உன் தோள் சாய்ந்து
கதைகள் ஆயிரம் பேசி
விரலுடன் விரல் கோர்த்து
உனக்கினையாக நடந்து
விழியால் விழி ஊடுருவி
உயிர் தொட்டு பிடித்து
விளையாடி மகிழ்ந்து...
உன் அத்துமீறல்கள் ரசித்து
தயங்குவதாய் கொஞ்சம் நடித்து
கெஞ்சலில் அனுமதித்து
செல்ல சீண்டல் சண்டையுமாய்
முப்பொழுதுகள் மயங்க...
என் மடி சாய்த்து
தலை கோதும் வேளை
உன் அழகை விழியால் அள்ளி பருகி
என் உயிரை நிறைத்து...
இவை எல்லாம் நிகழ வேண்டுமென
கனவுகள் ஏதும்
இதுவரை
காணவில்லை
...
...
...
நிஜமாக்க முயன்று கொண்டிருக்கிறேன் !
படம் - கூகுள்
5 comments:
நனவாகட்டும்... வாழ்த்துக்கள்...
நன்று, அழகு
வாழ்த்துக்கள்
விஜய்
நல்லாயிருக்கு..
:-)
@@திண்டுக்கல் தனபாலன்...
நன்றிகள்.
@@விஜய்...
நன்றி.
@@அன்பு...
நன்றி அன்பு.
அருமை...
கவிதை வரிகள் நனவாக வாழ்த்துக்கள்.
Post a Comment