இது சரியில்லை
அது சரியில்லை
இவன் எதுக்கும் லாயக்கில்லை
அவன் ஒரு உதவாக்கரை
இரவு பகல்
ஓய்வின்றி
சலிப்பின்றி சொன்னேன்
அலுக்கவில்லை எனக்கு !
..............
நான்
கொஞ்சம் மாறியிருக்கலாம்
தவறில்லை
தாமதமாக புரிகிறது
மரணபடுக்கையில் !!
**************
லட்சத்தில் ஒரு துளி
போகட்டும்
விட்டுவிட மனமின்றி
எழும்முன் விரைந்து
அடித்து கொன்று
சிரிக்கிறது மிருகம் !
செத்துக்கிடக்கிறது
கடித்த கொசு !!
13 comments:
ஆஹா, அருமையான சின்னஞ்சிறு கவிதைகள்.
நம்மை நாமே உணரும்போது காலம் கடந்து விடுகிறது என்பதை அழகாக மரணப்படுக்கையில் என்ற ஒற்றை வரியில் முத்திரை பதித்துள்ளீர்கள்.
கொசு போன்ற ஏழை எளியோரை, வதைக்கும், பணத்திமிர் பிடித்த மனிதன் மிருகமாகிறான் என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.
பாராட்டுக்கள். அன்புடன் vgk
வித்தியாசமான கவிதைகள்
இது சரியில்லை
அது சரியில்லை
இவன் எதுக்கும் லாயக்கில்லை
அவன் ஒரு உதவாக்கரை
இரவு பகல்
ஓய்வின்றி
சலிப்பின்றி சொன்னேன்
அலுக்கவில்லை எனக்கு ! //
இங்கே குறை சொல்லும் மனிதர்களின் மனங்களினைப் படம் பிடித்துள்ளீர்கள்.
நான்
கொஞ்சம் மாறியிருக்கலாம்
தவறில்லை
தாமதமாக புரிகிறது
மரணபடுக்கையில் !!//
இவ் வரிகள் பட்ட பின்பு புத்தி தெளியும் மனித இயல்பினைச் சுட்டி நிற்கிறது.
லட்சத்தில் ஒரு துளி
போகட்டும்
விட்டுவிட மனமின்றி
எழும்முன் விரைந்து
அடித்து கொன்று
சிரிக்கிறது மிருகம் !
செத்துக்கிடக்கிறது
கடித்த கொசு !!//
இங்கே இரக்கமற்ற நிலையினைச் சுட்டுகிறீர்கள்...
மனிதனின் பல் வேறு குணங்களை வெவ்வேறு கவிகளினூடாகச் சுட்டியுள்ளீர்கள்.
அருமை சகோ.
அற்புதம் கௌசி....மூன்றும் நம்மோடு வாழும் வாழ்வியல் குணங்கள்.மனிதனுக்குள்ளும் மிருகம் !
மூன்றுமே நல்கவிதைகள். மூன்றாவது அழகு....
@@ வை.கோபாலகிருஷ்ணன்...
ஒவ்வொரு வரியையும் உணர்ந்து சொல்லியிருக்கும் உங்களின் புரிதலுக்கு நன்றிகள் சார்.
@@ யாதவன்...
நன்றி யாதவன்.
@@ Nagasubramanian...
நன்றிங்க.
@@ நிரூபன்...
ஆழ்ந்த புரிதல் ! உங்களின் ஒவ்வொரு பின்னூட்டமும் இன்னும் அதிக அக்கறையுடன் வரிகளை கோர்க்க வேண்டும் என்று தோன்ற வைத்துவிடுகிறது.
நன்றிகள் நிரூபன்.
@@ ஹேமா...
ஒவ்வொரு முறையும் உங்களின் வருகை எனக்கு உற்சாகத்தை கொடுக்கிறது. நன்றி ஹேமா.
@@ FOOD...
அந்த பயம் வாழும் போது இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்...! :))
நன்றி அண்ணா
@@ வெங்கட் நாகராஜ்...
நன்றிங்க.
Post a Comment