இருவரும் விடை பெறுவோம்
பிரிவிற்காக , ஒருவரிடம் இருந்து ஒருவர்...!
காதுகளுக்குள் கேட்ட
உன் குரலின் இனிய ரகசியங்களை,
சிலிர்ப்பை, வானத்தில் எறிந்து விட்டேன்...!
உனது பாடல்களை,
கானல் வெளியில் மிதக்க விட்டிருக்கிறேன்....!
முதன்முதல் நீ தந்த முத்தத்தை,
ஒரு உணவாக சாப்பிட்டாகிவிட்டது!
எதுவுமில்லை உன் அடையாளங்கள்!!?
ஆனால் என்னை கொஞ்சி அழைத்த கணங்கள்
நினைவெல்லாம் வண்ணத்துபூச்சியாய்
பறந்து திரிவதை
எப்படி கொல்வது...?
***********************************************************************************
இனி
கவிதைஎழுத கூடாது
உன்னைஎண்ணி.....
சபதம்எடுக்கிறேன்
கவிதை
உன்னை
சபதம்
மறந்து விடுகிறது
32 comments:
////இனி
கவிதை எழுத கூடாது
உன்னை எண்ணி.....
சபதம் எடுக்கிறேன்
நிதமும் !///
ஏங்க என்ன ஆச்சு..????
கவிதை அழகா எழுதுறீங்க..
ஏன் இந்த திடீர் முடிவு..?????
//இருவரும் விடை பெறுவோம்
பிரிவிற்காக , ஒருவரிடம் இருந்து ஒருவர்...!//
அப்பாட ரொம்ப சந்தோசம் சீக்கிரம் பெரிஞ்சு ஒடுங்க ..........(ஒருத்தரின் பிரிவில் என்ன சந்தோசம்ன்னு நீங்க திட்றது எனக்கு கேக்குது )
superb..............
*/இனி
கவிதை எழுத கூடாது
உன்னை எண்ணி.....
சபதம் எடுக்கிறேன்
நிதமும் !
அனைத்தும்
ஒரே நொடியில்
மறந்து விடுகிறது
உன் குரல் கேட்ட
மறு நொடியில் !!?/*
ithellam eppadi asathuringa ponga
//இனி
கவிதை எழுத கூடாது
உன்னை எண்ணி.....
சபதம் எடுக்கிறேன்
நிதமும் !
அனைத்தும்
ஒரே நொடியில்
மறந்து விடுகிறது
உன் குரல் கேட்ட
மறு நொடியில் !!?//
எல்லோரும் வருத்த படுறாங்க...........
அய்யோ எனக்கு மட்டும் ஏன் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது ............
இனி
கவிதை எழுத கூடாது
உன்னை எண்ணி.....
சபதம் எடுக்கிறேன்
நிதமும் !
அனைத்தும்
ஒரே நொடியில்
மறந்து விடுகிறது
உன் குரல் கேட்ட
மறு நொடியில் !!?////
அப்பாடா ரொம்ப சந்தோசம்.....!
Ananthi சொன்னது…
என்ன ஆச்சரியம்....ஆனந்தி இவ்வளவு சீக்கிரமா இந்த பக்கம் வந்திருக்காங்க...??
//ஏங்க என்ன ஆச்சு..????
கவிதை அழகா எழுதுறீங்க..
ஏன் இந்த திடீர் முடிவு..?????//
அதற்க்கு அடுத்த வரியை படிக்கலையா...?!! :)))
போன் பண்ண சொல்றதுக்கு இப்படி எல்லாம் ஐஸ் வைக்க வேண்டி இருக்கு ஆனந்தி ...
இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
//அப்பாட ரொம்ப சந்தோசம் சீக்கிரம் பெரிஞ்சு ஒடுங்க ..........(ஒருத்தரின் பிரிவில் என்ன சந்தோசம்ன்னு நீங்க திட்றது எனக்கு கேக்குது )//
அது மட்டும்தான் கேட்டுதா...?? நல்லா கேளுங்க..... அரிவாளை தீட்டுற சத்தமும் சேர்த்து கேட்கும்...!?
Jeyamaran...
ரசனைக்கு மகிழ்கிறேன் சகோ.
இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
//எல்லோரும் வருத்த படுறாங்க.....அய்யோ எனக்கு மட்டும் ஏன் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது ...//
ஆனா சந்தோசம் ரொம்ப நேரம் நீடிக்காது சகோ. :)
சௌந்தர் சொன்னது…
//அப்பாடா ரொம்ப சந்தோசம்.....!//
u toooooo soundar.....?!!
இனி
கவிதை எழுத கூடாது
உன்னை எண்ணி.....
சபதம் எடுக்கிறேன்
நிதமும் !
அனைத்தும்
ஒரே நொடியில்
மறந்து விடுகிறது
உன் குரல் கேட்ட
மறு நொடியில் !!?/////////
superb yaar..
//உன் குரலின் இனிய ரகசியங்களை,
சிலிர்ப்பை, வானத்தில் எறிந்து விட்டேன்...! //
மிகவும் ரசித்தேன் சகோ.. :)
//நினைவெல்லாம் வண்ணத்துபூச்சியாய்
பறந்து திரிவதை
எப்படி கொல்வது...? //
கொல்வதா? அந்த நினைப்பு கூட வேண்டாம் சகோ...
//உன் குரல் கேட்ட
மறு நொடியில் !!//
அவர் குரலே கவிதை பாடும் போது வீணாக ஏன் எழுதிக்கிட்டு?! அப்படித்தானே சகோ ;)
ஜெ.ஜெ சொன்னது…
//superb yaar.//
thank u for ur first visit.
Balaji saravana சொன்னது...
//மிகவும் ரசித்தேன் சகோ.. :)//
:))
//கொல்வதா? அந்த நினைப்பு கூட வேண்டாம் சகோ...//
உங்களுக்கு ரொம்ப இரக்கம் தான் சகோ....!
//அவர் குரலே கவிதை பாடும் போது வீணாக ஏன் எழுதிக்கிட்டு?! அப்படித்தானே சகோ //
அவர் குரல் கவிதை பாடுவது உங்களுக்கு எப்படி தெரிந்தது.....?!! :)
முதலாவதை விட ரெண்டாவது கொஞ்சம் தூக்கல்.
2 - C L A S S
1 - HIGH C L A S S
வாழ்த்துக்கள் சகோ
விஜய்
அன்பரசன் சொன்னது…
//முதலாவதை விட ரெண்டாவது கொஞ்சம் தூக்கல்.//
நல்ல ரசனை தான் சகோ.... நன்றி
விஜய் சொன்னது…
///2 - C L A S S
1 - HIGH C L A S S
வாழ்த்துக்கள் சகோ//
உங்கள் வருகைக்கு நன்றி.. உங்க கமெண்ட் எந்த கிளாஸ்ன்னு தெரியலையே.....:))
இரண்டு கவிதைகளுமே காதல் சொட்டுக்கள் !
கண்டிப்பா டாப் கிளாஸ்தான் :)
அருமையான வார்த்தைக்கோவை
என்னாச்சுங்க? திடீர்னு ஒன்றன் பின் ஒன்றாக இடுகைமழையாக இருக்கிறது? தூள் கிளப்புங்க! :-)
அருமையான கவிதை
ரெண்டும் அருமையா இருக்கு... ரெண்டாவது அருமையில் அருமை.
கவிதை எழுத கூடாது
உன்னை எண்ணி.....
சபதம் எடுக்கிறேன்
நிதமும் !
அனைத்தும்
ஒரே நொடியில்
மறந்து விடுகிறது
குரல் கேட்ட
மறு நொடியில் !!?
அருமை தோழி வாழ்த்துக்கள்
நண்பர்கள் சிலர் தங்கள் டாஷ் போர்டில் வாசல் தளம் அப்டேட் ஆகவில்லை என்று சொன்னார்கள். அதனால் அதை சரி செய்யலாம் என்று முயற்சி செய்ததின் விளைவே இந்த இடுகைகளில் அணிவகுப்பு என்று நினைக்கிறேன்.
பொறுத்தருளுக நண்பர்களே....!! :)))
romapa anllaayirukku rendume..
ஹேமா கூறியது...
//இரண்டு கவிதைகளுமே காதல் சொட்டுக்கள்//
ஹேமா சொன்னா சரிதான். நன்றி தோழி.
விஜய் கூறியது...
//கண்டிப்பா டாப் கிளாஸ்தான் :)//
சந்தோசமா ஒத்து கொள்கிறேன்.
ஸாதிகா கூறியது...
//அருமையான வார்த்தைக்கோவை//
நன்றி தோழி..
சேட்டைக்காரன் கூறியது...
//என்னாச்சுங்க? திடீர்னு ஒன்றன் பின் ஒன்றாக இடுகைமழையாக இருக்கிறது? தூள் கிளப்புங்க! :-)//
செட்டிங்க்ஸ் சரி செய்தேன்...அதனால் ஏற்பட்ட சிறு குழப்பம். உங்களின் வருகைக்கு நன்றிங்க
S Maharajan கூறியது...
//அருமையான கவிதை//
நன்றி நண்பரே.
சே.குமார் கூறியது...
//ரெண்டும் அருமையா இருக்கு... ரெண்டாவது அருமையில் அருமை.//
உங்களின் ரசனைக்கு நன்றி.
பிரஷா கூறியது...
//அருமை தோழி வாழ்த்துக்கள்//
ரசனைக்கு நன்றி தோழி
வெறும்பய கூறியது...
//romapa nallaayirukku rendume..//
வருகைக்கு மகிழ்கிறேன் சகோ.
Post a Comment