காலை விழித்ததும்
முதலில் உன் விழி பார்க்கும்
உள்ளங்கை ரேகையாய் !
குளியலில்
உன் இதயம் தொட்டு
வழிந்தோடும் நீராய் !
அலைபாயும்
உன் அழகு தலை முடி
கோதும் சீப்பின் விரலாய் !
அணியும் உடையின்
இணைப்பில் பிரிந்திருக்கும்
சிறு நூல் இழையாய் !
அவசரமாய் உண்ணும்
காலை உணவின்
ஒரு துளி உப்பாய் !
பயண வழி நெடுகிலும்
பயண வழி நெடுகிலும்
உன்னை தழுவி செல்லும்
குளிர்காற்றாய் !
இன்னும் எதிர்படும்
யாவுமாய் நான் மாற
யாவுமாய் நான் மாற
15 comments:
உங்களின் கவிதையில் மனித மனதின் மெல்லிய உணர்வூட்டம் செறிந்து கிடக்கிறது. ஒவ்வொரு அசைவிலும் நான் இருக்க விரும்புகிறேன் என்பதை எடுத்தியம்பும் விதம் அருமை.
அன்பின் வெளிப்பாடு அழகு.
மென்மைகள் எப்போதும் மென்மையாய் இருப்பதில்லை.
காதல் பேசும் கவிதை அழகு. கவிதை பேசும் காதல் சிலிர்ப்பு. நினைக்கும் மனம் இனிக்க ஒரு முறையேனும் கவிதையை காதலிக்கட்டும்.
காதல் தோற்பதுமில்லை. வெல்வதுமில்லை.
வாழ்க்கை பந்தயமல்ல.
sweet and lovely.
ஏதாச்சும் ஒண்ணு வச்சி வருத்தபடணும்னு தான் உங்க எண்ணமா.??? ஹி ஹி
நல்லாயிருக்கு.கௌசல்யா.
ஒவ்வொரு கவிதையும் உணர்ந்து எழுதப்பட்டிருக்கிறது அருமை . பகிர்வுக்கு நன்றி
கௌசி...உங்க அன்பை நினைச்சு பெருமைப்படவா இல்ல பொறாமைப்படவான்னு இருக்குப்பா !
நீங்க அவரைக் கேட்டுப்ப்பாருங்க.இப்பவே நீங்க அவருக்கு எல்லாமாவாத்தான் இருப்பீங்க.அடுத்தபிறவிக்கு இப்பவே ஐடியாவா....தொடரட்டும் காதல்.அதன் ஆழ அன்பு !
முதல் கவிதை மிகவும் ரசனை..!
@@ தமிழ்க் காதலன். கூறியது...
//மென்மைகள் எப்போதும் மென்மையாய் இருப்பதில்லை.//
//நினைக்கும் மனம் இனிக்க ஒரு முறையேனும் கவிதையை காதலிக்கட்டும்.//
உங்களின் கவிதை ரசனை அழகு. மிக ரசிக்கிறேன் உங்களின் பின்னூட்டத்தையும்.
நன்றி ரமேஷ்.
@@ Chitra...
நன்றி தோழி. உங்கள் வேலை நடுவிலும் இங்கே வந்ததிற்கு மகிழ்கிறேன்.
@@ தம்பி கூர்மதியன் கூறியது...
//ஏதாச்சும் ஒண்ணு வச்சி வருத்தபடணும்னு தான் உங்க எண்ணமா.??? //
ம்...அப்படியே தான். :)))
நன்றி கூர்மதியன்
@@ asiya omar...
ரசனைக்கு நன்றி தோழி.
@@ FOOD...
நன்றி அண்ணா.
@@ !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர்...
உங்களின் வரவிற்கும் ரசனைக்கும் மகிழ்கிறேன்
நன்றி
@@ ஹேமா கூறியது...
//கௌசி...உங்க அன்பை நினைச்சு பெருமைப்படவா இல்ல பொறாமைப்படவான்னு இருக்குப்பா !//
என்ன ஹேமா இப்படி எல்லாம்...?! :)) ஒன்னு பண்ணுங்க , சந்தோசபடுங்க அது போதும்...சரியா ?? :)))
//நீங்க அவரைக் கேட்டுப்ப்பாருங்க.இப்பவே நீங்க அவருக்கு எல்லாமாவாத்தான் இருப்பீங்க.//
உடனே கேட்டுவிடுகிறேன். :))
//அடுத்தபிறவிக்கு இப்பவே ஐடியாவா....தொடரட்டும் காதல்.அதன் ஆழ அன்பு !//
எத்தனை பிறவினாலும் விடக்கூடாது தோழி... :))
நன்றிப்பா
@@ ப்ரியமுடன் வசந்த்...
உங்களின் வருகைக்கும், ரசனைக்கும் நன்றி
Post a Comment