பேச விசயம்
இல்லாத போதும்
அடிக்கடி
பேசியாகணும்
உன்னிடம்
ஏதோ ஒன்றை பற்றியாவது
இதை
அதை
எதையாவது
தேடி ஓடுகிறேன்
அந்த ஏதோ ஒன்றை
கண்டுப் பிடிக்க...!
* * *
நான் தூங்க
முதலில் உன் நினைவுகளை
தூங்க வைக்கிறேன்...
மூடிய இமைகளுக்குள்
ஓடிப் பிடித்து விளையாடுகிறது
அதுவரை தூங்குவதாய்
நடித்துக் கொண்டிருந்த
உன் நினைவுகள்..!
* * *
ஊடலில் உண்டாம் இன்பம்
சண்டைக்கு காரணம் தேடி
உன் வார்த்தைகளுக்குள் ஓடி
தேடிக் கண்டுபிடித்து
உன் நெஞ்சுக்கு நேராய்
வீசிய அடுத்த நொடி
ஐயோ உனக்கு வலிக்குமே
பதறும் என்னை பைத்தியகாரியாக்கி
நீ சிரிக்கும் வேளையில்
சமாதானப்பூ பூத்து
கூடலில் முடித்து வைக்கிறது
* * *
சூழ்ந்த மேகங்களை
வேகவேகமாய் விலக்கி
மெல்ல எட்டிப்பார்க்கிறான்
கதிரவன்...
எனக்கேன்
உன் முகம் நினைவுக்கு வரணும் ?!
* * *
பேருந்தில்
கூட்டத்தோடு
முண்டியடித்து
எனக்கு முன்னால்
ஏறிச் சென்று
துண்டுப் போட்டு
ஜன்னலோரம்
இடம் பிடித்து வைக்கிறது
உன் நினைவுகள் !
4 comments:
பேருந்தில்
கூட்டத்தோடு
முண்டியடித்து
#எனக்கு முன்னால்
ஏறிச் சென்று
துண்டுப் போட்டு
ஜன்னலோரம்
இடம் பிடித்து வைக்கிறது
உன் நினைவுகள் !#
இதைப் படிக்கையில் 'பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம் 'பாடல் நினைவுக்கு வந்தது ...தொடரட்டும் உங்கள் கவிதை பயணம் !
பேசிக் கொண்டே இருப்பதற்கு, விஷயங்களைத் தேடியது... தேடலிலும் காதல்! நினைவுகளைத் தூங்க வைக்கும் முயற்சி.. தூங்காமல் மூடிய இமைகளுக்குள் நினைவுகளின் விளையாட்டு.. நினைவுகளின் நடிப்பு - முயற்சி, தூக்கம், நடிப்பு, விளையாட்டு என எல்லாவற்றிலும் காதல்! ஊடலிலிருந்து கூடல் வரை காதல்! கதிரவனாய் காதலன் ?? பேருந்தில் - புரியவில்லை :( கொஞ்சம் விளக்கினால்....
@@ Bagawanjee KA...
உங்களின் வருகைக்கு மிக்க நன்றிகள்.
@@Shankar M...
//கதிரவனாய் காதலன் ?? பேருந்தில் - புரியவில்லை :( கொஞ்சம் விளக்கினால்....//
மிக அருமையான ரசனை ! கோபம் ஜாஸ்தி அதனால் சூரியனை பார்த்தாலும் அவன் முகம் நு சொன்னேன். :-)
ஜன்னலோரத்தில் அமர்வது எனக்கு பிடிக்கும் என்பதால் ஓடி போய் இடம் பிடித்து வைக்கிறது அவனோட நினைவுகள். அவனது நினைவுகளே எனது விருப்பத்தை நிறைவேற்றுகிறது என்றால் அவன் எப்படிபட்டவனாக இருப்பான் என்பதை குறிக்க அப்டி சொன்னேன்.
ஆமா இது என்ன... ஒரு கவிதை எழுதினா ரசிக்கணும், இப்படி கேள்வி எல்லாம் கேட்கபடாது, பதில் சொல்ல எவ்வளவு யோசிக்க வேண்டியதா இருக்கு. கவிதை எழுத கூட இப்படி யோசிக்கல ஷங்கர் :-)
Post a Comment