலாம் ஹேமா அதையும் சொல்லி இருக்கலாமே ?! :))))
உரிமையா தட்டி கேட்க தோழி இருக்கிறப்போ எனக்கு என்ன கவலை ?!
:)))
நன்றி தோழி.
@@ FOOD...
மகுடம் என்று பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க...! :))
நன்றி அண்ணா
@@ Chitra...
ரசனைக்கு நன்றி சித்ரா.
:))
@@ சே.குமார்...
நன்றி குமார்.
@@ mahavijay கூறியது...
//இப்படி எல்லாம் எனக்கு எழுத தெரியவில்லையே//
ஏன் மகா இப்படி ...?! :))
அழகா வருத்த படுறீங்க. முயற்சி பண்ணி பாருங்க. ஆரம்பத்தில் சும்மா பேசுற மாதிரி எழுதிட்டு இருந்தேன்...அப்புறம் நம்ம நட்புகள் உசுப்பேத்தி இந்த அளவு கொண்டு வந்திருக்காங்க....:))
நன்றி மகா
@@ நிரூபன்...
//அருமையான கவிதையினை எழுதி விட்டு, மன்னித்து விடு என இறுதியில் சேர்ப்பது கவிதையின் அர்த்தத்தினைக் குறைத்துக் காட்டுகிறது எனலாம். காரணம் மன்னித்து விடு- நீங்கள் கவிதையில் கூறிய புரட்சிகரமான கருத்துக்களையெல்லாம் இறுதியில் சரணாகதி அடைந்து பொய்ப்பிப்பது போலக் காட்டுகிறது.//
நிரூபன் உங்களின் வரிக்கு வரியிலான கவிதை ரசனை என்னை மிகவும் ஆச்சரிய படவைக்கிறது. பிற தளங்களிலும் உங்களின் பின்னூட்டங்கள் சிறப்பாக இருக்கின்றன. பதிவிற்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை பாராட்டுகிறேன்.
எனது இந்த கவிதையை பொருத்தவரை ஆரம்பத்தில் 'பேசாதபோது ஏற்படும் வலியை தாங்கி கொள்வேன் , ஆனால் அதற்காக ஒரேயடியாக உடைந்து போய்விட மாட்டேன் என்று தன் குணத்தை வெளிபடுத்தும் காதலி, இறுதியில் தன் அதீத அன்பின் காரணமாக கவிதை கூட தன் காதலனின் மனதை வேதனை படுத்திவிட கூடாது என்பதை எண்ணி 'மன்னித்துவிடு, இதற்கு காரணம் நான் இல்லை என் பேனா' என்று சொல்லி முடிக்கிறாள் !!
எப்படி பட்ட புரட்சி பெண்ணாக இருந்தாலும் தன் மனதிற்கு பிடித்தவனின் அன்பிற்கு முன்னால் அமைதியாகி விடுவாள். இது பெண்மையின் உண்மை!!
நிரூபன் இந்த விளக்கம் உங்களுக்கு திருப்தியா ? :))
என் கவிதைகளை செதுக்க உங்களின் கருத்துக்கள் மிக அவசியமாக இருக்கிறது !
நன்றிகள் பல.
@@ சி.பி.செந்தில்குமார் கூறியது...
//ஆஹா.. முப்பொழுதும் அவர் கற்பனைகள்..??//
அதே அதே !! நன்றிங்க. :))
//நம் புரிதல் பெரிது
என் இறுமாப்பை உடைத்தெறிந்தது
இப்போது விழுந்த மெல்லிய திரை
திரை கிழித்தெறிய
உரிமையில்லை எனக்கு
மனமில்லை உனக்கு !//
கலக்கல் அக்கா.... அருமையான வரிகள்.
//மன்னித்துவிடு
நாம் பேசாத போது
என் பேனா பெரும்பாலும்
இப்படிதான் எழுதுகிறது !//
பிரிவிலும் உங்கள் காதல் உள்ளம் கவிதை வடிக்கிறது.
உங்கள் எண்ணத்துக்கும், எழுதுகோலுக்கும் உறவு உறுதியாக இருக்கிறது போல. இரண்டிலும் ஓடுவது ஒரே ரத்தமோ!!!
வெகு அருமை அக்கா...
Post a Comment