நாயகனே...!


                                  

                                  அமுத தமிழை அள்ளி பருகி
                                  ஆசையோடு எனக்கும் ஊட்டிய அன்பே !
                                  தமிழோடு உறவாடி காதல் மணம் 
                                  புரிந்து கவிக்குழந்தை பெற்ற தாயே !

                                  என் விரல் பிடித்து கவிநடை
                                  பயில கற்றுத் தந்த எந்தையே !
                                  என் மனச்சுமை குறைக்க சாய்ந்து
                                  கொள்ள தோள் தரும் தோழனே !

                                  உனதன்பை நினைத்து உவகை கொண்ட
                                  என்னுள்ளம் துள்ளி எழுதும் கவிதையே!
                                  உன் பேச்சில் சிதறிடும் முத்துக்கள்
                                  சேர்த்து அள்ளி நெஞ்சம் நிறைப்பேனே !
                                  
                                  பரம்பொருளை பாடி பணிவதுபோல் மனதினுள்  
                                  மலர்தூவி அர்ச்சித்து மகிழ்வேன் கண்ணனே ! 
                                  மனதோடு மட்டும்பேசி வந்த என்னை 
                                  கனவு தோட்டத்தில் பூக்கவைத்த விந்தையே !
                                                                    
                                  ஆறுபல கூடிடவே தேடிவரும் கடலெனவே
                                  நட்புபல  நாடிவரும் பேருபெற்ற நாயகனே ! 
                                  தவறாய் தமிழை பேசும்பலர் சூழ்ந்திருக்க
                                  தவமாய் தமிழை போற்றும் தனித்துவமே !

                                  பூவுலகின் ஆர்ப்பாட்டமான அற்புத கவிதையே 
                                  செஞ்சுடரே ! செந்தமிழே ! செந்தழலே ! தீஞ்சுவையே !
                                  நீ வாழிய ! வாழிய பல்லாண்டு !
                                  தமிழ் வாழும்வரை நீயும் வாழியவே !!

                                  
                                 ***************


                                  வாழ்த்துக்களில் 
                                  வாழ்வதில்லையாம் நேசம் 
                                  யார் சொன்னது !?  
                                  உன்னை 
                                  வாழ்த்தியே 
                                  வாழ்ந்து கொண்டிருக்கிறேன் 
                                  நான் !


                                  ***************
  

14 comments:

வாழ்த்துக் கவிதை அருமை. ஆனால் உங்கள் வாழ்த்துக்குறிய கவிஞன்தான் யார் எனத் தெரியவில்லை.

யாராய் இருந்தாலும் அவர் கவித்திறமை சிறக்க வாழ்த்துகள்.

தொடருங்கள்...

நல்லக் கவிதைகளை.

 

// வாழ்த்துக்களில்
வாழ்வதில்லையாம் நேசம்
யார் சொன்னது !?
உன்னை
வாழ்த்தியே
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
நான் !

//

நல்லாத்தான் இருக்கு :)

 

கவிதை வழக்கம் போல் அருமை.நாயகியின் வாழ்த்து சூப்பர்.

 

Kousalya, very nice. :-)

 

கவிதை சுவாரசியமா இருக்கு

 

கவிதை நல்லா இருக்குங்க...

மரபு வாசனையுடனாவது கவிதை எழுதும் எல்லோருக்கும் கொடி பிடிக்க எனக்கு மிகவும் பிடிக்கும்...

உங்கள் கவிதைக்குள்ள கொஞ்சம் வருத்தம் அல்லது சோகம் ஒளிந்து கொண்டு இருப்பது போல இருக்கிறது..

வாழ்த்துக்கள்.நிறைய எழுதவும்.

 

// வாழ்த்துக்களில்
வாழ்வதில்லையாம் நேசம்
யார் சொன்னது !?
உன்னை
வாழ்த்தியே
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
நான் !//
பிரமாதம்

 

@@ தமிழ்க் காதலன் கூறியது...

//உங்கள் வாழ்த்துக்குறிய கவிஞன்தான் யார் எனத் தெரியவில்லை.//

எழுத கரு இருந்தா போதுமே வரிகள் தானா வந்துவிட போகுது... :))

என்னை எழுத வைத்துகொண்டிருக்கும் எனக்குள் இருக்கும் ஒரு உணர்வு தான் எனது கவிதைகள் எல்லாம்...அப்படின்னு சொன்னா நம்பவா போறீங்க...!? :)))

//யாராய் இருந்தாலும் அவர் கவித்திறமை சிறக்க வாழ்த்துகள்.//

யாராய் இருந்தாலும் வாழ்த்துரீங்க பார்த்தீங்களா...? இப்படிதான் நானும் வாழ்த்தினேன். :))

அதுசரி இங்கே கேள்வி கேட்டது பத்தாதுன்னு fb லையும் வந்து கேட்டா நியாயமா ரமேஷ் ?

 

@@ எல்.கே...

நன்றி.



@@ asiya omar...

நன்றி தோழி.


@@ Chitra...

நன்றி சித்ரா.



@@ யாதவன்...

நன்றி சகோ.

 

@@ அறிவன்#11802717200764379909...

பெரிய வார்த்தை சொல்ற அளவு இருக்கானு எனக்கு தெரியல...பிடித்திருப்பதில் மகிழ்கிறேன்.

//உங்கள் கவிதைக்குள்ள கொஞ்சம் வருத்தம் அல்லது சோகம் ஒளிந்து கொண்டு இருப்பது போல இருக்கிறது..//

உண்மையில் வியக்கிறேன்...சில உணர்வை எல்லோராலும் உணர இயலாது...உங்களால் முடிகிறது.

நன்றி உங்களின் வருகைக்கும், ரசனைக்கும் !!

 

||/உங்கள் கவிதைக்குள்ள கொஞ்சம் வருத்தம் அல்லது சோகம் ஒளிந்து கொண்டு இருப்பது போல இருக்கிறது..//

உண்மையில் வியக்கிறேன்...சில உணர்வை எல்லோராலும் உணர இயலாது...உங்களால் முடிகிறது.

நன்றி உங்களின் வருகைக்கும், ரசனைக்கும் !! ||

கவிதை மனம் இருக்கும் எவருக்கும் முடியும்....

கல்லூரிக் காலத்திலிருந்தே இலக்கியத்திலும் கவிதையிலும் ஆழ்ந்த ஈடுபாடும் பரிச்சயமும் பழக்கமும் உண்டு,அதுதான் காரணம்...

என்னுடைய பதிவின் கவிதைகளையும் நீங்கள் பார்க்கலாம்,காரணம் சட்டென்று விளங்கி விடும். :))

நன்றி,பாராட்டுக்கு...

தேடிப் படிப்பதையும் எழுதுவதையும் தொடருங்கள்.

 

கௌசல்யா, நல்ல தமிழ்க் கவிதை!! மிகவும் ரசித்து படித்தேன்..யாருக்காக இருக்கும் என எண்ணியபடியே படித்தேன்.. கற்பனையாக எழுதியதாக பின்னூட்டத்தில் படித்த போது வியந்தேன்..

 

உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
பார்க்கவும்:
செவ்வாய் பெண்கள் சரமாக!

 

வாழ்த்துக்கள்