நம்பிக்கையற்ற தீயில்
பொசுங்கிப்போன
மென் உணர்வுகளில் !
நிராகரிக்கப்பட்டு
திரும்பிய நேசம் பிளந்த
வெடிப்பில் !
இன்பச்சுமை நீயென
சுமந்து தீர்த்து வலிகண்ட
உயிர்கூட்டில் !
உன்னை விடுத்து வேறெதையும்
சுவாசித்தறியா நாசியின்
வெம்மையில் !
வேடந்தரித்து
பேசத்தெரியா இயல்பின்
கோபக் கதிர்வீச்சில் !
.............
மரணித்துவிடுகிறது
'காதல்' எனும் மாயை !!
11 comments:
//உன்னை விடுத்து வேறெதையும்
சுவாசித்தறியா நாசியின்
வெம்மையில் !
வேடந்தரித்து
பேசத்தெரியா இயல்பின்
கோபக் கதிர்வீச்சில் !
மரணித்துவிடுகிறது
'காதல்' எனும் மாயை !! //
மனதை கொள்ளை கொள்ளும் வரிகள்...
மிக மெல்லிய காதல் உணர்வுகளை வெளிப்படித்த நினைக்கும், வெகு அழகான மாயைக்கவிதை. பாராட்டுக்கள்.
//வேடந்தரித்து
பேசத்தெரியா இயல்பின்
கோபக் கதிர்வீச்சில் !
.............
மரணித்துவிடுகிறது//
அனுபவித்திருக்கிறேன்!
அருமையான வரிகள்! :-)
// வேடந்தரித்து
பேசத்தெரியா இயல்பின்
கோபக் கதிர்வீச்சில் !//
Excellent...
//மரணித்துவிடுகிறது 'காதல்' எனும் மாயை !! //
true lines....
கௌசி...கடைசிப் பந்தியில் மெல்ல அழுகிறது காதல் !
உன்னை விடுத்து வேறெதையும்
சுவாசித்தறியா நாசியின்
வெம்மையில் !
இந்த வரியில் நான் செத்துவிட்டேன்
வார்த்தைகளின் தேர்வு அருமை. பகிர்வுக்கு நன்றி
@@ சங்கவி...
நன்றி சதீஷ். :)
@@ வை.கோபாலகிருஷ்ணன்...
ரசனைக்கு நன்றிகள் சார்.
@@ ஜீ...
நீண்ட இடைவெளிக்கு பின் உங்களின் வருகை...! நன்றி ஜீ
@@ சிசு...
தொடரும் வருகைக்கு நன்றிகள்
@@ ஹேமா...
காதல் என்றால் கண்ணீரும் சேர்ந்தது தானே ?!
உணர்விற்கு நன்றி ஹேமா
@@ யாதவன் கூறியது...
//இந்த வரியில் நான் செத்துவிட்டேன்//
அடடா ஏங்க இப்படி ?!
@@ எல்.கே...
கார்த்திக் நன்றிகள். :))
Post a Comment