'காத்திருக்கிறேன்' என்றேன்
'அதுக்கென்ன' என்கிறாய்
'உனக்காக' என்றேன்
'யாரோ நான்' என்கிறாய்
'காதலன்' என்றேன்
'உனக்கில்லை' என்றாய்
'காதல்' என்றேன்
'உன்னிடமில்லை' என்றாய்
'பரவாயில்லை பேசு' என்றேன்
'பிடிக்கவில்லை' என்றாய்
'சிரித்தாயே' என்றேன்
'உன்னை பார்த்து இல்லை' என்றாய்
'திமிர் கூடி போச்சு' என்றேன்
'எப்ப குறைந்தது' என்கிறாய் !
பொறுமை இழந்து
மௌன மடியில் நான் விழ...
...
...
...
'என்ன சைலென்ட்' என்றாய்
'வார்த்தை தீர்ந்தது' என்றேன்
'பரவாயில்லை பேசு' என்றாய்
'போகிறேன்' என்றேன்
'என்னை விட்டா' என்றாய்
சிரித்தேன்...
'சிதைக்காதே' என்கிறாய் !
போடா! நீயும் உன் காதலும் !!
தொடருகிறது உரை(?)யாடல்...
9 comments:
மிகவும் அருமையான கவிதை, காதலர்களுக்கிடையே இருக்கும் அழகிய காதலை வெளிப்படுத்தும் விதத்தில் இருந்தது... நன்றி..
தமிழ்மணம்-2; இண்ட்லி-2:
இன்று என் வலையில்:உங்களை ஹாக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள-பாகம் 2
http://vigneshms.blogspot.com/2011/10/blog-post_02.html
வந்து பார்த்து கருத்துக்களை சொல்லுங்கள்.
காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை, கொஞ்சம் வாழ்க்கையின் வழிகளையும் பதிவு செய்யுங்களேன்
செல்லமாகப் ’போடா’வில் முடிந்த அழகான காதல் கவிதை ரொம்ப நல்லா இருக்கு! பாராட்டுக்கள்.
@@ Heart Rider...
உங்களின் முதல் வரவிற்கு மிக்க நன்றிகள். தங்களின் தளம் அவசியம் சென்று பார்கிறேன்.
@@ suryajeeva கூறியது...
//காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை, கொஞ்சம் வாழ்க்கையின் வழிகளையும் பதிவு செய்யுங்களேன்//
//வழிகளையும்//
'வலிகளையும்' என்பதை தானே சொல்கிறீர்கள் ?
சூர்யாஜீவா உங்களின் கருத்தை ஏற்கிறேன். எனது மற்றொரு தளம் மனதோடு மட்டும் பற்றி தெரியும் தானே ?! அதில் விழிப்புணர்வுக்கு என்று நான் மிக விரும்பி ஈடுபாட்டுடன் பதிவுகள் எழுதிவருகிறேன். நேரம் இருப்பின் படித்து பாருங்கள். நீங்கள் சொல்கிற வலிகள் அங்கே இருக்கின்றன வார்த்தைகளாக...!!
ஆனால் இந்த வாசல் தளம் சந்தோசமான உணர்வுகள்,கோபங்கள், ஆதங்கங்கள், இயலாமைகள் போன்றவற்றை எனக்கு தெரிந்த விதத்தில் கவி வரிகளாக எழுதி வருகிறேன்.காதல் என்பது அற்புதமான ஒரு உணர்வு. வாழ்கையை இனிமையாக இளமையாக வைத்திருப்பதில் இதன் பங்கு அலாதி தான்.
வெளிப்படையாக உங்கள் கருத்தை சொன்ன விதம் மகிழ்கிறேன். நன்றிகள்
@@ Rathnavel...
நன்றிகள்
@@ வை.கோபாலகிருஷ்ணன்...
நன்றிகள்
@@ FOOD...
நன்றி அண்ணா
மிகவும் அருமையான கவிதை.
Awesome !!!
Kathal Basai !!!
ஒவ்வொரு வரியிலும் காதல் இனிக்கிறது
அருமையான வரிகள்
Post a Comment