இருட்டடிப்பு செய்யப்பட்ட
பக்கங்களில் தவறியும்
தோல்விகள்
பதிவு செய்யபடுவதில்லை
வெறும் எழுத்துக்கள்
வலியின் கனத்தை
முழுமையாய்
உணர்த்தாத போது!?
புதுவிடியலில்
முழுமையாய்
உணர்த்தாத போது!?
புதுவிடியலில்
முதல்நாளின் விடியல்
ஏனோ காணாமல்
போய்விடுகிறது !
காய்ந்த இலைகளை
உதிர்த்த மரம்
உயிர்ப்பிலை
உதிர்க்கலாம்
புயல் வீசினால்...
நறுமணம் வீசிய
கடந்த காலம்...
வாசமற்ற
நிகழ்காலம்...
எதிர்பார்ப்பில்
ஏனோ காணாமல்
போய்விடுகிறது !
காய்ந்த இலைகளை
உதிர்த்த மரம்
உயிர்ப்பிலை
உதிர்க்கலாம்
புயல் வீசினால்...
நறுமணம் வீசிய
கடந்த காலம்...
வாசமற்ற
நிகழ்காலம்...
எதிர்பார்ப்பில்
எதிர்காலம்!?
மறந்தே போனது
இறந்த காலத்திய
நினைவுகள்...
தற்கால நிகழ்வுகள்
நினைவுகள்...
தற்கால நிகழ்வுகள்
கிழித்து போட்டு விட்டதால்...
முடிவுறா முடிவுகள்
முன்னறிவிப்பின்றி
முடிக்கப்பட்டே
முடிவுறும்...
முடிக்கப்பட்டே
முடிவுறும்...
முற்றுப்புள்ளிகள்
இருக்கின்றனவே...!?
படம் - நன்றி கூகுள்
18 comments:
//நறுமணம் வீசிய
கடந்த காலம்...
வாசமற்ற
நிகழ்காலம்...
எதிர்பார்ப்பில்
எதிர்காலம்!?//
அருமையோ அருமை.
பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.
நன்றிகள்.
vgk
நறுமணம் வீசிய
கடந்த காலம்...
வாசமற்ற
நிகழ்காலம்...
எதிர்பார்ப்பில்
எதிர்காலம்!?//
நிதர்சனமான வரிகள்......
அருமை அருமை கவிதை மழை அருமை...!!!!
முற்றுப்புள்ளிகள் சிறு கோடு இழுக்கப் பட்டால் அரைப்புள்ளி
அட்டகாசமான கவிதை! - இது ஒரு வழமையான, டெம்ப்ளேட்டான வார்த்தையாக இருக்கலாம்....இருந்தாலும் என் உணர்வினை வேறுமாதிரி வெளிப்படுத்த முடியவில்லை என்பதால்.....அருமை!
அருமை.
@வை.கோபாலகிருஷ்ணன்...
மிக்க நன்றிகள்
@ MANO நாஞ்சில் மனோ...
நன்றி மனோ
@@ suryajeeva கூறியது...
//முற்றுப்புள்ளிகள் சிறு கோடு இழுக்கப் பட்டால் அரைப்புள்ளி//
இது நல்லா இருக்கே :))
மிக்க நன்றிங்க.
@@ ஜீ... கூறியது...
// இது ஒரு வழமையான, டெம்ப்ளேட்டான வார்த்தையாக இருக்கலாம்....இருந்தாலும் என் உணர்வினை வேறுமாதிரி வெளிப்படுத்த முடியவில்லை என்பதால்//
டெம்பிளேட் அப்படி இப்படி எல்லாம் நான் பார்க்க மாட்டேங்க. வருகை ஒன்றே எனக்கு மகிழ்ச்சி.
நன்றி ஜீ.
@ Rathnavel...
நன்றிங்க ஐயா
நல்லாயிருக்கு மேடம்...
நறுமணம் வீசிய
கடந்த காலம்...
வாசமற்ற
நிகழ்காலம்...
எதிர்பார்ப்பில்
எதிர்காலம்!?//
வாசமில்லா கடந்த காலம்
வாசம் இருந்து இல்லாமலும் நிகழ்காலம்
வாசம் தேடும் எதிர்காலம்
முற்றுபுள்ளிகள் இல்லை ... தொடர் புள்ளிகள் இருக்கின்றன....................
@ Philosophy Prabhakaran...
நன்றி பிரபாகரன்
@@ மாய உலகம் கூறியது...
//வாசமில்லா கடந்த காலம்
வாசம் இருந்து இல்லாமலும் நிகழ்காலம்
வாசம் தேடும் எதிர்காலம்//
அது சரி :)
//முற்றுபுள்ளிகள் இல்லை ... தொடர் புள்ளிகள் இருக்கின்றன........//
புரிஞ்சிடுச்சு :)
நன்றி மாய உலகம்.
அருமையோ அருமை.
பாராட்டுக்கள்.
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.
@@ kobiraj...
வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிகள்.
சே.குமார்...
நன்றி குமார்.
முற்றுப்புள்ளி அருகே இன்னும் சில புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே.....
Post a Comment