என்ன என்னமோ எண்ணங்கள்
எண்ணங்கள் எண்ணி எண்ணி
எண்ணங்களின் எண்ணிக்கை
ஏராளம்...
ஏதோ எண்ணுகிறேன்
ஏதோ பேசுகிறேன்
எதையோ செய்கிறேன்
என் எண்ணம் போல்
எதையும்
எடுக்கவும் இயலவில்லை...
எதையும்
கொடுக்கவும் மனதில்லை !
பயணத்தில் பல நிறுத்தங்கள்
ஒவ்வொன்றாய் கடக்கின்றேன்
உடன் வந்த பலரும்
நிறுத்தத்திற்கு ஒருவராய்
இறங்கி செல்ல
என் நிறுத்தம் வருவது எப்போது
தெரியாமல் தொடருகிறேன்
பயணத்தை...
எனக்கான நிறுத்தம்
எதுவென சொல்லக்கூடியவர்
என ஒருவரை கை காட்டினார்கள்
எனது எதுவென
கேட்க எத்தனிக்கும் தருணம்
மிக சரியாக
அவரின் நிறுத்தமும் வந்துவிட
இறங்கிச் சென்றே விட்டார்...!
படம்- கூகுள்
3 comments:
அருமை
வாழ்க்கையை புரிந்துகொள்வது கடினமானது. சிறப்பான கவிதை
அருமையான தெளிவான் வரிகள் ...பயணம் போலவே பயணிக்கும் கவிதை..வாழ்த்துகள்...
Post a Comment