தேடி அலைந்தேன்
ஒவ்வொரு இடமாக...
பின் தொடர்ந்த என் மீது
வண்ணம் உதிர்த்து வானில் பறந்தது
ஒரு வண்ணத்துபூச்சி...!
அருகில் சென்ற என் மீது
பழுத்த இலைகளை வீசி எறிந்தது
காற்றுக்கு தலை அசைத்த ஒரு மரம்...!
விரைந்து நெருங்கிய என் மீது
சாம்பலை அள்ளி பூசியது
கனல் கக்கிய ஒரு எரிமலை...!
நதி கரையில் காலடி தடம்
கண்டுத் தொடர்ந்தேன்
தடம் நதிக்குள் சென்று முடிந்திருந்தது...
ஓடும் நீரில் முகம் தெரிய உற்று நோக்கினேன்
முகம் நழுவத் தொடங்கியது...
ஐயோவென்று நதியுடன் தொடர்ந்து ஓடினேன்...
அது என்னை ஒரு பாலை வனத்தில்
கொண்டுபோய் சேர்த்தது...
மணலை அள்ளி எண்ணி பார்த்தேன்
அங்கே உன் வருகை பதிவு
எண்ண முடியாத அளவில் இருந்தது...
களைத்து
வீடு திரும்பி
பூட்டை விடுவித்து
என் அறை கதவு திறந்து
உள்ளே சென்றேன்...
அங்கே
பஞ்ச பூதங்கள் மீதேறி
அமர்ந்திருந்தாய்
வெற்றிக் களிப்புடன்...!!
படம் -நன்றி கூகுள்
4 comments:
ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
//அங்கே
பஞ்ச பூதங்கள் மீதேறி
அமர்ந்திருந்தாய்
வெற்றிக் களிப்புடன்...!!//
புரியலையே!!
கவிதை அருமை.
ரசித்தேன்.
இனிய ஆங்கில புத்தாண்டு தின நல் வாழ்த்துக்கள்.
Post a Comment