Showing posts with label உரையாடல்.. Show all posts
Showing posts with label உரையாடல்.. Show all posts
Posted by
Kousalya Raj
comments (10)
'காத்திருக்கிறேன்' என்றேன்
'அதுக்கென்ன' என்கிறாய்
'உனக்காக' என்றேன்
'யாரோ நான்' என்கிறாய்
'காதலன்' என்றேன்
'உனக்கில்லை' என்றாய்
'காதல்' என்றேன்
'உன்னிடமில்லை' என்றாய்
'பரவாயில்லை பேசு' என்றேன்
'பிடிக்கவில்லை' என்றாய்
'சிரித்தாயே' என்றேன்
'உன்னை பார்த்து இல்லை' என்றாய்
'திமிர் கூடி போச்சு' என்றேன்
'எப்ப குறைந்தது' என்கிறாய் !
பொறுமை இழந்து
மௌன மடியில் நான் விழ...
...
...
...
'என்ன சைலென்ட்' என்றாய்
'வார்த்தை தீர்ந்தது' என்றேன்
'பரவாயில்லை பேசு' என்றாய்
'போகிறேன்' என்றேன்
'என்னை விட்டா' என்றாய்
சிரித்தேன்...
'சிதைக்காதே' என்கிறாய் !
போடா! நீயும் உன் காதலும் !!
தொடருகிறது உரை(?)யாடல்...



