எனக்குள்...!



                                            தகிக்கும்  என் 
                                            தனிமைக்கு  
                                            தீர்வு கேட்டேன் உன்னிடம் 
                                            வருந்தாதே பேசுகிறேன் 
                                            என தொலைபேசி, எதிர்பாரா பொழுதில் 
                                            என் உயிர் கொய்து 
                                            சிரித்து கொண்டே செல்கிறாய் !


                                            மீண்டும் 
                                            உன் மன கருவறையில் ஜனித்து 
                                            உன் விழி பார்வையால் பிறக்கின்றேன் 
                                            மரிக்கிறேன் பின் பிறக்கிறேன்
                                            உன்னால் எனக்குள் 
                                            எத்தனை இறப்புகள் ? 
                                            எத்தனை பிறப்புகள் ?


                                            உன் நினைவு பூக்களின் வாசம் 
                                            என் சுவாசம் !
                                            நான் உலகை நீங்கிய பின்னும் 
                                            என் காதலை 
                                            கவிதையில் வாழவைக்கும் 
                                            இணையம் 
                                            குலதெய்வமாகி போனதே !!

                                          
                                            *************


                                            காதல் 
                                            பலரை சிதைக்கும்
                                            என்னை செதுக்குகிறது
                                            காதலன் நீ என்பதால் !!


                                            *************



                                          

18 comments:

>>>>கவிதையில் வாழவைக்கும்
இணையம்
குலதெய்வமாகி போனதே !!

sema செம லைன்

 

..காதல்
பலரை சிதைக்கும்
என்னை செதுக்குகிறது
காதலன் நீ என்பதால் !!..

நச் கவிதை...

 

காதல்
பலரை சிதைக்கும்
என்னை செதுக்குகிறது
காதலன் நீ என்பதால் !!


...Superb!

 

//காதல்
பலரை சிதைக்கும்
என்னை செதுக்குகிறது
காதலன் நீ என்பதால் !!//
பிரமாதம்

 

தங்களை tamilrockzs official வலைப்பூ குழுமத்தில் பெருமையுடன் அறிமுக படுத்தி இருக்கிறோம் .
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள் . தங்கள் வரவை எதிர் பார்க்கும் நல்ல உள்ளங்கள் . . .
Blog : பதிவுலகில் பெண்கள் ...... ( http://tamilrockzs.blogspot.com/2011/03/blog-post_28.html )

நன்றி ,
அன்புடன் ,
Admin

www.tamilrockzs.com

www.tamilrockzs.blogspot.com

 

..காதல்
பலரை சிதைக்கும்
என்னை செதுக்குகிறது
காதலன் நீ என்பதால் !!..

பெண்ணின் பார்வையில்... அற்புதம்

 

//காதல்
பலரை சிதைக்கும்
என்னை செதுக்குகிறது
காதலன் நீ என்பதால் !//


ரொம்ப ரசித்து எழுதிருக்கீங்க

 

எதிர்பாரா பொழுதில்
என் உயிர் கொய்து
சிரித்து கொண்டே செல்கிறாய் !//

காதலில் பார்வைகளின் பங்கினை அற்புதமாக விளித்திருக்கிறீர்கள்.

 

நான் உலகை நீங்கிய பின்னும்
என் காதலை
கவிதையில் வாழவைக்கும்
இணையம்//

காதலின் காற் தடங்கள் இணையத்தினூடாக இனி வரும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதனை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..

 

காதல்
பலரை சிதைக்கும்
என்னை செதுக்குகிறது
காதலன் நீ என்பதால் !!//

இதுவே இக் கவிதையின் உயர்ச்சி.

எனக்குள் ஒரு பெண்ணின் மனதில் எழும் காதல் பற்றிய எண்ண அலைகளை அழகாக வெளிப்படுத்தி நிற்கிறது.

 

நல்லாருக்குங்க

வாழ்த்துக்கள்

விஜய்

 

நல்லாருக்குங்க

வாழ்த்துக்கள்

விஜய்

 

@@ சமுத்ரா...

நன்றி.



@@ சி.பி.செந்தில்குமார்...

நன்றிங்க


@@ சங்கவி...

நன்றி சதீஷ்


@@ Chitra...

நன்றி சித்ரா

 

@@ Nagasubramanian...

உங்களின் முதல் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி.


@@ TamilRockzs...

என்னை அறிமுக படுத்தியதுக்கு ரொம்ப நன்றிங்க.



@@ அசோக் குமார்...

உங்களின் முதல் வருகை என்று எண்ணுகிறேன், நன்றிங்க


@@ sulthanonline...

நன்றி சகோ.

 

@@ நிரூபன்...

//காதலின் காற் தடங்கள் இணையத்தினூடாக இனி வரும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்//

நிரூபன் இது என்னவொரு அற்புதம் ?! காகிதங்களில் எழுதினாலும் அழிந்துவிட கூடும்.

ஆனால் இணையம் நம் வாரிசுகளும் பார்க்குமே...நம்ம பாட்டி இப்படி எல்லாம் எழுதி இருக்காங்க என்று !! :)))

உங்களின் தொடரும் ரசனைக்கு மிக மகிழ்கிறேன், நன்றி நிரூபன்.

 

@@ விஜய்...

நலமா ?

ரசனைக்கு நன்றி.

 

@@ FOOD கூறியது...

//எல்லாரும் பாராட்டி இருப்பதால் மட்டும் பாராட்டவில்லை. என்னை மிகவும் ஈர்த்த வரிகள்//

ஆமாம் அண்ணா எனக்கும் ரொம்ப பிடிக்கும், மிக உணர்ந்து எழுதிய வரிகள் !!

நன்றி அண்ணா