காயும் நிலவு, சுழன்றடிக்கும் புயல்
எதிலும் பெண் வடிவம் கண்டு மகிழ்ந்தவன்
பின் தன்தன் மனை மதியாமல் போனானே !
கல்வி கற்ற கலைமகளை விட
கை நிறைய பொருள் கொணரும்
திருமகள் தேவை என தேடியவன்
அதிலும் திருப்தி அடையாமல் போனானே !
தேவதை போலொரு மனைவி
அடைந்தால் சுவர்க்கம் வேறில்லை
தலையில் வைத்து கூத்தாடியவன்
பின் சந்தேகக்கண் கொண்டு எரித்தானே !
அன்புக் கடங்குவதிலும்,
துன்பத்தில் இன்பம் கண்டவள்
இவள் போல் யார் என்றவன்
அதிலும் பெண்மை உணராமல் போனானே !
இதுவே பெண்மையின் விதி
தலை கவிழ்ந்தது முடியுங்காலம்
வந்ததம்மா - 'வென்றிடும் பெண்மை'
எங்கோ தூரத்தில் ஒரு குரல்.....
ஏனோ எனக்கு மட்டும் கேட்கிறது !!
ஏனோ எனக்கு மட்டும் கேட்கிறது !!
படம்- கூகுள்
11 comments:
எத்தனை செய்தாலும்
எதிரேயே நின்றாலும்
எவரெல்லாம் அதனை
எடுத்துக்காட்டாய் சொல்கின்றார்..?
ஏனோ... கவிதை நல்லா இருக்குங்க.. :)
//அன்புக் கடன்குவதிலும், //
கௌசல்யா... இந்த வார்த்தை,
அன்புக் கடங்குவதிலும்,
...அப்படி வருமோ? சின்ன டவுட்பா. தவறா என்ன வேண்டாம். தேங்க்ஸ். :)
//வந்ததம்மா - 'வென்றிடும் பெண்மை'
எங்கோ தூரத்தில் ஒரு குரல்.....
ஏனோ எனக்கு மட்டும் கேட்கிறது !!//
கடைசியில் நம்பிக்கையூட்டும் வரிகள்.
நல்ல கவிதை. பாராட்டுக்கள்.
வேதனையான விஷயம்தான் ......
நல்ல எழுத்து வடிவமைப்பு
பெண்களின் மென்மைதான் பெண்மைக்கே எதிரி.எதிர்த்தாலும் அடங்காப்பிடாரி என்கிறார்கள்.
என்னதான் செய்வது.
பெண்ணாய்ப் பிறந்ததுதான் ஏனோ !
nalla kavithai....
nallaayirukkunka
vaalththukkal.......
namma pakkamum varalaamae?
Nice one
vijay
ஏனோ என்னும கவிதைதான
இனிக்கும் சுவையே தருகின்ற
தேனோ என்றே ஆனதுகாண்
திகட்டும் நிலையே போனதுகாண்
வேதனை தன்னை வடித்துள்ளிர்
விம்மி உள்ளம் வெடித்துள்ளிர்
சோதனை என்றும் பெண்மைக்கே
சுகமா தகுமா ஆண்மைக்கே
புலவர் சா இராமாநுசம்
athukku appuram antha kathaiyai padikkalayaa
கவிதை நல்லா இருக்குங்க.
Post a Comment