சொற்கள் கூடிக் களித்தே
பிரசவிக்கின்றன
கவிதைகள்...
கவிதைகள்
கொஞ்சிப் பேசி வளர்த்தன
காதல்...
காதல்
ரசித்து கொண்டாடின
இரு உள்ளங்கள்...
இரு உள்ளங்கள்
கூடிக் களித்து பிரசவிக்கின்றன
கவிதைகள்...
மீண்டும்.....தொடருகின்றன
கவிதைகளும் காதலும் !!
************
கார் கதவில்
படிந்த தூசி
பிடித்திருக்கிறது
உன் பெயர் எழுதி
தூசி விலக்கி
பதிந்து கொண்டேன்
உன்னை !
காசோலையில்
கையெழுத்திடும் முன்
மிக யோசிக்கிறேன்
எனது பெயர் என்ன !?
************
சகிக்கிறேன்
பிறர் மீதான உன் அன்பை !
மறைக்கின்றேன்
அதன் மீதான கோபத்தை !
************
உனக்கு
************
உனக்கு
எல்லோரும் தேவை
எனக்கு நீ மட்டும்
பொதுநலம் நீ
சுயநலம் நான் !
படம் - நன்றி கூகுள்
41 comments:
கவிதைகள்
கொஞ்சிப் பேசி வளர்த்தன
காதல்...////
ஓஹ அந்த கவிதையா
மீண்டும்.....தொடருகின்றன
கவிதைகளும் காதலும் !!///
அது எப்போ தொடங்கியது
பதிந்து கொண்டேன்
உன்னை !///
உண்மையா சொல்றீங்க
மிக யோசிக்கிறேன்
எனது பெயர் என்ன !?////
நான் சொல்லி தரவா...??
உனக்கு
எல்லோரும் தேவை
எனக்கு நீ மட்டும்
பொதுநலம் நீ
சுயநலம் நான் !////
அதான் எனக்கு தெரியுமே
// காசோலையில்
கையெழுத்திடும் முன்
மிக யோசிக்கிறேன்
எனது பெயர் என்ன !?//
இங்கதான் கவிதை க்ளாஸ்........! எப்டி இப்டி எல்லாம்...?????
dheva கூறியது...
// காசோலையில்
கையெழுத்திடும் முன்
மிக யோசிக்கிறேன்
எனது பெயர் என்ன !?//
இங்கதான் கவிதை க்ளாஸ்........! எப்டி இப்டி எல்லாம்...?????////
@@@தேவா என்ன க்ளோஸ் சொல்றீங்களா
இன்றைய கவிதை அனைத்தும் அருமை..
வாழ்த்துக்கள்..
//பொதுநலம் நீ
சுயநலம் நான் !
...
பொதுநலம் பொய்த்து சுயநலம் ஜெயிக்க வாழ்த்துக்கள் !
Factful lines ...!! nice it is ....
கவிதை அருமை..
வாழ்த்துக்கள்..
//மீண்டும்.....தொடருகின்றன
கவிதைகளும் காதலும் !! //
இரு முடிவிலியின் பின்னல்கள் எனக் கொண்டேன். சரி தான சகோ?! ;)
எளிமையான தமிழில் காதல் மணம் கமழும் கவிதை அருமை..
அருமை!!!
ஒவ்வொன்றும் நன்முத்தாய் விளைந்து அழகூட்டுகிறது. கவிதையில் நல்ல உணர்வுகள் அழகாய் வெளிப்படுகின்றன. தொடருங்கள். பாராட்டுகள்.
>>>> பொதுநலம் நீ
சுயநலம் நான் !
அழகுக்கற்பனை
நல்லாயிருக்கு கவிதை.புது டெம்ப்லேட்டும் அழகு.
தூசி விலக்கிய சிந்தனை மிக அழகு
வாழ்த்துக்கள் சகோ
விஜய்
கௌசி...காதல் வரும்போது சுயநலமும் கூடவே வந்துவிடுகிறது.
கையெழுத்து மறந்தது மிக அழகு காதலில் !
சொற்கள் கூடிக் களித்தே
பிரசவிக்கின்றன
கவிதைகள்...
கவிதைகள்
கொஞ்சிப் பேசி வளர்த்தன
காதல்...
காதல்
ரசித்து கொண்டாடின
இரு உள்ளங்கள்...
இரு உள்ளங்கள்
கூடிக் களித்து பிரசவிக்கின்றன
கவிதைகள்...
மீண்டும்.....தொடருகின்றன
கவிதைகளும் காதலும் !!//
வணக்கம் சகோதரி, முதல் கவிதையில் ஒவ்வோர் சிறு கவிகளின் இறுதி வரிகளிலும் ஒரு சிறு கவிதையினை உருவாக்கிப் புதுமையினைக் கையாண்டுள்ளீர்கள்.
கவிதைகள் கொஞ்சிப் பேசி வளர்த்தன காதல்.. இந்த வரிகள் தான் இச் சிறு கவிதைகளையே உயர்த்திக் காட்டுகின்றன. சிறு சிறு சொற்களை அழகாக் கோர்த்து ஒரு மொழி விளையாட்டாய் கவிதையினைப் படைத்துள்ளீர்கள்.
கார் கதவில்
படிந்த தூசி
பிடித்திருக்கிறது
உன் பெயர் எழுதி
தூசி விலக்கி
பதிந்து கொண்டேன்
உன்னை !
காசோலையில்
கையெழுத்திடும் முன்
மிக யோசிக்கிறேன்
எனது பெயர் என்ன !?//
இக் கவியில் இரு பொருளைச் சொல்லியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். ஒன்று காதலின் மயக்கத்திலும் பெயரை மாறி எழுதலாம். காதலின் பிரிவிலும் பெயரை மாறி எழுதலாம்.
இக் கவிதையில் தமிழை வளைத்துக் கொடுத்துள்ளீர்கள்.
சகிக்கிறேன்
பிறர் மீதான உன் அன்பை!
மறைக்கின்றேன்
அதன் மீதான கோபத்தை !
காதலில் விட்டுக் கொடுக்கும் பண்பினைக் கவிதையில் சுட்டியுள்ளீர்கள்.
உனக்கு எல்லோரும் தேவை
எனக்கு நீ மட்டும் பொதுநலம்
நீ சுயநலம் நான் !//
இவ் வரிகள் கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் இருக்கிறது. வார்த்தைகளோடு காதலை வைத்து வண்ணக் கோலங்களாகக் கவிதைகளை வடித்துள்ளீர்கள்.
படமும் கவிதையும் நல்லா இருக்குங்க
படமும் கவிதையும் நல்லா இருக்குங்க.
வாசலில் மிக அருமையான கோலங்கள்!
@@ சௌந்தர்...
//ஓஹ அந்த கவிதையா//
எந்த கவிதை ?
//அது எப்போ தொடங்கியது//
எது ?
//உண்மையா சொல்றீங்க //
என்ன சொன்னேன்?
//நான் சொல்லி தரவா...??//
எதை?
//அதான் எனக்கு தெரியுமே//
என்ன தெரியும் ?
நானும் கேட்பேன்ல விளக்கம் ?!! :)))
@@ dheva கூறியது...
//இங்கதான் கவிதை க்ளாஸ்........! எப்டி இப்டி எல்லாம்...?????//
எனக்கு கிடைச்ச குரு அப்படி ...அதுதான் இப்படி !! :))
நன்றி தேவா.
# கவிதை வீதி # சௌந்தர்...
நன்றிங்க
@@ அனாதைக்காதலன் கூறியது...
//பொதுநலம் பொய்த்து சுயநலம் ஜெயிக்க வாழ்த்துக்கள் !//
இப்படி ஒரு அழகான வாழ்த்தா ?
நன்றி பிரபாகரன். :))
@@ Harini Nathan...
நன்றி ஹரிணி.
@@ Balaji saravana கூறியது...
//இரு முடிவிலியின் பின்னல்கள் எனக் கொண்டேன். சரி தான சகோ?! ;)//
பாலா சொன்னபின் நான் வேற என்ன சொல்ல போறேன். அதே...அதே...!
நன்றி பாலா. :))
@@ !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
//எளிமையான தமிழில் காதல் மணம் கமழும் கவிதை //
நன்றி :))
@@ தெய்வசுகந்தி...
ரொம்ப நாள் ஆச்சு ? நலமா தோழி ?
ரசனைக்கு நன்றி :))
@@ தமிழ்க் காதலன்...
நன்முத்து என்று சொல்லி மகிழ வச்சிடீங்க ரமேஷ்.
நன்றி :))
@@ சி.பி.செந்தில்குமார்...
நன்றிங்க :))
@@ asiya omar கூறியது...
நன்றி தோழி. :))
@@ விஜய்...
நன்றி விஜய். மகிழ்கிறேன்.
:))
@@ ஹேமா கூறியது...
//காதல் வரும்போது சுயநலமும் கூடவே வந்துவிடுகிறது.//
பின்ன ? சுயநலமா இல்லைனா எப்படிப்பா ? கண்டிப்பா வேணும். :))
//கையெழுத்து மறந்தது மிக அழகு காதலில் !//
அது மட்டுமா மறக்கிறது ?!! ம்...எல்லாமே தான் :)))
நன்றி ஹேமா
அக்கா குட்டி குட்டியா அழகா இருக்கு எல்லாக் கவிதைகளும்.
//சகிக்கிறேன்
பிறர் மீதான உன் அன்பை !
மறைக்கின்றேன்
அதன் மீதான கோபத்தை ! //
அதிலும் இது ரொம்ப பிடிச்சது எனக்கு.
மற்ற கவிதைகளில் கவிதைக்கான சில பொய்கள் இருக்கு. ஆனா, இதிலே நிஜத்தை அழகா எடுத்துச் சொல்லியிருக்கீங்க.
சூப்பர்.
//சகிக்கிறேன்
பிறர் மீதான உன் அன்பை !
மறைக்கின்றேன்
அதன் மீதான கோபத்தை !//
யதார்த்தமான காதல்..
@@ நிரூபன் said...
//ஒன்று காதலின் மயக்கத்திலும் பெயரை மாறி எழுதலாம். காதலின் பிரிவிலும் பெயரை மாறி எழுதலாம்.//
வாங்க நிரூபன், கவிதையை ஒரு ஆராய்ச்சியே பண்ணிடீங்க போல :))
மிக மகிழ்கிறேன். ஆக எப்படி பார்த்தாலும் நம்ம பெயரை மறந்து விடுகிறோம் அல்லவா ?! :))
@@ நிரூபன் கூறியது...
//எனக்கு நீ மட்டும்
பொதுநலம் நீ
சுயநலம் நான்!
//இவ் வரிகள் கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் இருக்கிறது.//
காதலில் சுயநலம் கொள்வது அழகு என்பதை விட அவசியம்.அதை சிறு கோபத்துடன், தன் ஆதங்கத்தை சொல்வதாக எழுதி இருந்தேன்.
//வார்த்தைகளோடு காதலை வைத்து வண்ணக் கோலங்களாகக் கவிதைகளை வடித்துள்ளீர்கள்.//
இது வாசல் அதுதான் வண்ணகோலம் !
ஆனால் கோலம் போடுவதை விட அதை உங்களை போன்றோர் ரசிக்கும் போது அந்த கோலம் இன்னும் அழகு பெறுவதை உணருகிறேன்.
உங்களின் அனைத்து கருத்துக்களையும் படித்த பின் எழுத்தில் இன்னும் மெனகிடல் வேண்டும் என்ற எண்ணத்தை கொடுக்கிறது.
நன்றி நிரூபன்.
March 22, 2011 4:11 AM
@@ திவ்யாம்மா...
ரொம்ப நாள் கழித்து உங்களின் இந்த வருகைக்கு நன்றி தோழி.
@@ சே.குமார்...
நன்றி குமார்.
@@ சி.கருணாகரசு...
வாங்க நலமா ?
ரொம்ப நாள் ஆச்சு.
ரசனைக்கு நன்றிங்க.
@@ கவிநா... கூறியது...
//மற்ற கவிதைகளில் கவிதைக்கான சில பொய்கள் இருக்கு. ஆனா, இதிலே நிஜத்தை அழகா எடுத்துச் சொல்லியிருக்கீங்க. //
பொய்யா ? ம்...அக்கா பொய் சொல்ல மாட்டேன் காயத்ரி :))
கவிதைக்கு பொய் அழகுனு சொல்றாங்க...அதனால் அங்க அங்க கொஞ்சம் கொஞ்சம்.....!!
:)))
@@ இந்திரா...
நன்றி தோழி.
Post a Comment