என் செல்லமே...!



                                       
                                         சிறு சிறு குறும்புகள் ரசித்து ரசித்தே 
                                         இன்னும் குழந்தையாய் நான் இருக்க
                                         அவனோ நாளும் ஒரு வளர்ச்சி 
                                         உடலில் மட்டுமா ? மனதளவிலும் !

                                          'நைட் அம்மா வர லேட் ஆகும்,
                                          கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ' 
                                          செல்பேசியில்  நான்.
                                          'பிரட் ரோஸ்ட்,ஆம்லேட்,மில்க்
                                          ரெடி பண்ணி தம்பியும் நானும் சாப்பிட்டாச்சு'
                                          பதிலில் மனம் குளிர வைப்பதிலும் !

                                          மாலையில் வரும் என்னை வரவேற்கும் 
                                          வாசலில் நீ தெளித்திருக்கும் தண்ணீர்
                                          'நான் வந்து தெளிப்பேனே நீ ஏன்மா பண்ணின ?  
                                          'லைட் போடணும் அதான் தெளிச்சேன்மா' என்பதிலும் !

                                          புதிதாய் யாரையும் அறிமுகபடுத்தினால்  
                                          உடனே 'நல்லா இருக்கீங்களா' நீ நலம் விசாரிக்க
                                          பையனை 'நல்லா வளர்த்திருக்கீங்க' என
                                          அதை கேட்ட நீ மௌனமாய் சிரிப்பதிலும் !

                                          என் கையில் ரத்தம் பார்த்து பதறி
                                          தண்ணீர் குடிக்க வைத்து ரத்தம் துடைத்து
                                          காயத்திற்கு(?) கட்டு போட்டு விடுவாய் 
                                          பள்ளிவிட்டு வந்ததும் 'வலி சரியா போச்சா?' 
                                          விசாரிப்பதிலும்
                                         
                                          என அத்தனையிலும் தாயாக நீ தானே தெரிகிறாய் !

இன்று எங்கள் திருமணநாள், உனக்கு எப்படி இதை நினைவு படுத்த 
வார்த்தைகளை நான் தேட, கிளம்பி வாசல் வரை சென்ற நீ, திரும்பி பார்த்து சின்னதாக ஒரு சிரிப்பு சிரித்து, "இரண்டு பேரும் ஏதாவது மூவி போயிட்டு வாங்க...அப்பா, இன்னைக்காவது மறக்காம அம்மாவுக்கு பூ வாங்கி கொடுங்க...நாங்க வந்ததும் ஈவினிங் வெளில போகலாம், ரெஸ்டாரன்ட்ல நைட் டின்னர், ஒ.கே வா ?! சந்தோசமா இருங்க...திருமணநாள் வாழ்த்துகள் !' 


வாழ்த்தி விட்டு இதோ கிளம்பிவிட்டாய் பள்ளிக்கு...! 


உன்னை பார்த்து பொடியனும் " சரி சரி நல்லா இருங்க...!" என்று ஆசிர்வதிப்பது போல் கைகளை உயர்த்தி சொல்லிவிட்டு கிளம்ப 'இன்று விடுமுறை நாளாய் இருந்தால் நல்லா இருக்குமே' யோசனையில் இருவரும் உள்ளே வர மனமின்றி வாசலில் அமர்ந்துவிட்டோம்.






14 comments:

அருமையான......
உணர்வு ..பூர்வமான
கவிதை ...
அம்புட்டு அழகான வார்த்தைகள் ...
வேறு என்ன சொல்ல ....
வாழ்த்துக்கள் .
யானைக்குட்டி

 

அருமையான......
உணர்வு ..பூர்வமான
கவிதை ...
அம்புட்டு அழகான வார்த்தைகள் ...
வேறு என்ன சொல்ல ....
என்னகு வேறு வார்த்தை தெரியவில்லை ...
வாழ்த்துக்கள் .வாழ்த்துக்கள்
யானைக்குட்டி

 

குழைந்தைக்கு ஒரு கவிதை சூப்பரா இருக்கு கௌசல்யா, உங்களுக்கு என் மனமார்ந்த திருமண தினம் வாழ்த்துக்கள்.....

 

ஆமா எங்களுக்கு கேக்கெல்லாம் கிடையாதா...?

 

@@ MANO நாஞ்சில் மனோ கூறியது...

//ஆமா எங்களுக்கு கேக்கெல்லாம் கிடையாதா...?//

அது எப்படி மனோ,இங்க நடந்தது அதுக்குள்ளே பஹ்ரைன் வரை போச்சு...!?? ம்...ஒன்னும் புரியல !!

கண்டிப்பா அடுத்து நெல்லை வாங்க...வசமா, இல்ல இல்ல நல்லா கேக் கொடுத்து கவனிசிடுறேன்.

கவிதைன்னு சொன்னதுக்கு நன்றிகள் :))

 

கவிதை அருமை.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
vgk

 

பொறுப்பான மகள்...

 

மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

 

பொறுப்பான பாசமான பிள்ளைங்க தான். ஆனால் இன்னைக்கவது அம்மாவுக்கு பூ வாங்கி கொடுங்கன்னு சொல்வதைப்பார்த்தால் அவர்தான்......????

 

உங்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். அன்புக்குழந்தைகளுக்கு என் ஆசிகள். என் மகளுக்காகவும் இதுபோல் ஒன்று இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதி அவள் பிறந்தநாள் பரிசாய் அளித்தேன். உங்கள் உணர்வுகளை என்னால் உணரமுடிகிறது. இந்த அன்பும் பாசமும் என்றும் நிலைத்திருக்க வாழ்த்துகிறேன்.

 

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் (belated)...

கவிதை யதார்த்தம்...

 

கவிதை யதார்த்தம்...

 

super .....thinking of my amma