புல்வெளியில்
அமரும்போதெல்லாம்
அனிச்சையாய் விரல்கள்
புல் பிடுங்கி அடி கடிக்க
ருசி ரசிக்கும் மனது !
பேச்சின் ஊடாய்
உன் அழகு சிரிப்பு
அனிச்சையாய் கண்
சேர்த்து அள்ள
ரசித்து ருசிக்கிறது
என் இதயம்
சேர்த்து அள்ள
ரசித்து ருசிக்கிறது
என் இதயம்
சிரிக்க மறக்காதே
அது துடிக்க
மறந்துவிடக்கூடும் !
மறந்துவிடக்கூடும் !
* * * * * * *
உன்னில் என்னை மீட்டெடுக்க
எடுத்த பிரயாசங்கள்
அனைத்தையும் வென்று
இன்னும் ஆழத்தில் புதைத்தே விட்டது
உன் புன்னகை !
தூக்கத்தில் சிரிக்கும்
குழந்தையின்
பரிசுத்தமான பளிங்கு சிரிப்பு
உன் புன்னகை !
எதையும் சொல்லாதது போல்
உன் வார்த்தைகள்
எல்லாவற்றையும் சொன்னது போல்
உன் புன்னகை !
மௌனம், கோபம், சண்டை
எல்லாம் நொடியில் தூக்கி போட்டு
என் தலையில் தட்டி பரிகசிக்கும்
கர்வகிரீடம் உன் புன்னகை !
8 comments:
''...மௌனம், கோபம், சண்டை
எல்லாம் நொடியில் தூக்கி போட்டு
என் தலையில் தட்டி பரிகசிக்கும்
கர்வகிரீடம் உன் புன்னகை !...
இவ் வரிகள் எனக்கு மிகப் பிடித்தது. நல்ல கவிதை! வாழ்த்துகள் சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.
//இதழ்கள் திறவாமல்
ஒரு கவிதை
உன் புன்னகை !!//
இப்படி எழுதிவிட்டு அழகாக ஒரு ரோஜா படத்தையும் போட்டு அசத்திட்டீங்க. வாழ்த்துக்கள்.
//தூக்கத்தில் சிரிக்கும் குழந்தையின் பரிசுத்தமான பளிங்கு சிரிப்பு உன் புன்னகை !//
//எதையும் சொல்லாதது போல் உன் வார்த்தைகள் எல்லாவற்றையும் சொன்னது போல் உன் புன்னகை !//
அழகான வரிகள்.
இதழ்கள் திறவாமல்
ஒரு கவிதை
உன் புன்னகை !!//
அசத்தல் கவிதை...!!!
புன்னகையின் பல்வேறு பரிமாணங்களையும் வர்ணித்து அழகாயொரு கவிதை. ஒவ்வொரு வரியிலும் காதல் அழகாய் வெளிப்படுகிறது. பாராட்டுக்கள்.
வணக்கம், இன்னைக்குத்தான் உங்க பதிவுல உள்ள நிறைய கவிதைகள் படிச்சேன், காதல் தலைப்புல இருக்குற எல்லா கவிதையும் படிச்சேன், ரொம்ப அருமையா இருந்திச்சு,
எதையும் சொல்லாதது போல்
உன் வார்த்தைகள்
எல்லாவற்றையும் சொன்னது போல்
உன் புன்னகை !//
இந்த வரி ஒண்ணு போதும், 10 15 தடவை இந்த வரியவே படிச்சுட்டு இருக்கேன், ரொம்ப ஈர்த்திடுச்சு...
அருமை .
வணக்கம் அக்காச்சி,
புன்னகையில் தொலைந்து போன உள்ளத்தின் உணர்வுகளை உங்களின் இக் கவிதை அருமையாகச் சொல்லி நிற்கிறது.
Post a Comment