வேண்டாம் என்று
புறந்தள்ளும் போதெல்லாம்
வலுகட்டாயமாகத் திணித்து
விடுகிறார்கள் எதையாவது
தெரியாது என
ஒப்புக் கொண்டாலும்
பிடிவாதமாய் சொல்லித்
தருகிறார்கள் தெரிந்ததையே
பிடிக்கவில்லை என
நகர்ந்தாலும் பிடித்துத்தான்
ஆகவேண்டும்
வலிந்து பிரியத்தைக் கொட்டுகிறார்கள்
முடியாது என
மறுத்தாலும் ஏன் முடியாது
முடியும் என்று சொல்
உபதேசிக்கத் தொடங்கி விடுகிறார்கள்
நான் முடிக்க நினைக்கையில்
சரியாக எவரோ ஆரம்பித்துவிட
எனதியல்புகள்
என்பதெல்லாம் இல்லாததாகி
தொலைவதா
தொலைப்பதா யோசித்துத்
தொலைப்பதற்குள்
'வா போகலாம்' கைப் பற்றி
யாரோ இழுக்க
இதோ கிளம்பிவிட்டேன்
முற்றிலுமாக
என்னைத் தவிர்த்துவிட்டு...
7 comments:
அற்புதமான கவிதை
கடைசி வரி மிக மிக அருமை
இது கவிதை மாதிரி எனச் சொல்லமுடியாது
கவிதைக்கு மாதிரி என வேண்டுமானால் சொல்லலாம்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
வணக்கம்
கவியின் வரிகள் மனதை கவர்ந்தவை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
@@Ramani S...
வந்திருந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிகள் சார்.
@@2008rupan...
அன்புடன் நன்றிகள் ரூபன்.
கௌசல்யா எங்கும் உங்களைப் பார்க்க முடியலை? நலமா? கவிதை நல்லாயிருக்கு.
வேலை ஜாஸ்தியாகிடுச்சு தோழி, நலமாக இருக்கிறேன். ஜனவரி பிறகு தொடர்ந்து வருவேன் என நினைக்கிறேன்.
மகிழ்வுடன் நன்றிகள் தோழி
வாசல் திறந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. உலவும்போது ஏதோ(!) நினைவில் திறந்து பார்த்தேன் வாசல் கதவுகளை.. ஏமாற்றமாய் இருக்கிறது.
புதிய படைப்புகள் ஏதும் இல்லாமல்.
ஆறுதலாய் இருந்ததால் வாசல் வந்தேன். நினைவுகள் நெருடியதால் மூடி வைத்தேன். இப்போது மீண்டும் வந்திருக்கிறேன். போட்ட கோலங்கள் அப்படியே இருக்கின்றன. புதியவைகள் இல்லாமல்..! :-(
Post a Comment