நேற்று
நீ பேசுகிறாய்
ரசிக்கிறேன்
நீ சிரிக்கிறாய்
மிதக்கிறேன்
நீ அழைக்கிறாய்
கிறங்குகிறேன்
நீ சிணுங்குகிறாய்
உளறுகிறேன்
நீ ரசிக்கிறாய்
சிலிர்க்கிறேன்
இன்று
நீ யோசிக்கிறாய்
யாசிக்கிறேன்
நீ மறுக்கிறாய்
துடிக்கிறேன்
நீ மௌனிக்கிறாய்
தவிக்கிறேன்
நீ எழுதுகிறாய் யாருக்கோ
படிக்கிறேன் விழி நீரை மறைத்தபடிஉன்னால் கொல்லப்பட்டும்
உன் நினைவுகளினால்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் !!
படம் : நன்றி கூகுள்
15 comments:
கௌசி..என்னாச்சு.மனசுக்கு என்னவோ மாதிரி இருக்கு வரிகள் !
3 நாட்களாக நட்சத்திரப் பதிவு போட்டுக்கொண்டிருக்கிறேன்.
வரணும் நீங்க !
நீ எழுதுகிறாய் யாருக்கோ
படிக்கிறேன் விழி நீரை மறைத்தபடி///
சரி சரி அழுகாதீங்க...!!!
:))
மன்னிப்பது சகஜமானாலும்,
மறப்பது நடக்காது..
மனங்கலந்த காதல்தனில்..!!
நேற்று: ஒரு காதல் பூ துளிர்த்த போது ஏற்பட்ட உணர்வலைகளை வெளிப்படுத்தி நிற்கிறது,
இன்று: காதலில் ஏற்படும் பிரிவோடு கூடிய நிலையினைப் புரிந்து கொண்ட உள்ளத்தின் உணர்வுகளை ஏக்கங்களுடன் சொல்லி நிற்கிறது.
//நீ எழுதுகிறாய் யாருக்கோ
படிக்கிறேன் விழி நீரை மறைத்தபடி
உன்னால் கொல்லப்பட்டும்
உன் நினைவுகளினால்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் !!//
வாழ வைக்கும் நினைவுகள் வாழ்க!
@@ ஹேமா கூறியது...
//கௌசி..என்னாச்சு.மனசுக்கு என்னவோ மாதிரி இருக்கு வரிகள் !//
இல்ல ஹேமா, ஒரு வித்தியாசமாக இருக்கட்டும் என்று எழுதினேன். என் கவிதையை எப்படி உணருகிறீர்கள் என்று எனக்கு நன்கு புரியும்பா.
//3 நாட்களாக நட்சத்திரப் பதிவு போட்டுக்கொண்டிருக்கிறேன்.
வரணும் நீங்க !//
வாழ்த்துக்கள் ஹேமா. இன்றைய மரம் பற்றிய கவிதையை காலையில் படித்துவிட்டேன், பின்னூட்டம் மதியம் தான் போட்டேன்.
:)))
@@ சௌந்தர்...
//அழுகாதிங்க//
முடியலையே சௌந்தர்...!! :)))
ஆமாம் அழுகாதிங்க சொல்லிட்டு நீ சிரிக்கிற ? நீ எல்லாம் தம்பியா ?
@@ ரங்கன் கூறியது...
//மன்னிப்பது சகஜமானாலும்,
மறப்பது நடக்காது..
மனங்கலந்த காதல்தனில்..!!//
அது என்னவோ உண்மைதான் :))
வருகைக்கும், உணர்வுக்கும் நன்றிகள்
@@ நிரூபன் கூறியது...
//நேற்று: ஒரு காதல் பூ துளிர்த்த போது ஏற்பட்ட உணர்வலைகளை வெளிப்படுத்தி நிற்கிறது,//
அதே அதே !! :))
//இன்று: காதலில் ஏற்படும் பிரிவோடு கூடிய நிலையினைப் புரிந்து கொண்ட உள்ளத்தின் உணர்வுகளை ஏக்கங்களுடன் சொல்லி நிற்கிறது.//
ம். ஆமாம் . நான் எழுதிய கவிதையை விட உங்கள் வர்ணனை மிக அருமை.
நன்றிகள் சகோ
@@ வை.கோபாலகிருஷ்ணன்...
//வாழ வைக்கும் நினைவுகள் வாழ்க!//
நன்றிகள் சார்.
சோகம் அதிகமாய் இருக்கு. ஆமாம் வாசலில் எதோ ஒரு தொடர் வந்த நியாபகம் .. அது எங்கே
ஆஹா.. கவிதை., கவிதை..!!
நல்லாருக்கு.
@ FOOD...
நன்றி அண்ணா
@ எல்.கே...
இனியது காதல் தொடர் தானே...விரைவில் !!
:))
@ கொக்கரகோ...
உங்களின் முதல் வருகை என நினைக்கிறேன். நன்றிங்க
// உன்னால் கொல்லப்பட்டும்
உன் நினைவுகளினால்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் !!//
உணர்வுமிக்க கவிதை தோழி.
//நேற்றைய நிமிடம்
உன்னோடு
இன்றைய பொழுது
உன் நினைவோடு
வாழும் வரை
என் உயிரோடு
கலந்திருப்பாய் மூச்சோடு//
என்ன அழுவாச்சிக்கவிதையா இருக்கு? :))
Post a Comment