சரித்திரத்தை படிக்காமல்
சரித்திரமாகி போனார்கள்....!
மனிதம் ஏலம் போகும் ஊரில்
மனிதனாய் வாழ துடித்த
பேராசை....!!
மரணம் பார்த்து மரத்துப்போன
விழிகளில் வழியும் கனவையும்,
கண்ணீரையும் துடைக்க
வலுவற்று .....வாய் இருந்தும்
ஊமைகளாய்......!?
குண்டு சத்தம் பழகிய
காதுகளுக்கு 'அம்மா' என்று
அழைக்கும் குரல் கூட
அதிர்வாய்.....!?
முகமூடி அணிந்த உலகில்
எம் மக்கள் மட்டும் நிர்வாணமாய்....!
கண்ணீரும், கோபமுமே நிரந்தரமாகி
அதுவும் இன்று
வர மறுக்கிறதே.......??!
யுத்தத்தின் மிச்சங்களாய்,
உயிரை மட்டும் தாங்கி
அகதி என்ற பெயரில்
எந்த விதி செய்த சதி......??!
துப்பாக்கி ஏந்தியவனை மட்டும்
யுத்தம் ப(ழி)லி வாங்குவதில்லை,
அப்பாவிகளையும்......??!
போலி பிம்பங்கள், தனி மனித இன்ப
துன்பங்கள், சுயநலம், அரசியல்,
சினிமா என்று சுற்றிச் சுழலும்
உலகத்தில்...
எங்கள் இருப்பிடம் நிரந்தர
சாத்தியமா.....??
கேள்விகளிலேயே கழியும்
இரவுகள்...... !!?
மூன்று வேளை உணவு, இருப்பிடம், குடும்பம் என்று எல்லாம் இருந்தும் ஏதோ ஒரு குறை என்பது போல் சலிப்பாய் வாழ்வை நகர்த்துகிறோம் நாம்...... ஒரு முறை நமக்கு அருகில் நாடோடிகளுக்கு இருக்கும் சுதந்திரம் கூட இல்லாமல் அகதிகளாய் நம் ஊரின் ஒதுக்குபுறமான ஒரு இடத்தில் இருக்கும் நம் ரத்த உறவுகளுடன் சென்று பேசி அவர்களின் துயரம் தாங்கிய கண்ணீர் கதைகளை கேட்டு அறியவேண்டும்.......
"போதிமரம் வேண்டாம் அகதி முகாம் போதும் ஞானம் பெற......!!"
19 comments:
//முகமூடி அணிந்த உலகில்
எம் மக்கள் மட்டும் நிர்வாணமாய்....!
கண்ணீரும், கோபமுமே நிரந்தரமாகி
அதுவும் இன்று
வர மறுக்கிறதே.......??!
யுத்தத்தின் மிச்சங்களாய்,
உயிரை மட்டும் தாங்கி
அகதி என்ற பெயரில்
எந்த விதி செய்த சதி......??!
துப்பாக்கி ஏந்தியவனை மட்டும்
யுத்தம் ப(ழி)லி வாங்குவதில்லை,
அப்பாவிகளையும்......??!
//
வாசலில் ஒரு வலி நிறைந்த கவிதை....
யுத்தத்தின் மிச்சங்களாய்,
உயிரை மட்டும் தாங்கி///
எல்லா வரிகள் மிகவும் அருமையா இருக்கு மக்களுக்கு இது நினைவில் இருக்கா தெரியவில்லை
வரிகளில் வலிகள் தெரிகின்றன
அருமை..
//போதிமரம் வேண்டாம் அகதி முகாம் போதும் ஞானம் பெற....//
சபாஷ் ...சபாஷ் .எதனை சபாஷ் வேண்டும்னாலும் போடலாம் இந்த ஒரு வரிக்காக ....அருமையாக இருக்கிறது
///குண்டு சத்தம் பழகிய
காதுகளுக்கு 'அம்மா' என்று
அழைக்கும் குரல் கூட
அதிர்வாய்.....!?
//
ஐயோ , அப்படியே சிலிர்ப்பா இருக்குது அக்கா ..!!
super good post
//துப்பாக்கி ஏந்தியவனை மட்டும்
யுத்தம் ப(ழி)லி வாங்குவதில்லை,
அப்பாவிகளையும்......??! ///
அர்த்தமுள்ள வரிகள்...
துப்பாக்கி ஏந்தியவனை மட்டுமல்ல
எப்பாவமும் செய்யா
அப்பாவி மக்களையும்.. ஹ்ம்ம்ம்..
நல்லா இருக்குப்பா...
சே.குமார் சொன்னது…
//வாசலில் ஒரு வலி நிறைந்த கவிதை..//
ஆறாத ரணம் தரும் வலி .
நன்றி சகோ.
சௌந்தர் சொன்னது…
//எல்லா வரிகள் மிகவும் அருமையா இருக்கு மக்களுக்கு இது நினைவில் இருக்கா தெரியவில்லை//
மறக்க கூடியதா எல்லாம்....இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் அவலம்.....!
LK சொன்னது…
//வரிகளில் வலிகள் தெரிகின்றன//
:((
அன்பரசன் சொன்னது…
//அருமை..//
நன்றி சகோ.
இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
//சபாஷ் ...சபாஷ் .எதனை சபாஷ் வேண்டும்னாலும் போடலாம் இந்த ஒரு வரிக்காக ....அருமையாக இருக்கிறது//
ரொம்ப நன்றி சகோ. வருகைக்கு மகிழ்கிறேன்.
ப.செல்வக்குமார் சொன்னது…
//ஐயோ , அப்படியே சிலிர்ப்பா இருக்குது அக்கா//
உங்களின் உணர்வு பூர்வ ரசனைக்கு மகிழ்கிறேன் சகோ. நன்றி.
ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…
//super good post//
நன்றிங்க.
Ananthi சொன்னது…
//அர்த்தமுள்ள வரிகள்...
துப்பாக்கி ஏந்தியவனை மட்டுமல்ல
எப்பாவமும் செய்யா
அப்பாவி மக்களையும்.. ஹ்ம்ம்ம்..
நல்லா இருக்குப்பா...//
மீரா ஜாஸ்மின் இந்த வாசலை தொடருவது சந்தோசமா இருக்கு..... நன்றி தோழி.
சரித்திரத்தை படிக்காமல்
சரித்திரமாகி போனார்கள்....!
மனிதம் ஏலம் போகும் ஊரில்
மனிதனாய் வாழ துடித்த
பேராசை....!!
மரணம் பார்த்து மரத்துப்போன
விழிகளில் வழியும் கனவையும்,
கண்ணீரையும் துடைக்க
வலுவற்று .....வாய் இருந்தும்
ஊமைகளாய்......!?
Migavum arumai.........
மறக்க நினைத்தாலும் மறையாத காட்சிகளோடு.
போதிமரமும் மௌனமாய் அழுதபடிதான் கௌசி.
மிக அருமையான பதிவு
http://denimmohan.blogspot.com/
Post a Comment