அழைக்கிறார்கள்
உன்னை உரிமையாக !
யாரோ
உறவாடுகிறார்கள்
உன்னுடன் அன்பாக !
யாரோ
விசும்புகிறார்கள்
நீ பேசவில்லை என !
யாரோ
மௌனிக்கிறார்கள்
நீ கடிந்துக் கொண்டதால் !
யாரோ
எனதென்கிறார்கள்
உன் உடமைகளை !
யாரோ
சண்டையிடுகிறார்கள்
உனக்கு பரிந்து கொண்டு !
சகித்துக்கொண்டு
உன் தோள் சாய்ந்தேன்
மௌனமாக !
இன்று என்னை யார்
என்கிறார்கள் !?
என்கிறார்கள் !?
அறிவார்களா
உன் உயிரின் ஓரம் நான் என்பதை !!
உன் உயிரின் ஓரம் நான் என்பதை !!
படம் - கூகுள்
10 comments:
அழகு கவிதை....
//சகித்துக்கொண்டு உன் தோள் சாய்ந்தேன் மௌனமாக !//
யாரோ வுக்கான விடை தெரிந்து கொண்டேன் இந்த ஓர் வரியில்.
அருமையான கவிதை. பாராட்டுக்கள்.
சொல்லியிருக்கும் விதம் அழகு !
கவிதைக்கு அழகு உங்கள் வரிகள் ...
யாரோ என்பதன் பின்னே தொக்கி நிற்கும் பல வினாக்களிற்கான விடையாக உங்களின் இக் கவிதை அமைந்துள்ளது சகோ.
அழகான கவிதை. அருமை
கொஞ்சம் நாள் கழித்து உங்க வாசல் வருகிறேன்......
நலமா....
இந்த கவிதை பகிர்வு சிறப்பாக இருக்குங்க.... பாராட்டுக்கள்.
அருமையான கவிதை.
கவிதையின் கவிதை... அருமை...
Azhakana kavithai.Arumaiana varthigal.( sorry for my language) Please write more.
Post a Comment