Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts
Posted by
Kousalya Raj
comments (13)
என் தாயை உன் தாய்
என்று உரைப்பாய்
நான் ஆம் என்பேன் உன்போல்
அரக்கி கருவறை
ஜனனம் என்றால் !
அரக்கி கருவறை
ஜனனம் என்றால் !
மண்ணை தாயாய் வணங்கும்
நான் எங்கே
என் தாய்களின் கருவறுத்த
நீ எங்கே
நாளை உனக்கு
இங்கே 'ராஜ'மரியாதை !
கொலை விளையாட்டை
ரசித்த உனக்கு
இது எம்மாத்திரம் !?
தமிழன் கருவறுத்தவன்
'கை'பற்றி
குதூகலிக்க போகும் கூட்டம்.....!!
ரசிக்கத்தான் வேண்டுமோ
விளையாட்டுடன் அவனையும் ?!
எங்கே போயின
எம்வீர தினவெடுத்த தோள்கள் ?
எங்கே தொலைந்தார்கள்
ரௌத்ரம் பழகியவர்கள் ?
Posted by
Kousalya Raj
comments (34)
காணவில்லை எனது ஊர்....!?
ஆடி கூடி மகிழ்ந்து வாழ்ந்த ஊர்
பாவாடையில் ஒட்டிய மண்
இன்னும் ஈரத்துடன் வாசமாய் !
என் தாய் அழைத்த குரல்
இன்னும் கேட்கிறது காற்றில் !
என் நினைவோடும் உணர்வோடும்
வாழ்வோடும் கலந்திருந்த ஊர்
இன்று காணவில்லை....!?
மரங்கள் கோயில்கள் வீடுகள்
தெருக்கள் பள்ளிகூடங்கள் கட்டிடங்கள்
பாலங்கள் குளங்கள் கடைகள்
ஏதும் இல்லை....!?
போரால் பழிவாங்கப்பட்ட ஊர்
சாட்சியாய் பரந்த வெளி !
எல்லா நினைவுகளுக்கும்
சாட்சியமற்ற பரந்த வெளி !
மிச்சமாய்
அழிவின் சுவடுகள்
என் உறவில் நான் மட்டும் !
இன்றைய
ஒரே தேடல் என் ஊர் !
போரென்றால் அழிவு நிதர்சனம்
குண்டுவீச்சில் சிதைவு யதார்த்தம்
ஊர் காணவில்லை எப்படி ?
எங்கே போனது என் ஊர் ?
உணவுக்கு மாற்றாய்
தட்டில் நிறைந்த துயரம் !
எதுவும் இல்லாத போதும்
எல்லாம் இழந்த போதும்
வாழ்ந்தாக வேண்டுமே !!
****************************************
ஈழம்
ஆளும் கட்சிக்கு உண்ணாவிரதம்
எதிர்கட்சிக்கு அறிக்கைகள்
பத்திரிகைக்கு சில நாள் செய்திகள்
என் போன்றோருக்கு கவிதைகள் !?