உன் நடையின் சப்தம்
மௌனத்தின் நிசப்தம்
இவைகூட உன் காதலை
எனக்கு
உணர்த்த தான் செய்தன.....!
நாம் பிரிந்து இருக்கும்
நேரங்களிலும் நம்
காதலை நிரூபித்தது
கனவுகள் கூடத்தான்...!
தனி தீவாய்
நான் இருக்கிறேன்
உன் நினைவு என்னும்
நீரால் சூழப்பட்டு....!
வானத்தில் பறந்து கொண்டே
சிறகுகளை சந்தேக படுகிறாய் நீ !
பூவின் மென்மையை ரசி
இதழ் இதழாய்
பிய்த்து ஆராய்ச்சி செய்யாதே ?!
****************************************
காதல் போயின் காதல் போயின்
சாதல் என்றான் பாரதி.
மறுக்கிறான்
அவன் வழி வந்தவன்
காதல் போயின் காதல் போயின்
மற்றொரு காதல்........??!
*****************************************
சிறு ஊடல் வழக்கம்போல்
கூடலாய் மாறும் என
ஏமாந்த மனம்.
எந்த அணைகட்டி தடுக்க
போகிறேன்
விழி நீரை
வழியற்று யாசிக்கிறேன்.
சாதாரணமாகி
போனதே நேசம் ??!
******************************************
9 comments:
தனி தீவாய்
நான் இருக்கிறேன்
உன் நினைவு என்னும்
நீரால் சூழப்பட்டு....!///
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க
காதல் போயின் காதல் போயின்
மற்றொரு காதல்........??!///
ரொம்ப நல்லவர் இப்படி தான் இருக்கணும்
நல்லாயிருக்குங்க கவிதை வரிகள்..
//வானத்தில் பறந்து கொண்டே
சிறகுகளை சந்தேக படுகிறாய் //
வலியின் வரிகள்..
நல்ல இருக்கு கவிதைகள்!
நல்லாருக்கு
சௌந்தர்...
//எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க//
யோசிக்கலே...அதுவா வருதுப்பா...!
//ரொம்ப நல்லவர் இப்படி தான் இருக்கணும்//
ஆமாம் ரொம்பவே நல்லவர்தான் சௌந்தர்....?!
அஹமது இர்ஷாத்...
தொடர்ந்து வருவதற்கு நன்றி சகோ.
Balaji saravana...
//வலியின் வரிகள்.//
ஆமாம் நன்றிங்க.
"உழவன்" "Uzhavan"...
உங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
Post a Comment