Showing posts with label வாழ்த்து கவிதை. Show all posts
Showing posts with label வாழ்த்து கவிதை. Show all posts
Posted by
Kousalya Raj
comments (17)
எங்கிருந்தோ வந்து
இதோ இருக்கிறேன் என்றாய்
அன்பை வாரி இறைத்து
என் இதயம் கவர்ந்தாய்
பேசாத நாட்களிலும்
மயிலிறகாய் என் இதயம்
தொட்டு செல்வாய் !
முதல் முறை
உன் குரல் கேட்டு
மிக வியந்தேன்
என் இரு
காதில் ஒலித்தது
வீணையின் நாதமா
காயத்ரி மந்திரமா
குழந்தையாய் நீ
சிணுங்கும் சிணுங்களில்
அள்ளி கொஞ்ச தோன்றுமடி
என் செல்லமே !
உனக்கு பிறந்தநாளாம்
ஆனந்தத்தில் வாழ்த்த
வார்த்தை வரவில்லையடி
அழகு தேவதையே !
உன் தாயை
வாழ்த்துகிறேன்
நான் கேளாமல்
தங்கை என்ற பொக்கிஷத்தை
அள்ளி தந்தவள் அல்லவா !
நம்மை இணைத்தது
இணையமா
இதயமா ?!
இன்று உனக்கு பிறந்த நாள்
உன்னை வாழ்த்தவா
இந்த நாளை வாழ்த்தவா
நீ மட்டுமா பிறந்தாய்
உன்னுடன் கவிதையும் !
இல்லை நீயே கவிதை
உயிருள்ள கவிதை நீ !!
இன்று பிறந்த நாள் காணும் என் அருமை தங்கை காயத்ரியை (கவிநா) வாழ்த்துகிறேன். வாழ்வில் பல செல்வங்களை குறைவின்றி பெற்று நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
Labels:
வாழ்த்து கவிதை



