விவாதங்களில்
விட்டுக்கொடுப்பதில்
முந்திக் கொள்வாய்
என் வார்த்தைகள்
உன்னை வதைப்பதை மறைத்து...
சமயங்களில்
வெட்கப்பட வைக்கிறது
அளவில்லா உன் அக்கறை
மறுபடி காய்ச்சல் வரும் நாளை
எதிர்பார்க்கிறது மனது...
பலமுறை உன் பேச்சை
அசட்டை செய்திருக்கிறேன்
'அடி அசடே' கன்னம் கிள்ளும்
விரல்கள் சொல்லும்
என் மீதான உன் அன்பை...
உன் அழைப்புகளை
தவிர்க்க முயலும்
ஒவ்வொரு முறையும்
விழிகளால் இறைஞ்சும் உன்னை
மறுதலித்தாலும்
மனமறியும்
இறுதிவரை
எனது நிழல் நீ என்பதை...!
விலகவும்
விலக்கவும்
விதிமுறை ஏது
விளக்கம் கொடுத்தாய்
விளக்கம் பெற்றும்
விளங்காமல் நிற்க்கிறேன்...
ஒரு காற்றாய்
எப்பொழுதும் சூழ்ந்திருக்கும்
உனக்காக
இதுவரை நான் ஒன்றும் செய்ததில்லை
சுவாசிப்பதை தவிர...!
படம்-நன்றி கூகுள்
3 comments:
அருமை...
நல்ல வரிகள்... அருமை...
மிகவும் அருமை....உங்கள் பகிர்வுக்கு நன்றி.....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment