இயல்பு...!

                                           
                                                    "நீயின்றி நானில்லை" 
                                                     - தத்துவங்கள்
                                                    
                                                     "நீ செத்துட்டா நானும் செத்துடுவேன்" 
                                                     - பிதற்றல்கள் 
                                                    
                                                     "அடுத்த ஜென்மத்திலும் பிரிவில்லை" 
                                                      - சத்தியங்கள்

                                                      எல்லாம் மறந்து போகின்றன !
                                                        
                                                      புதிதாய் மற்றொரு உறவு !


                                                      * * * * * * * 

                                                      மீளா இறப்புகள்  
                                                      மீளா துயரங்கள் 
                                                      ஆற்றமுடியாப் பிரிவுகள்
                                                      சோகங்கள்
                                                      வேதனைகள்
                                                      இழப்புகள்

                                                      எல்லாம் மறக்கடிக்கபட்டு
                                                      விடுகின்றன...

                                                      சில நாட்களில்...
                                                      சில வாரங்களில்...
                                                      சில மாதங்களில்...

                                                      யதார்த்த உலகில் 
                                                      வாழ்க்கை
                                                      வெகு இயல்பாகிவிடுகிறது !!










படங்கள் - நன்றி கூகுள்

15 comments:

வெகு இயல்பாகி வாழ்பவன் உலகோடு ஐக்கியமாகி சாதனைகள் புரியலாம் அல்லவா! ஒன்றையே நினைத்துத் துன்புறுபவன் வேதனைப் பட்டு மாண்டு விடவும் கூடும். பணி தொடர வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

 

"மரணமுடன் கை கோர்த்து
நீ
என்னை
விட்டு விட்டு
சென்று விட்டாய்...
நான்
மட்டும் உன்னையே
நினைத்துக் கொண்டிருக்க வேண்டுமா?
போடி/போடா"

என்று யாராவது கவிதை எழுத போகிறார்கள்...

 

நல்ல கவிதை ...பெரும்பாலானோர் வாழ்க்கை இப்படித்தான் உள்ளது ....

 

"நீ செத்துட்டா நானும் செத்துடுவேன்"
- பிதற்றல்கள்

"அடுத்த ஜென்மத்திலும் பிரிவில்லை"
- சத்தியங்கள்

எல்லாம் மறந்து போகின்றன !//

சும்மா நச்'சின்னு சொல்லிட்டீங்க கவிதை அருமை தோழி...!!!

 

யதார்த்த உலகில்
வாழ்க்கை
வெகு இயல்பாகிவிடுகிறது !!

உண்மைதான்

 

உலக இயல்பைப்பற்றி வெகு இயல்பாய்ச் சொல்லி விட்டீர்கள்.

ஆம்; எல்லாமே கொஞ்சநாட்களில் மறந்து போய், இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டியதாகத்தான் உள்ளன.

அதுவும் நன்மைக்கே தான். இல்லாவிட்டால் ஒரு இழப்பிலிருந்து மீண்டு வரமுடியாமல் எப்போதும் எல்லோரும் துக்கத்திலேயே உழல வேண்டியதாகிவிடும்.

நாளடைவில் துக்கத்தை மறப்பதும் நாம் பெற்றதோர் வரம் என்றே சொல்ல வேண்டும்.

 

@@ kavithai (kovaikkavi) கூறியது...

//வெகு இயல்பாகி வாழ்பவன் உலகோடு ஐக்கியமாகி சாதனைகள் புரியலாம் அல்லவா!//

நிச்சயமாக சந்தேகமென்ன ?!

// ஒன்றையே நினைத்துத் துன்புறுபவன் வேதனைப் பட்டு மாண்டு விடவும் கூடும்//

நீங்கள் கருத்து சொல்லவில்லை, பாடமே கற்பித்துவிட்டீர்கள். மிக நன்று. மகிழ்கிறேன்

மிக்க நன்றிகள்.

 

@@ suryajeeva கூறியது...

//"மரணமுடன் கை கோர்த்து
நீ
என்னை
விட்டு விட்டு
சென்று விட்டாய்...
நான்
மட்டும் உன்னையே
நினைத்துக் கொண்டிருக்க வேண்டுமா?
போடி/போடா"//

//என்று யாராவது கவிதை எழுத போகிறார்கள்...//

யாரோவா இதோ நீங்க எழுதியாச்சே ! எப்படிங்க இப்படி எல்லாம்...! செம சூப்பர் !!

கவிதைக்கு என் பாராட்டுகளும் நன்றிகளும் !

 

@@ koodal bala கூறியது...

//பெரும்பாலானோர் வாழ்க்கை இப்படித்தான் உள்ளது ...//

உண்மைதான். நன்றி பாலா.

 

@@ MANO நாஞ்சில் மனோ...

ரசனைக்கு மிக்க நன்றிகள் மனோ.

 

@@ Lakshmi...

நன்றிகள் லக்ஷ்மிமா.

 

@@ வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...

//அதுவும் நன்மைக்கே தான். இல்லாவிட்டால் ஒரு இழப்பிலிருந்து மீண்டு வரமுடியாமல் எப்போதும் எல்லோரும் துக்கத்திலேயே உழல வேண்டியதாகிவிடும்.//

கண்டிப்பாக நன்மைதான். சில மறதியும் நல்லதே என்பதை போல.

கருதிட்டமைக்கு மிக்க நன்றிகள்.

 

வழக்கம் போல் நச் நச்...

 

வழக்கம் போல நல்ல கவிதை.