பயணம் இனிதாய் முடிந்தது
அடம் பிடித்து
உடன் வந்த உன்
நினைவுகளால் !!
**************
சில நேரம்
உன் கோபம் ரம்மியமானதாக
இருந்திருக்கிறது
மழை நேரத்து தேநீரின்
முதல் துளி
அருந்துவது போல !
**************
பேசியே களைத்து போன வார்த்தைகள்
தேடிக் கிடைத்த அர்த்தங்கள்
இரண்டும் அற்ற இந்த மௌனம்
இதன் ஆழத்தில் ஒளிந்து கிடக்கும்
நம் நேசம் !
விலகி இருந்தும்
தழுவிக் கொண்டிருக்கும்
உன் நினைவுகள் !
தனித்திருந்தும்
தொடர்ந்து ஒலிக்கும்
உனது குரல் !
நான் சேகரித்து
வைத்திருக்கும்
உன் சிரிப்பு முத்துக்கள் !
இவை போதுமெனக்கு
இந்த ஜென்மத்தை முடிப்பதற்கு !!
**************
சட்டென்று
சிலிர்க்கிறது எனக்கு
வேகமாய் துடிக்கிறது நெஞ்சம்
..................
புரிந்துவிட்டது
இப்போது
என் எழுத்துக்களை நீ
படித்துக் கொண்டிருக்கிறாய் !
25 comments:
ரொம்ப நாளைக்கு அப்புறம் வருகிறீர்கள் ...கவிதை ..கவிதை .????????
//சட்டென்று சிலிர்க்கிறது எனக்கு
வேகமாய் துடிக்கிறது நெஞ்சம்
..................
புரிந்துவிட்டது இப்போது என் எழுத்துக்களை நீ படித்துக் கொண்டிருக்கிறாய் !//
வரிகளில் கலக்கி இருக்கீங்க... ஒவ்வொரு வரியும் அனுபவித்து எழுதியது தெரிகிறது....
இதமான மற்றும் யதார்த்தமான கவிதைகள்...
எல்லாம் நன்றாக உள்ளது..
வாழ்த்துக்கள்..
கவுசல்யா....சும்மா பின்றீங்க போங்க! மேற்கோள் காட்ட எதை எடுக்க எதை விடுக்க அப்படீங்கிற மாதிரி இருக்கு ஒவ்வொரு வரியும், வார்த்தைகளும். இல்லாமையை/வெற்றிடத்தை நிரப்பத்தான் நினைவுகளும், கற்பனைகளும் எவ்வளவு உதவுகின்றன நமக்கு! கவிதையின் கடைசி வரிகள் எல்லா வாசகர்களையும் சில நொடி நேரமாவது வசப்படுத்திவிடும் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த இணையத்தோட்டத்து கவிதை மலர்களில்தான் எத்தனை உற்சாகம், குதூகலம், கொண்டாட்டம். இந்த சந்தோஷக்கூத்தாட்டத்தில் எங்களையும் சேர்த்துக்கொண்டமைக்காக மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துகளும்!
நான்கு கவிதைகளும் அருமையாக உள்ளன,
மழை நேரத்து தேநீரின் முதல் துளி அருந்துவது போல !
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
அனைத்தும் அருமை.
கவிதைகள் நன்று; திருநெல்வேலி...?!
@@SELVENTHIRAN...
திருநெல்வேலி ?!
ஆமாம் திருநெல்வேலி தான். :)
உங்களின் முதல் வருகைக்கு நன்றி.
@@ இம்சைஅரசன் பாபு...
//கவிதை கவிதை ????//
கவிதை படிச்சீங்களா இல்ல கவிதை எங்கேனு தேடுரீங்களா ??
:))
@@ சங்கவி...
ரொம்ப நாள் ஆச்சு. நலமா சதீஷ் ?
ரசனைக்கு நன்றி
@@ # கவிதை வீதி # சௌந்தர்...
மிக்க நன்றி சௌந்தர்.
@@ பத்மஹரி...
//இல்லாமையை/வெற்றிடத்தை நிரப்பத்தான் நினைவுகளும், கற்பனைகளும் எவ்வளவு உதவுகின்றன நமக்கு! //
இது உண்மையில் ஆச்சரியம் தானே !? மிக அழகான புரிதலுடன் கூடிய உங்களின் வார்த்தைகளுக்கு மகிழ்கிறேன் ஹரி.
நன்றி :))
@@ வை.கோபாலகிருஷ்ணன்...
உங்கள் வருகையால் மகிழ்கிறேன். நன்றிகள்.
@@FOOD...
பல ஊர்களை சுத்திட்டு விடுமுறையை நிறைவு செஞ்சாச்சு அண்ணா !!
:))
@@ "நந்தலாலா இணைய இதழ்"...
வருகைக்கு மிக்க நன்றி.
@@ எல்.கே...
நன்றி கார்த்திக். :))
very nice, Kousalya!
வாங்கோ வாங்கோ கௌசி.காதல் கவிதைகளோடு வந்தாச்சா !
//பயணம் இனிதாய் முடிந்தது
அடம் பிடித்து
உடன் வந்த உன்
நினைவுகளால் !!//
கலக்கல் வரிகள்
அசத்தலான கவிதைகள்
ஓவ்வொன்றும் ஒவ்வொரு காதல் தேன் துளிகள்
//விலகி இருந்தும்
தழுவிக் கொண்டிருக்கும்
உன் நினைவுகள் !
தனித்திருந்தும்
தொடர்ந்து ஒலிக்கும்
உனது குரல் !
நான் சேகரித்து
வைத்திருக்கும்
உன் சிரிப்பு முத்துக்கள் !
இவை போதுமெனக்கு
இந்த ஜென்மத்தை முடிப்பதற்கு !!//
...அருமையான உணர்வின் வெளிப்பாடு.. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க :))
கவிதைகள் அருமை சிறப்பான வரிகளுடன் ஒளிர்கின்றன
கோப்பையின் முதல் துளி
அருமை
வாழ்த்துக்கள்
விஜய்
எல்லா வரிகளும் அற்புதம் .superb .
இதமான மற்றும் யதார்த்தமான கவிதைகள்...
Post a Comment