என் தாயை உன் தாய்
என்று உரைப்பாய்
நான் ஆம் என்பேன் உன்போல்
அரக்கி கருவறை
ஜனனம் என்றால் !
அரக்கி கருவறை
ஜனனம் என்றால் !
மண்ணை தாயாய் வணங்கும்
நான் எங்கே
என் தாய்களின் கருவறுத்த
நீ எங்கே
நாளை உனக்கு
இங்கே 'ராஜ'மரியாதை !
கொலை விளையாட்டை
ரசித்த உனக்கு
இது எம்மாத்திரம் !?
தமிழன் கருவறுத்தவன்
'கை'பற்றி
குதூகலிக்க போகும் கூட்டம்.....!!
ரசிக்கத்தான் வேண்டுமோ
விளையாட்டுடன் அவனையும் ?!
எங்கே போயின
எம்வீர தினவெடுத்த தோள்கள் ?
எங்கே தொலைந்தார்கள்
ரௌத்ரம் பழகியவர்கள் ?
13 comments:
என்ன பண்றது, இப்படியே விளையாட்டை பார்த்து மனசு செத்துப்போச்சு அதனால உணர்வும் செத்துப்போச்சு! இப்போ (தமிழர்கள்)நாம எல்லாரும் உணர்வற்ற, ஆனா உயிருள்ள ஜடங்கள் தானே?! வருத்தப்படுறத தவிர ஒன்னும் சொல்றதுக்கில்ல.....
ஆறுதலான ஒரு இடுகைக்கு நன்றிங்க....
பத்மஹரி,
http://padmahari.wordpress.com
வலியை உணர்ந்ததால் உணர்கிறேன் உனை...
இருந்தும் என்னக்கு இக்கருத்தில் உடன்பாடு இல்லை... உடன் இருந்து நமை கொல்லும் அரசியல் வாதிகளை விட அவர்கள் மேல்...அதற்காக நன் அதை தவறு இல்லை என்று சொல்லவில்லை.. தவறுதான்...
மற்றும் நம்மின் மன நிலை பாகிஸ்தானுடன் விளையாடும்போது எப்படி இருந்தது? இப்படியா? நம் அங்கு தவறு செய்யவில்லையா?
நாம், நம் முன்னோர்கள் உரைத்ததை பார்த்து கேட்டு வளந்தவர்கள்... இப்படித்தான் பயந்து வாழ்ந்து வருகிறோம்...
போர் நடக்கும் போது தங்களின் போராட்ட குணம் எங்கே போயிருந்தது? உணர்வுகளை வார்த்தைகளால் எழுதுவது எளிது அதன் படி நடப்பது கடினம்... மன்னிக்கவும் எண்ணின் உணர்வை பதிவு செய்தேன் தவறாக எடுத்துகொள்ள வேண்டாம்...
இப்படிக்கு,
அருண்
http://tamilpralayam.blogspot.com/
அருண், அரசியல்வாதிகளை குறித்த ஆதங்கம் தான் இது...அவர்களை வளர்த்துவிட்டு கொண்டிருக்கும் இவர்கள் தான் தவறிழைத்தவர்கள்.
வார்த்தைகளில் கூட நம் உணர்வை கோபத்தை வெளிபடுத்த கூடாது என்பது எதை காட்டுகிறது...? நம் இயலாமையை !?
//நாம், நம் முன்னோர்கள் உரைத்ததை பார்த்து கேட்டு வளந்தவர்கள்...இப்படித்தான் பயந்து வாழ்ந்து வருகிறோம்... //
இது என்ன இப்படி ஒரு புரிதல் ? நம் முன்னோர்கள் நம்மை உணர்வு அற்று வாழ சொன்னார்களா? நாம் பயந்து வாழவில்லை ,வழியற்று சகித்து கொண்டிருக்கிறோம்.
//உணர்வுகளை வார்த்தைகளால் எழுதுவது எளிது அதன் படி நடப்பது கடினம்.//
என்னை போராட சொல்றீங்களா? எழுச்சியா எழுதுரவங்க எல்லாம் போராட போனா எந்த குற்றமும் நிகழாத தேசமாய் மாறிவிடும் இந்தியா ! ஏன்னா நம்ம ஊர்ல ஆவேசமா பேசுரவங்களும் , எழுதுரவங்களும் மிக அதிகம். :))
சரியோ தவறோ உங்கள் கருத்தை இங்கே சொன்னதிற்கு மிக்க நன்றி.
ஆவளுடன் எதிர்ப்பார்த்து கொண்டு இருக்கிறோம்...
கௌசி....நான் நினைத்ததை எழுதிவிட்டீர்கள்.போதும் தாயே !
இங்கே தாங்க இருக்கு....
இயலாமையை சுமந்துகொண்டு...
உன்போல்
அரக்கி கருவறை
ஜனனம் என்றால் //
வணக்கம் சகோதரம்,
மேற் கூறப்பட்ட வரிகளில்
ஜனனம் என்றா???
என வந்திருந்தால் இன்னும் அழகாகவும் பொருள் புலப்படும் வகையிலும் அமைந்திருக்கும்.
மண்ணை தாயாய் வணங்கும்
நான் எங்கே
என் தாய்களின் கருவறுத்த
நீ எங்கே?
நாளை உனக்கு
இங்கே 'ராஜ'மரியாதை !//
காலம் தன் கைகளினாலும் காரிய தரிசிகளின் துணையினாலும், கயவர்களின் கடந்த காலங்களை மழுங்கடித்து விடுகிறது என்பதனை அழகாக விளித்திருக்கிறீர்கள் சகோதரி.
தமிழன் கருவறுத்தவன்
'கை'பற்றி
குதூகலிக்க போகும் கூட்டம்.....!!//
என்ன செய்ய, எல்லோர்க்கும் வாலாட்டும் நாயாக அதிகாரிகள் மாறி விட்டால் அவர்கள் எத்தகைய தவறு செய்திருப்பினும், உயர்ந்த இடத்தில் வைத்துத் தானே போற்றப்படுவார்கள்.
எங்கே போயின
எம்வீர தினவெடுத்த தோள்கள் ?
எங்கே தொலைந்தார்கள்
ரௌத்ரம் பழகியவர்கள் ? //
நம்மவர்களின் அனல் பறக்கும் பேச்சுக்களெல்லாம் ஒரு சிலரின் சுய நலங்களைத் தக்க வைக்கத் தான் என்பதனைப் புரியாதவர்களாக நாங்கள்.
எங்கே போயின.. தன் சகோதரர்களின் மீது சாக்காடு நடத்தி மகிழ்ந்த நபருக்கு கொடுக்கப்படும் ராஜ மரியாதை பற்றிய தகவலறிந்த உள்ளத்தின் உணர்வின் வெளிப்பாடாகவும்,
மிகுந்த ஆக்ரோசத்துடன் கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்கும் கவிதையாகவும் படைக்கப்பட்டுள்ளது.
சொல்ல வார்த்தைகளின்றி...
ரௌத்ரமா ?
அப்படின்னா...?
என் அன்புத்தோழமைக்கு,
இப்புதியவனின் வணக்கங்கள்.வலைமனைக்கும்,இடுகைகளுக்கும் புதியவனாய் நான்.இனை உணர்வுகளுக்காக மகிழ்கிறேன்.
நட்புடன்.
Post a Comment