ஆசையாய் அள்ளி பருகுவேன்
அது தந்த மயக்கத்தில்
வரும் என் உளறல்கள்
உன் செவி சென்று சேருமோ
வழியில் மதிமயங்கி
கிடக்குமோ !
நேசத்தால்
தொட்டில் கட்டி
என்னை
குழந்தையாக்கி
குழந்தையாக்கி
உறங்கவைத்து
நீ விழித்திருக்கிறாய்
இன்னொரு விடியலாய் !
என் சிறுபிள்ளை
பேச்சை
பொறுமையாய்
உள்வாங்கும் உன் முன்
மண்டியிட
தோன்றுகிறதே என் அன்பே.....
விஸ்வரூபமெடுத்து
நிற்கும் உன்முன்
சிறகுகள் வேண்டி காத்திருந்தேன்
பிறிதொரு சந்தர்ப்பத்தில்
நெடுந் தவத்தின் முடிவில்
சிறகுகள் பூட்டிவிட்டாய்
எனக்கான வெளி
கண் முன் விரிய
கண் முன் விரிய
மூடியிருந்த கட்டுகள் உடைத்து
தழுவியிருந்த வாதைகள் உதறி
உற்சாகமாய்
பறக்கத் துடித்தேன்
இருந்தும் இயலவில்லை
விட்டுவிடேன்...
நீ பிடித்து
வைத்திருக்கும்
என் மனதை !
11 comments:
..விட்டுவிடேன்...
நீ பிடித்து
வைத்திருக்கும்
என் மனதை ! ..
இப்படி ஓர் அற்புதமான கவிதையை படித்து விட்டு எப்படி விட முடியும்
இந்த கவிதை பிடித்து விடும் எல்லோரின் மனதையும்.
//நேசத்தால்
தொட்டில் கட்டி
என்னை
குழந்தையாக்கி
உறங்கவைத்து
நீ விழித்திருக்கிறாய்
இன்னொரு விடியலாய் !//
Arumai... Kavithai romba nalla irukku.
அருமை..வாழ்த்துகள்!
நல்லா இருக்குங்கக்கா.... வாழ்த்துகள்..
//விட்டுவிடேன்...
நீ பிடித்து
வைத்திருக்கும்
என் மனதை ! //
வார்த்தைகள் சொன்னாலும் மனது ஏங்குமே! :)
காதல் கொட்டிக் கிடக்கு....எப்பிடி விடுறது கௌசி !
//விஸ்வரூபமெடுத்து
நிற்கும் உன்முன்
சிறகுகள் வேண்டி காத்திருந்தேன்
பிறிதொரு சந்தர்ப்பத்தில்
நெடுந் தவத்தின் முடிவில்
சிறகுகள் பூட்டிவிட்டாய்///
....ரொம்ப நல்லா இருக்குங்க.. :-))
காதல் நிரம்பி வழிகிறது கவிதையாய்
வாழ்த்துக்கள்
விஜய்
விட்டுவிடேன்...
நீ பிடித்து
வைத்திருக்கும்
என் மனதை !
சூப்பர்
ஃஃஃஃஃபிறிதொரு சந்தர்ப்பத்தில்
நெடுந் தவத்தின் முடிவில்
சிறகுகள் பூட்டிவிட்டாய்ஃஃஃஃ
அருமை அருமை நல்ல உணர்வொடு பகிர்ந்திருக்கிறிர்கள்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.
Post a Comment