கடும் வெயில்...
என் மீது மழை பொழிந்தது !
இலையுதிர்காலம்...
என் தோட்ட
கொன்றை மரம் பூத்தது !
அப்போது
என் வாழ்வில் நீ வந்தாய் !!
என் வாழ்வில் நீ வந்தாய் !!
பேருந்து
ஜன்னலோர தனி பயணம்
மிக பிடித்ததாயிற்று
எல்லா பயணமும்
உன்னை நெருங்க எடுக்கும்
பிரயத்தனம் என்பதால்!
பயண வழியெங்கும்
உன் முகம் தோன்ற
ரசித்து ரசித்து வலிக்கும்
மனகண்ணுக்கு களிம்பு பூசட்டும்
சிறு புன்னகை சிந்தேன் !
நீ அழைக்கும் போதெல்லாம்
செல்பேசியுடன் மொட்டை மாடி
விரைந்து ஓடுவேன்
குரலுடன்
உன்னை சுவாசிக்க !
உன்னை சுவாசிக்க !
இரவில் நீ
பேசும் பேச்சுக்கள் தானே
மறுநாள் பகலில்
என்னை உயிர்ப்புடன்
வைத்திருக்கிறது !
எரிமலை வெடித்து
நதி பெருக்கெடுக்கும் !
பாலையில்
நீரூற்று புறப்படும் !
எதுவும் மாறும்
என்னை தவிர...
அப்போதும்
உன்னை காதலிப்பேன் !
...
...
...
உன்னை எனக்கு மிக பிடிக்கும் !!
மறுநாள் பகலில்
என்னை உயிர்ப்புடன்
வைத்திருக்கிறது !
எரிமலை வெடித்து
நதி பெருக்கெடுக்கும் !
பாலையில்
நீரூற்று புறப்படும் !
எதுவும் மாறும்
என்னை தவிர...
ஒருநாள் உனக்கு
என்னை பிடிக்காமல் போகும் அப்போதும்
உன்னை காதலிப்பேன் !
...
...
...
உன்னை எனக்கு மிக பிடிக்கும் !!
படங்கள் -கூகுள்
20 comments:
கடும் வெயில்...
என் மீது மழை பொழிந்தது !//
காதல் அதிகமாகி விட்டது போல...
ஹி....ஹி...
@@ நிரூபன்...
பின்னூட்டம் பார்த்ததும் சிரித்துவிட்டேன்.
:))
இலையுதிர்காலம்...
என் தோட்ட
கொன்றை மரம் பூத்தது !
அப்போது
என் வாழ்வில் நீ வந்தாய் !!//
காதல் வாழ்ந்து விட்டால், காலங்கள் கூட மாறித் தோற்றமளிக்கும் என்பதற்கு இதனை விட வேறு வர்ணனைகள் தேவையே இல்லை...
Kousalya கூறியது...
@@ நிரூபன்...
பின்னூட்டம் பார்த்ததும் சிரித்துவிட்டேன்.
:))//
ஏன் என்று சொல்லுங்க.
பேருந்து
ஜன்னலோர தனி பயணம்
மிக பிடித்ததாயிற்று
எல்லா பயணமும்
உன்னை நெருங்க எடுக்கும்
பிரயத்தனம் என்பதால்!//
ஆணகள் பெண்களைச் சைற் அடிப்பதை வெளிப்படையாகச் சொல்லுவார்கள், ஆனால் ஒரு பெண் உளத்த்திலிருந்து இவ் வரிகள் வந்திருப்பது மகிழ்சியளிக்கிறது,
காரணம் சுயாதீனமான, சுதந்திரமான ஊடகக் கொள்கைக்கு வலைப்பதிவும் ஓர் காரணியாக அமைந்திருக்கிறது.
@@ நிரூபன்...
//ஏன் என்று சொல்லுங்க.//
அது எப்படி சொல்ல :))
இப்படி வேணா சொல்றேன், நீங்க சிரித்ததும் சிரிச்சிட்டேன் ஒ.கேயா
நல்ல கவிதை.
எரிமலை வெடித்து
நதி பெருக்கெடுக்கும் !
பாலையில்
நீரூற்று புறப்படும் !
எதுவும் மாறும்
என்னை தவிர...
ஒருநாள் என்னை
உனக்கு பிடிக்காமல் போகும்
அப்போதும்
உன்னை காதலிப்பேன் !//
இவ் வரிகள்....என் பார்வையில் எனக்கு இரண்டு உண்மைகளை உரைக்கின்றன.
ஒன்று காதல் தீர்ந்து விட்ட பின்னர்,
அடுத்தது,
ஆணினது பெண் பற்றிய தோற்றப்பாடுகள் நீங்கிய பின்னர்
இவை இரண்டும் நீங்கிய பின்னர் காதலிக்க வேண்டும்,
அப்போது தான்,
அது பிரதிபலன் கருதாத உண்மைக் காதல் எனும் சிந்தனையினை உரைக்கிறது.
அந்தக் காதல் தான் நீடித்து நிற்குமாம்.
@@ நிரூபன்...
//ஆணகள் பெண்களைச் சைற் அடிப்பதை வெளிப்படையாகச் சொல்லுவார்கள், ஆனால் ஒரு பெண் உளத்த்திலிருந்து இவ் வரிகள் வந்திருப்பது மகிழ்சியளிக்கிறது,//
அட ஆண்டவா ? ஏன் இப்படி ? :))
//காரணம் சுயாதீனமான, சுதந்திரமான ஊடகக் கொள்கைக்கு வலைப்பதிவும் ஓர் காரணியாக அமைந்திருக்கிறது.//
இதுவரை நல்லாதானே போயிட்டு இருந்தது...!! :)
@@ நிரூபன்...
//ஆணினது பெண் பற்றிய தோற்றப்பாடுகள் நீங்கிய பின்னர்
இவை இரண்டும் நீங்கிய பின்னர் காதலிக்க வேண்டும்,
அப்போது தான்,
அது பிரதிபலன் கருதாத உண்மைக் காதல்//
சூப்பர் சகோ ! கவிதையை நன்கு உணர்ந்த உங்களின் புரிதலுக்கு என் பாராட்டுகள்.
நன்றிகள் நிரூபன்.
@@ Rathnavel...
நன்றிங்க
பேருந்து
ஜன்னலோர தனி பயணம்
மிக பிடித்ததாயிற்று
எல்லா பயணமும்
உன்னை நெருங்க எடுக்கும்
பிரயத்தனம் என்பதால்!
காதலின் தவிப்பு இவ்வரிகளில் ஆழமாக தெரிகிறது
இது தான் காதலின் சுகமான வலி என்பதோ
ஒரு கதை போல் நகர்ந்துவரும் கவிதை அழகுடன் கோர்க்கப்பட்டுள்ளது . காதலுக்காக தெரிவுசெய்த சொற்கள் அற்புதம் .
தன்னிலை மகிழ்ச்சியை காதலின் வளர்ச்சியை சொல்லி வந்த கவிதை இறுதி பந்தியில் எந்த காரணமும் இன்றி பிரிவு வந்தால் கூட உன்னை விரும்புவேன் என்று கூறுவது காதலில் நம்பிக்கை இல்லையா என்ற ஐயத்தை தோற்றுவிக்கிறது, அதே போல் கடசிபந்தியின் சொல் தேர்வும் மற்றைய பந்திகளை விட சற்று வித்தியாசமாக ( எரிமலை , பாலைவனம் ) காணப்படுகிறது . நான் நினைக்கிறான் கடைசி பந்திக்கு முன் பிரிவு வருவதற்கான வலுவான காரணங்களை முன்வைத்திருந்தால் இந்த திடீர் மாற்றத்தை ஜீரணிக்க முடிந்திருக்கும்
//ஒருநாள் உனக்கு
என்னை பிடிக்காமல் போகும்
அப்போதும்
உன்னை காதலிப்பேன் !//
That is the TRUE LOVE.
//இரவில் நீ
பேசும் பேச்சுக்கள் தானே
மறுநாள் பகலில்
என்னை உயிர்ப்புடன்
வைத்திருக்கிறது !//
மிகவும் பிடித்த வரிகள்... அத்தனையும் அருமையான வரிகள்.
கீழ இருக்கற பொண்ணு படம் நல்லா இருக்கு அந்த ரோஜாவும் அழகு )
அருமையான வரிகள்.
@@ கவி அழகன்...
//தன்னிலை மகிழ்ச்சியை காதலின் வளர்ச்சியை சொல்லி வந்த கவிதை இறுதி பந்தியில் எந்த காரணமும் இன்றி பிரிவு வந்தால் கூட உன்னை விரும்புவேன் என்று கூறுவது காதலில் நம்பிக்கை இல்லையா என்ற ஐயத்தை தோற்றுவிக்கிறது,//
"எந்த காரணமும் இன்றி பிரிவு வந்தால் கூட உன்னை விரும்புவேன்" இப்படி சொல்றதும்கூட காதல் மேல் உள்ள நம்பிக்கை தானே ?!
//அதே போல் கடசிபந்தியின் சொல் தேர்வும் மற்றைய பந்திகளை விட சற்று வித்தியாசமாக ( எரிமலை , பாலைவனம் ) காணப்படுகிறது . நான் நினைக்கிறான் கடைசி பந்திக்கு முன் பிரிவு வருவதற்கான வலுவான காரணங்களை முன்வைத்திருந்தால் இந்த திடீர் மாற்றத்தை ஜீரணிக்க முடிந்திருக்கும்//
இயற்கை மாறினாலும், ஏன் நீயே மாறினாலும் நான் மாறமாட்டேன் என் சொல்வது காதலன் மேல் உள்ள அதீத அன்பை வெளிகாட்ட கையாளப்பட்டது .
நீங்களும் நிரூபனும் ஒரு முடிவுல தான் இருக்கீங்களா? :)))
விளக்கம் சொல்லி முடியல !!!:)))
நன்றிகள்
@@ FOOD...
நன்றி அண்ணா.
Post a Comment