பிரியங்களை கோர்த்து
ஒரு வாழ்த்துச்சொல்ல
வார்த்தைகளை தேடித்தேடி
களைத்துப் போனேன் நான்
ஏதோ கையில் கிடைத்த எழுத்துக்களை
இதோ வரிகளாக்குகிறேன்
பிழை இருப்பினும்
ஏற்றுக் கொள்
அவை பிழைகள் அல்ல
என் பிரியங்கள் என...
வார்த்தைகளுக்குள்
நீ அடங்குவதும்
அதற்குள் உன்னை
அடக்குவதும்
அவ்வளவு எளிதா என்ன...
யாரோடும் ஒப்பிட நீ
அவர் போல்
இவர் போல் அல்ல
நீ வேறானவன்
என் நல்லவை அனைத்திற்கும்
வேரானவன்...
நீ நேரானவன்
முழுமைக்குள் மூழ்கிக் கிடக்கும்
நிறைவானவன்...
பேசுபவன் அல்ல நீ
பேசப்பட வேண்டியவன் !
அசாத்தியமும்
சாத்தியம் உன்னிடத்தில்...
அசாதாரணங்கள்
சாதாரணமாவது உன்னிடமே...
உலகின்
அத்தனை வாழ்த்துகளும்
ஒட்டு மொத்தமாய்
ஒன்றுச் சேர்ந்து
வாழ்த்தட்டும் இன்று !!!
போராளி பேரொளியாய்
மின்னட்டும் என்றும்...!!!!
இனிய நண்பர் தேவாவிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள் !!
(குருவை ஒருமையில் குறிப்பிட்டதற்கு பொறுத்துக் கொள்க) :-)
6 comments:
Thanks a lot Kousalya..:-)))
excellent wish
வாழ்க வளமுடன்..
@@Dheva. S...
சந்தோசமான ஒரு தருணம் இது.
நன்றி தேவா.
@@எல்.கே...
தேங்க்ஸ் கார்த்திக் :-)
@@கே.ஆர்.பி.செந்தில்...
வாழ்த்துக்கு நன்றி செந்தில்.
Post a Comment