இனி...!

   

                                     
                                            சந்தேகம் கொள்வாய் 
                                            தெரிந்திருந்தால்
                                            நெருப்பில் வேகவைத்து 
                                            பரிமாறியிருப்பேன் மனதை !

                                            நம்பிக்கையற்று போவாய்
                                            தெரிந்திருந்தால்
                                            தீயில் குளிக்க வைத்து 
                                            உடுத்தி இருப்பேன் காதலை !

                                            உன் பாதை எங்கும் 
                                            பூத்தூவி பார்த்துக்கொண்ட நான்
                                            உன் மனதை கறை படியாமல்
                                            கவனிக்க தவறிவிட்டேன் !

                                            நீ தூங்கும் அழகை 
                                            மனக்கண்ணால் கண்டு 
                                            இமைகளால் தாலாட்டுவேன் 
                                            ஒரே சொல்லில் என் 
                                            விழிகளை பிடுங்கி எறிந்துவிட்டாய் !

                                            விரும்பி உன்னில் தோற்று போனேன்
                                            விருப்பமின்றி விலகி போகிறேன்
                                            ஒருவருக்காக ஒருவர் மறந்துவிடுவோம்
                                            நம் காதல் தானாகவே இறந்துவிட கூடும் !

                                            செல்லரிக்காத காதல் என்றாய்
                                            சொல்லடித்து செத்துப்போன காதலை 
                                            என்றாவது ஒருநாள்
                                            மயானத்தில் தேடுவோம் !

                                            கண்டுபிடித்தால் மீண்டும் 
                                            குழிதோண்டி புதைத்துவிடுவோம் 
                                            வேண்டாம் எரித்துவிடுவோம்
                                            தற்கொலை செய்த காதல் 
                                            ஆவியாய் அலைய கூடும் !! 



19 comments:

காதலை அவ்வளவு எளிதில் ஒன்றும் செய்ய முடியாது .....

 

கௌசி...நீங்கள் சொன்னது எதுவுமே நடக்கப்போவதில்லை.காதல் உங்கள் மனசோடுதான் !

 

ஃஃஃ மனக்கண்ணால் கண்டு
இமைகளால் தாலாட்டுவேன்ஃஃஃஃஃ

அருமையான உவமை வரிகள் சகோதரம்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)

 

கடைசி இரண்டு வார்த்தைகள் மனதை பிசைகிறது

அருமை சகோ

விஜய்

 

சந்தேகம் எனும் கண் கொண்டு காதல் உணர்வுகளைக் கொல்லும் இன்றைய மனிதர்கள் பலரின் யதார்த்ததினைக் கவிதையில் சொல்லியிருக்கிறீங்க.

இனி...வார்த்தைகளால் சுட்டெரிக்கப்பட்டுப் புதைக்கப்பட்ட காதலைத்
தேடுகின்ற பயணத்தின் வெளிப்பாடாய் இங்கே பரிணமித்துள்ளது.

 

காதலால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தில் எழுதிய கவிதையோ!

 

ஒரு படைப்பாக ..... பாராட்டுக்கள்.

 

@@ koodal bala...

//காதலை அவ்வளவு எளிதில் ஒன்றும் செய்ய முடியாது //

ரொம்ப திடமா சொல்றீங்க... :))

வருகைக்கு நன்றி

 

@ ஹேமா கூறியது...

//கௌசி...நீங்கள் சொன்னது எதுவுமே நடக்கப்போவதில்லை.காதல் உங்கள் மனசோடுதான் !//

ஹேமா...! மனதோடு மட்டும் !! :))

 

@@ ♔ம.தி.சுதா♔...

ரொம்ப நாள் ஆச்சு சுதா...நலமா ?

உங்க பிளாக் பார்கிறேன்.

நன்றி.

 

@@ விஜய் கூறியது...

//கடைசி இரண்டு வார்த்தைகள் மனதை பிசைகிறது //

ம்...இங்கே போஸ்ட் பண்ணிட்டு உங்க தளம் வந்தா அங்கேயும் ஒரே சோகம்...

என்னவோ போங்க... :))

நன்றி சகோ.

 

@@ நிரூபன் கூறியது...

//சந்தேகம் எனும் கண் கொண்டு காதல் உணர்வுகளைக் கொல்லும் இன்றைய மனிதர்கள் பலரின் யதார்த்ததினைக் கவிதையில் சொல்லியிருக்கிறீங்க. //

நிதர்சனம் நிரூபன். அடுத்த மனிதன் உடலை கொன்று போடுவதை விட பெரிய கொடுமை, நேசிப்பவரின் மன உணர்வை கொல்வது. :(

புரிதலுக்கு நன்றி.

 

@@ வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...

//காதலால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தில் எழுதிய கவிதையோ!//

என்னுடைய அனுபவம் இல்லைங்க. சந்தேகம் தரும் வலியை வரிகளாக்கினேன். அவ்வளவே.

நன்றிகள்.

 

@ சி.கருணாகரசு கூறியது...

//ஒரு படைப்பாக ..... பாராட்டுக்கள்.//

ஒரு படைப்பாக பார்த்த உங்களுக்கு என் நன்றிகள். :))

 

nallaayirukkunka...
vaalththukkal...



can you come my said?

 

அருமையான வரிகள்.

 

சந்தேகம் என்பதொரு நோயே-வந்து
சேர்ந்துவிட்டால் ஆட்டுவிக்கும் பேயே
வந்தாலே அழிந்துவிடும் வாழ்வு-அது
வளர விட்டால் வந்துவிடும்தாழ்வு
தந்தீராம் நல்லதொரு கவிதை-நல்
தரமுடனே தேர்ந்தெடுத்த விதை
நொந்தவரும் இதனாலே பலரே-நன்கு
நோக்கியதை தெளிந்தாரும் சிலரே
உணர்வான வரிகள் நன்றி
புலவர் சா இராமாநுசம்

 

@@ vidivelli...

நன்றிகள்.


சே.குமார்...

நன்றிகள்

 

@@ புலவர் சா இராமாநுசம் கூறியது...

//சந்தேகம் என்பதொரு நோயே-வந்து
சேர்ந்துவிட்டால் ஆட்டுவிக்கும் பேயே
வந்தாலே அழிந்துவிடும் வாழ்வு-அது
வளர விட்டால் வந்துவிடும்தாழ்வு
தந்தீராம் நல்லதொரு கவிதை-நல்
தரமுடனே தேர்ந்தெடுத்த விதை
நொந்தவரும் இதனாலே பலரே-நன்கு
நோக்கியதை தெளிந்தாரும்//

மிகவும் நெகிழ வைத்து விட்டீர்கள்.
நல்லதொரு தமிழை பருக வச்சிடீங்க. நன்றிகள் ஐயா !