புனிதம் புரியா புனிதர்கள்
மெய் கொண்டு வாழாமல்
பொய் கொண்டு வாழும் பித்தர்கள்
நல்லவனாம்
பொய் கொண்டு வாழும் பித்தர்கள்
நல்லவனாம்
நம்பக்கூடிய பொய்கள் துணைக்கு!
உத்தமனாம்
உதறி தள்ளபடும் உண்மை! இங்கும் அங்கும்
எதையோ தேடி ஓடி அலைவது
நிச்சயமாக
தொலைந்து போன மனிதத்தை அல்ல...
எதையோ தேடி ஓடி அலைவது
நிச்சயமாக
தொலைந்து போன மனிதத்தை அல்ல...
அரிதாரம் பூசாத வேடதாரிகள்!
பகலில் பல வேடம்
இரவிலோ இருவேடம்
ஒன்று நல்லவன்
மற்றொன்று மிக நல்லவன் !
பொய்கள் பல நிறமாம்
வெள்ளை பச்சை நீலம் என...
உண்மையின் நிறத்தை
மறக்கடித்து விட்டது
மனிதர்களின் பச்சோந்திதனம் !?
சூழ்ச்சியால் தோற்று
புதைக்கப்பட்ட உண்மைகள்
வெற்றிகளிப்பில்
நம்பிக்கை துரோகங்கள்
உண்மையின் நிறத்தை
மறக்கடித்து விட்டது
மனிதர்களின் பச்சோந்திதனம் !?
சூழ்ச்சியால் தோற்று
புதைக்கப்பட்ட உண்மைகள்
வெற்றிகளிப்பில்
நம்பிக்கை துரோகங்கள்
பொய் புரட்டு துரோகம் உயிர்த்தெழ
அஸ்தமித்து போனது அன்பு பாசம் நட்பு !?
25 comments:
சூழ்ச்சியால் தோற்று
புதைக்கப்பட்ட உண்மைகள்
வெற்றிகளிப்பில்
நம்பிக்கை துரோகங்கள்//
மானங்கெட்ட மனிதர்களின் மனங்களை மன்றாடி சவுக்கால அடித்த ஆதங்க வார்த்தைகள் கவிதையாய்... கலக்கல்
அரிதாரம் பூசாத வேடதாரிகள்!
அழகாகச் சொன்னீர்கள்..
இனிய காலை வணக்கம் அக்காச்சி,
நலமா?
மனித மனங்களின் உணர்வுகளிற்கமைவாக பொய்யும் பொய்க் கோலம் பூண்டு கொள்ளும் என்பதனை அழகுறச் சொல்லி நிற்கிறது கவிதை.
நம் வாழ்வில் நாம் ஏமாந்தது ஒரு சிலரிடம் மட்டுமே, அதையே நினைத்து கொண்டு இருக்காமல் நம்மை பல சமயங்களில் நம் உதவி பாராமல் காப்பாற்றிய பலரை நினைத்துக் கொள்ளுங்கள், மனிதம் தெரியும்... என் முதுகில் குத்தியவர்கள் நூற்றுக்கு இருபது பேர், ஆனால் மீதி என்பது சதவிகிதம் நினைவுக்கு வருவதில்லை... அதுவும் மனிதமே...
ஆதங்க வார்த்தைகள் கவிதையாய்...
பொய் அல்ல; நிஜம்.
பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.
அருமை.
பயங்கரமா சாட்டையை சுழட்டி இருக்கீங்க...!!!
உண்மைதான் கவுசல்யா, உலகில் அன்பு இல்லாத மனிதர்கள் பெருகிவிட்டனர்!!!!
//உண்மையின் நிறத்தை
மறக்கடித்து விட்டது
மனிதர்களின் பச்சோந்திதனம் !?//
உண்மை வரிகள்
கவிதை கலக்கல்!
ம்...அனுபவக் கவிதை கௌசி !
@@ மாய உலகம் கூறியது...
கவிதையை உள்வாங்கிய உணர்விற்கு நன்றிகள்.
@@ முனைவர்.இரா.குணசீலன்...
நன்றிகள்
@@ நிரூபன் கூறியது...
//மனித மனங்களின் உணர்வுகளிற்கமைவாக பொய்யும் பொய்க் கோலம் பூண்டு கொள்ளும்//
உங்களுக்கு கருத்திட சொல்லியா கொடுக்கணும் ?! :)
உங்களின் புரிதல்கள் தனி சிறப்பு நிரூபன்.
நன்றிகள்
@@ suryajeeva கூறியது...
// நம்மை பல சமயங்களில் நம் உதவி பாராமல் காப்பாற்றிய பலரை நினைத்துக் கொள்ளுங்கள், மனிதம் தெரியும்//
உண்மைதான். அப்போது மனிதம் மறந்தவர்களை மன்னிக்ககூடிய மனதும் வந்துவிடும்.
//என் முதுகில் குத்தியவர்கள் நூற்றுக்கு இருபது பேர், ஆனால் மீதி என்பது சதவிகிதம் நினைவுக்கு வருவதில்லை... அதுவும் மனிதமே...//
இதை மட்டுமே நினைத்து கொண்டிருந்தால் நாம் வாழ்வது எப்படி? மிக சரி.
இது போன்ற சிலவும் வாழ்க்கையில் உண்டு என்பதை வெளிபடுத்தவே எனது இந்த கவிதை.
கருதிட்டமைக்கு நன்றிகள் சூர்யா
@@ சே.குமார்...
நன்றிகள் குமார்.
@@ வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...
//பொய் அல்ல; நிஜம்.//
நன்றிகள்
@@ நண்டு @நொரண்டு -ஈரோடு...
நன்றிகள்
வேதனையான உண்மைகள் .......கவிதை அருமை !
@@ MANO நாஞ்சில் மனோ கூறியது...
//உலகில் அன்பு இல்லாத மனிதர்கள் பெருகிவிட்டனர்!!!!//
சுயநலம் மிகுந்ததால் அன்பு குறைந்துவிட்டதா ?
இன்றைய சூழலில் நமக்கு கிடைத்த அன்பானவர்களை தவறவிடாமல் பார்த்து கொள்வது மிக முக்கியம்.
நன்றிகள் மனோ.
@@ ஆமினா...
நன்றி தோழி.
@@ விக்கியுலகம்...
வருகைக்கும் உணர்விற்கும் நன்றிகள்.
@@ ஹேமா கூறியது...
உங்களை இந்த பக்கம் பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது..? நலம் தானே தோழி...?
//ம்...அனுபவக் கவிதை கௌசி !//
அட இது என்னபா ? :)
இது கவிதை தான். அனுபவம் இல்லை.
நீண்டநாள் பிறகான இந்த வருகைக்கு நன்றிகள் ஹேமா
@@ koodal bala...
நலமா பாலா ?
உணர்விற்கு நன்றி.
Post a Comment