முதல் முறை
நாம் சந்தித்தபோது
விழிகள் விரிய
நீ பார்த்த பார்வையின்
ஆழத்தில் விழுந்து
நான் மெல்ல
உள்ளே செல்ல
சிறிதும் தாமதியாமல்
இமைகள் இரண்டையும்
இறுக்கமாக
மூடிக்கொண்டாய் !
மூடிக்கொண்டாய் !
வெளிவர மனம் இன்றி
பொய்யாக மயங்கியே
கிடக்கின்றேன்
******
நாம்
இன்றுவரை நானும் !
******
நாம்
கடற்கரைச் செல்லும்
போதெல்லாம்
பெருமையாய் சிரிக்கின்றன
உன் கால் தழுவி
முத்தமிட்டு செல்லும் அலைகள் !
ஒரு சந்தர்ப்பம் கொடு
அவை என்னை பார்த்து
பொறாமைப்படட்டும் !!
21 comments:
முக்கனிபோல மிகவும் அருமையான காதல் ரஸம் சொட்டும் மூன்று கவிதைகள். பாராட்டுக்கள்.
மூன்று கவிதைகளுமே அருமை... பகிர்வுக்கு நன்றி.
// சாலையில்
கண்டதும் என் விழிகள்
காதலுற்றன
என்னை கடந்து சென்ற
வாகனத்தில் உனது பெயர் ! //
நேத்து நாம போகும்போது எதிரில் நகராட்சி நாய் புடிக்கிற வண்டிதானே போச்சு ..
காதலில் விழுந்த ஓர் பெண்ணின் ரசனையினை, காதல் வசப்பட்ட பெண்ணின் உள்ளத்து உணர்வுகளை உங்களின் கவிதை அழகாகச் சொல்லி நிற்கிறது.
//முதல்முறை நாம் சந்தித்தபோது
விழிகள் விரிய
நீ பார்த்த பார்வையின்
ஆழத்தில் விழுந்து
நான் மெல்ல
உள்ளே செல்ல
சிறிதும் தாமதியாமல்
இமைகள் இரண்டையும்
இறுக்கமாக மூடிக்கொண்டாய் !//
அடடா....கவிதை டா!!
ஏங்க, ஒரு சின்ன சந்தேகம். கவிதை எழுதுறதுக்கு முன்னாடி, ஒரு வேளை ரூம் போட்டு யோசிப்பீகளோ....???
பத்மஹரி,
http://padmahari.wordpress.com
அருமையான கவிதைகள்
1. கா
2. த
3. ல்
fantastic Kousalya .
/////பொய்யாக மயங்கியே
கிடக்கின்றேன்
இன்றுவரை நானும் ! /////
நெகிழ்ச்சியான வரிகள் ரொம்ப நல்லாயிருக்குங்க...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)
எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க..! ரொம்ப நல்ல இருக்கு எல்லா இடுகைகளும்..
அன்புடன் அன்பு..
Superb...
நீங்கள் ... புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவரா ? - Must Read ... !
http://erodethangadurai.blogspot.com/2011/05/must-read_31.html
@@வை.கோபாலகிருஷ்ணன்...
ரசனைக்கு நன்றி.
@@வெங்கட் நாகராஜ்...
நன்றி.
@@ இம்சைஅரசன் பாபு...
//நேத்து நாம போகும்போது எதிரில் நகராட்சி நாய் புடிக்கிற வண்டிதானே போச்சு ..//
நீங்க பார்த்த வண்டியை நான் பார்க்கவில்லை... நான் பார்த்த காரை நீங்கள் பார்க்கவில்லை !! :)))
@@ நிரூபன்...
மிக அழகா ரசித்து கருத்திட்ட உங்களுக்கு என் நன்றிகள். :))
@@ பத்மஹரி...
//கவிதை எழுதுறதுக்கு முன்னாடி, ஒரு வேளை ரூம் போட்டு யோசிப்பீகளோ....???//
ரொம்ப யோசிச்சேன்... :))
@ யாதவன்...
நன்றி சகோ.
@@ FOOD கூறியது...
நல்ல ரசனை அண்ணா ! :))
நன்றி
@@ சிசு...
நன்றி.
@@ angelin...
தேங்க்ஸ் தோழி.
@@ ♔ம.தி.சுதா♔...
நன்றி சுதா.
@@ அன்பு...
உங்களின் முதல் வருகை என்று நினைக்கிறேன். வருகைக்கு நன்றிகள்.
@@ ஈரோடு தங்கதுரை...
நன்றிகள்
எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இல்லைங்க :))))
போஸ்ட் படித்தேன். தேவையான பதிவு.
கவிதை அருமை....!!!
Post a Comment