அனல் வீசும் காட்டில்
எரிந்தும் எரியாமலும்
கசியும் புகை
காற்றில் வீசி
எறியப் பட்ட சருகுகள்
காட்டாற்றில்
பெருக்கெடுத்தோடுகிறது மணல்
கீச்சு கீச்சுக்களும்
குக்கூக்களும் கரைந்து
செவியருக்கிறது கோட்டான்களின்
ஊளைச் சத்தம்...
மாட்டிக்கொண்ட
விட்டு விலகிட முடியா
ஆலமர விழுதின் வேர் முடிச்சை
அவிழ்க்கவும் வெட்டவும் இயலும்
என்றபோதிலும்
இப்போதெனக்கு
வேண்டுமெனக்கு ஒரு தனிமை
என்னில் இருந்து
என்னைத் தவிர்த்த ஒரு தனிமை !
2 comments:
இனியது காதல்' தொடர் ????
@@kanmaniyin kadhalan...
தொடர்ந்து எழுத சந்தர்ப்பம் சரியாக அமையவில்லை. இனி எழுத முயற்சிக்கிறேன்.
நானே மறந்துவிட்ட தொடரை நினைவுப் படுத்தியமைக்கும் முதல் வருகைக்கும் என் நன்றிகள்
Post a Comment